கன்னியாகுமரி: 2 நாள் சுற்றுலாவை இனிமையாக கழிக்க என்ன செய்ய வேண்டும்?- பட்ஜெட் டூர் பிளான்!

தமிழகத்தில் அதிகம் சுற்றுலாப்பயணிகளை குவிக்கும் மாவட்டம் கன்னியாக்குமரி. ஆனாலும் கன்னியாக்குமரி வரும் பலருக்கு இங்கு என்னென்ன இடங்கள் இருக்கின்றன? எவற்றையெல்லாம் அவசியம் பார்க்க வேண்டும் என்பதுத் தெரியாது.
கன்னியாகுமரி: 2 நாட்களை இனிமையாக கழிக்க என்ன செய்யலாம்? - பட்ஜெட் டூர் பிளான்!
கன்னியாகுமரி: 2 நாட்களை இனிமையாக கழிக்க என்ன செய்யலாம்? - பட்ஜெட் டூர் பிளான்!Twitter

இந்திய பெருநிலத்தின் தென்கோடியான கன்னியாகுமரிக்கு அனைவருமே நிச்சயம் பயணம் மேற்கொள்ள வேண்டும். 

கன்னியாகுமரிக்கு முக்கூடல் என்ற பெயரும் உண்டு என்பதை அறிவோம். அங்கே இந்தியாவின் மூன்று கடல்களும் சந்திக்கின்றன. மூன்று கடல்வழியாகவும் சூரியன் எழுவதை இங்குப் பார்க்கலாம்.

கன்னியாகுமரி குடும்பத்துடன் சுற்றுலா வருவதற்கு ஏற்ற இடமாகும். இரண்டு நாட்கள் இனிமையாக கடக்க கன்னியாகுமரியில் எங்கெங்கே செல்லலாம் எந்தெந்த இடங்களைப் பார்க்கலாம் எனத் தெரிந்துகொள்ளுங்கள்...

கன்னியாகுமரி கடற்கரை

எல்லாருமே கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்ப்பது குறித்துப் பேசுகிறார்கள். பல ஆண்டுகளாக, ஏன் நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைகள் கூட கன்னியாகுமரியில் சூரியன் உதிப்பதன் அழகு பேசப்படுகிறது எனில், வாழ்நாளில் ஒருமுறையாவது நாம் கன்னியாகுமரியில் சூரியன் உதிப்பதைப் பார்க்க வேண்டும் தானே!

கன்னியாகுமரி கடல் கொஞ்சம் ஆக்ரோஷமாக இருப்பதாலும் அங்கு பாறைகள் நிறைந்திருப்பதாலும் குளிக்க அனுமதி இல்லை. ஆனால் கடற்கரைகளில் உலாவிக்கொண்டு சாலையோரத்து கடைகளை வேடிக்கைப்பார்த்துக்கொண்டு செல்வது நிறைவான அனுபவமாக இருக்கும்.

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை

இந்திய தத்துவ அறிஞரான விவேகானந்தரை கௌரவிக்கும் விதமாக 1892ம் ஆண்டு விவேகானதர் பாறை கட்டப்பட்டது. விவேகானந்தர் மண்டபம் மற்றும் ஸ்ரீபாத மண்டபம் என்ற இரண்டு இடங்கள் இருக்கிறது.

தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை விவேகானந்தர் பாறைக்கு படகு வசதி இருக்கிறது. கடற்கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் பாறை இருக்கிறது. 

விவேகானந்தர் பாறையைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலை இருக்கிறது. அவரது 1330 குரல்களை கௌரவிக்கும் விதமாக 133 அடிக்கு சிலை இருக்கிறது. விவேகானந்தா பாறையில் இருந்து படகில் திருவள்ளுவர் சிலைக்கு செல்லலாம். 

இந்த இடங்களுக்கு சென்றுவர காலை 6 முதல் 12 மணியாகலாம்.

மகாத்மா காந்தி நினைவு மண்டபம்

இந்துமத சடங்குகளின் படி அஸ்தியை கரைப்பதற்கு முன்னர் கலசத்தில் வைத்திருப்பர். மகாத்மாவின் அஸ்தியிருக்கும் கலசம் இந்த மண்டபத்தில் உள்ளது. 

காந்தி அவரது வாழ்நாளில் இரண்டு முறை கன்னியாக்குமரிக்கு வந்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி இந்த மண்டபத்தில் இருக்கும் துளைவழியாக காந்தியின் அஸ்தியை சூரிய வெளிச்சம் தொடும் எனக்கூறப்படுகிறது.

கன்னியாகுமரி: 2 நாட்களை இனிமையாக கழிக்க என்ன செய்யலாம்? - பட்ஜெட் டூர் பிளான்!
தாஜ்மஹால் முதல் ஈஃபிள் டவர் வரை - புகைப்படம் எடுக்க தடைசெய்யப்பட்ட சுற்றுலா இடங்கள்!

