மு.க.ஸ்டாலின் : தமிழக முதல்வருக்கு கொரோனா உறுதி

"இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்." என முதல்வர் கூறியுள்ளார்.
M K Stalin
M K StalinNewsSense

தமிழகத்தில் கோவிட் தொற்று சமீபமாக அதிகரித்து வந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று அவர், செம்மஞ்சேரி பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் இன்று, "Chess Olympiad-ன் 44-வது போட்டி வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், போட்டிக்காக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று மாமல்லபுரத்தில் ஆய்வு செய்தோம்." எனக் கூறியிருந்தார்.

M K Stalin
Savukku Shankar Latest Interview: கல் வீச்சு, கதவு உடைப்பு - EPS vs OPS இனி என்ன நடக்கும்?

இந்த நிலையில் தனக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதை டிவிட்டரில் அறிவித்த ஸ்டாலின், "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்." என கூறியுள்ளார்.

முதல்வருக்கு கொரோனா தொற்று விரைவில் குணமடைய வேண்டுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட் செய்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலையும் அவருக்காக இறைவனை வேண்டுவதாக கூறியுள்ளார்.

M K Stalin
EPS vs OPS : இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com