”கக்கூஸ் நிரம்பி வழிகிறது” தலைப்புச் செய்திக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் இந்த திட்டம் கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட்டது
”கக்கூஸ் நிரம்பி வழிகிறது” பத்திரிகை தலைப்புச் செய்திக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
”கக்கூஸ் நிரம்பி வழிகிறது” பத்திரிகை தலைப்புச் செய்திக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்ட்விட்டர்

இன்று காலை வெளியான தினமலர் நாளிதழில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தினை விமர்சித்து வெளியான கட்டுரைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் இந்த திட்டம் கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஓராண்டு காலமாக இந்த திட்டம் செயலில் இருந்து வருகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் என ஒரு ஒருவரும், இந்த திட்டம் அரசு பள்ளிகளில் தொடங்கி வைத்து வருகின்றனர்.

இதன் புகைப்படங்கள், வீடியோக்களை நாம் அவ்வப்போது இணையத்து கண்டு வந்தோம்.

இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, ” ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என மணிமேகலை காப்பியம் சொல்கிறது. உயிர் கொடுக்கிற அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

எளிய பின்புலத்தை சேர்ந்த பிள்ளைகள் பள்ளிக்கு செல்வது எந்த காரணத்தாலும் தடைபடக் கூடாது என பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.

கல்வி பெற வறுமை, சாதிய வேறுபாடு போன்றவை காரணமாக இருக்கக் கூடாது” என பெரியார், அண்ணா போன்றவர்களின் வாக்குகளை மேற்கோள் காட்டியிருந்தார் முதலமைச்சர்.

இந்நிலையில், தினமலர் நாளிதழில் இன்று வெளியான பிரதியின் மூன்பக்கத்தில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

“காலை உணவு திட்டம்

மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு

ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்ற தலைப்பிட்டு வெளியாகியிருந்தது அந்த கட்டுரை.

அதில், மாணவர்கள் வீட்டிலும் சாப்பிட்டுவிட்டு, பள்ளிக்கும் வந்து சாப்பிடுகின்றனர். இதனால் சிறிது நேரத்தில் இயற்கை உபாதைக்கு ஆளாகின்றனர் மாணவர்கள். இதனால் அவர்கள் படிக்கும் நேரம் கெடுவது மட்டுமல்லாமல், பள்ளியின் கழிவறைகளும் நிரம்பி வழிகிறது என்று கூறியிருந்தது அந்த கட்டுரை.

”கக்கூஸ் நிரம்பி வழிகிறது” பத்திரிகை தலைப்புச் செய்திக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
மு க ஸ்டாலின் : முதல் தோல்வி to முதல்வர் பதவி - அரசியல் வரலாறு

இந்த கட்டுரை மாணவர்களுக்கு உணவளிப்பதையும், கல்வி வழங்குவதையும் இழிவுப்படுத்தியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு க ஸ்டாலினும் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

“உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.

'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!

#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!” என்று பதிவிட்டிருக்கிறார் முதல்வர்.

நாளிதழின் இந்த கட்டுரைக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

”கக்கூஸ் நிரம்பி வழிகிறது” பத்திரிகை தலைப்புச் செய்திக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
ரஜினி : திருவண்ணாமலையில் சாமி தரிசன புகைப்படத்துக்கு இந்து முன்னணி கண்டனம் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com