குமரியம்மன் கோவில் 

தேவி கன்னியாகுமரி என்ற கடவுளின் பெயரில் இருந்தே கன்னியாகுமரிக்கு அதன் பெயர் கிடைத்தது. குமரியம்மன் கோவில் 3000 ஆண்டுகள் பழமையானதாகும். 

இந்த கோவிலுக்குள் கேமராக்கள் அனுமதியில்லை. ஆண்கள் சட்டையை கழற்றியபின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். திருவிழா நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தெற்குவாசல் அடைக்கப்பட்டுவிடும், வடக்கு வாசல் மட்டுமே திறந்திருக்கும்.

மீனவ கிராமங்கள்

கன்னியாகுமரியில் உள்ள மீனவ கிராமங்களில் மிகவும் யதார்த்தமான வாழ்வியலையும் மீனவ மக்களின் கலாச்சாரத்தையும் பார்க்க முடியும். இந்த கிராமங்களில் உள்ள எல்லார் மனதிலும் 2004ம் ஆண்டு சுனாமி குறித்த ஆறாத வடுக்கள் உள்ளன.

இந்த இடங்களை சுற்றிப்பார்க்க மாலையாகிவிடும். 

திருப்பரப்பு நீர்வீழ்ச்சி

கோதையாற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது திருப்பரப்பு நீர்வீழ்ச்சி. கன்னியாகுமரியில் இருந்து 55 கிலோமீட்டரில் இந்த இடத்தை அடையலாம். 

இதனருகில் பேச்சிப்பாறை அணைக்கட்டு இருக்கிறது. திருப்பரப்பு அருவி வேகமாக இருக்கும் காலத்தில் குளிக்க முடியாது. இதனருகில் மகாதேவர் ஆலயம் இருக்கிறது. இது 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இங்கு வாட்டர் பார்க் திறக்கப்பட்டர்து முதல் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துவிட்டது. இங்கு நம்மால் படகு பயணம் மேற்கொள்ள முடியும். 

கன்னியாகுமரி: 2 நாட்களை இனிமையாக கழிக்க என்ன செய்யலாம்? - பட்ஜெட் டூர் பிளான்!
காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல்

மாத்தூர் தொட்டி பாலம்

கன்னியாகுமரி மாவட்டம் நீர்வளம் மிகுந்த பகுதி என்பதை அறிவோம். இங்குள்ள மக்களை வறட்சியிலிருந்து காக்கும் பொருட்டு 1966ல் கட்டப்பட்டது இந்த தொட்டிப்பாலம். 

இது ஒரு மலையில் இருந்து மற்றொரு மலைக்கு தண்ணீரை கொண்டு செல்கிறது. இதனை 28 பெரிய தூண்கள் தாங்குகின்றன. பாலமானது 7 அடி உயரமும் 7.5 அடி அகலமும் கொண்டது.

காலை 6:30 முதல் மாலை 6:30 வரை பாலம் திறந்திருக்கிறது. இது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இதுபோன்ற பாலங்களில் மிகவும் உயரமானதும் நீளமானதுமாகும். 

பதமநாபபுரம் அரண்மனை

கன்னியாகுமரியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில்  17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய மரத்தாலான அரண்மனை இது.

கேரள கட்டடகலைக்கு அடையாளமாக இருக்கக் கூடிய சில இடங்களில் இதுவும் ஒன்று. எனவே இது கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் கேரள அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த அரண்மனை மொத்தம் 7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. அரண்மனைக்குள் சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளன. குறிப்பாக தொல்லியல் பொருட்கள் மற்றும் அருங்காட்சியகம். 

கன்னியாகுமரி: 2 நாட்களை இனிமையாக கழிக்க என்ன செய்யலாம்? - பட்ஜெட் டூர் பிளான்!
சேலம் : உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் சிலைக்கு குடமுழுக்கு!


இங்குள்ள சாப்பாட்டு அறையில் 2000 பேர் அமர்ந்து சாப்பிட முடியுமாம். அரண்மனையானது திங்கள் கிழமை மூடப்படும். மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை திறந்திருக்கும்.

மாலை வரை அரண்மனையைச் சுற்றிவிட்டு புறப்பட்டால் அடுத்தநாள் அலுப்பில்லாமல் அலுவலகத்துக்கு சென்று அன்றாட வாழ்க்கையைத் தொடரலாம் (அப்போதும் உங்கள் மனம் கன்னியாகுமரியில் தானிருக்கும்).

கன்னியாகுமரி: 2 நாட்களை இனிமையாக கழிக்க என்ன செய்யலாம்? - பட்ஜெட் டூர் பிளான்!
மதுரை : மீனாட்சி அம்மன் முதல் கறி தோசை வரை - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com