தமிழ்நாட்டில் இந்த பண்டிகைக்கு பெயர் ”பொங்கல்”: மற்ற மாநிலங்களில் என்ன பெயர் தெரியுமா?

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த பண்டிகையை மகர சங்கராந்தி, லொஹரி, மாகி, மகா சாஜா போன்ற பெயர்களில் வெவ்வேறு வடிவங்களில் மக்கள் கொண்டாடுகின்றனர்.
Here's how Pongal is celebrated across different Indian states
Here's how Pongal is celebrated across different Indian statesTwitter

பொங்கல் பண்டிகை என்றாலே உற்சாகம் தான். தமிழகத்தில் மட்டும் அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவில்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் பல்வேறு வடிவங்களில் மக்கள் கொண்டாடுகின்றனர்.

இவ்வளவு ஏன் வெளிநாடுகளில் கூட இதனை கொண்டாடுகின்றனர்.

தாய்லாந்து நாட்டில் "சொங்க்ரான்" என்ற பெயரிலும் லாவோஸில் "பிம லாவோ" என்ற பெயரிலும் மியான்மரில் "திங்க்யான்" என்ற பெயரிலும் நேபாளத்தில் "மாகே சங்கராந்தி" என்ற பெயரிலும் இலங்கையில் புத்தாண்டாகும் இந்த பண்டிகையை அந்தெந்த நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

லொஹரி

பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களின் அறுவடை திருநாளை "லொஹரி" என்ற பெயரிலும், ஹரியானாவில் "மாகி" என்ற பெயரிலும் கொண்டாடி மகிழ்கின்றனர். இமாச்சல பிரதேசத்தில் "மகா சாஜா" என்று அழைக்கப்படுகிறது

வெவ்வேறு பெயர்களாக இருந்தாலும் கொண்டாட்டம் முறை ஒன்றுதான்!

மகர் சங்கராந்தி

உத்திரபிரதேசம், பீகார், ராஜஸ்தானில் "மகர் சங்கராந்தி" என்ற பெயரிலே கொண்டாடப்படுகிறது.

அறுவடை நாளாக ஒரு பக்கம் இருந்தாலும் செய்த பாவங்களை தீர்க்கும் நன்னாளாக மாநில மக்கள் இதனை கொண்டாடுகின்றனர். இந்த தினத்தன்று கங்கை, யமுனை, நர்மதா போன்ற புண்ணிய நதிகளில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Here's how Pongal is celebrated across different Indian states
ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரத்தின் 9 அட்டகாச புகைப்படங்கள்

பழங்குடியினரின் மகர சங்கராந்தி

ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் ஆட்டம் பாட்டம் என ஒரு வாரம் முழுவதும் இந்த பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் என்பதால் தம் அறுவடை முடிந்த சந்தோசத்தை கொண்டாட ஆண் பெண் இருபால் மது அருந்துவது பண்டிகையின் ஒரு அங்கமாக கருதுகின்றனர்.

Here's how Pongal is celebrated across different Indian states
மஹுவா: பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட இந்திய பாரம்பரிய பானம் - ஒரு வரலாற்றுப் பார்வை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com