”சீக்கிரமே Come Back கொடுப்பேன்” - கால்பந்து வீராங்கனை பிரியாவின் கடைசி Whatsapp Status

பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கால்பந்து வீராங்கனை பிரியா
கால்பந்து வீராங்கனை பிரியாTwitter

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகள் பிரியா. இவர் ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் படித்து வந்துள்ளார்.

கால்பந்து வீராங்கனையான பிரியா தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வருவார். கடந்த மாதம் 20 ஆம் தேதி அவரது காலில் வலி ஏற்பட்டுள்ளது. சுளுக்கு போல் இருப்பதாக பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது, சிகிச்சையின்போது மருத்துவர்கள் கவனக்குறைவால் மறுநாளே கால் பெரிய அளவில் வீங்கி இருக்கிறது.

இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அழைத்து செல்லப்பட்ட பிரியாவுக்கு ரத்த நாளங்களில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வலதுகாலை அகற்றியுள்ளனர்.

என்னோட மாஸ் எண்டரியை கொடுப்பேன்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். பல்வேறு தரப்பினர் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் கடைசியாக வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், "நான் சீக்கிரமாகவே come back கொடுப்பேன், அதனாலே எதுக்கும் ஃபில் பண்ணாதீங்க. என்னோட மாஸ் எண்டரியை கொடுப்பேன். என்னோட விளையாட்டு என்னை விட்டு போகாது, நான் திரும்பி வந்துருவேன் நம்பிக்கையா இருங்க" என்று பதிவிட்டிருந்தார். இந்த ஸ்கிரீன்ஷாட் வைரலாகி வருகிறது.

கால்பந்து வீராங்கனை பிரியா
மகளை விட அதிக மதிப்பெண் எடுத்த மாணவனை கொலை செய்த தாய் - காரைக்காலில் பரபரப்பு!

மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை

இதற்கிடையில் கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கால்பந்து வீராங்கனை பிரியா
"ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கணும்" - சத்யா கொலை வழக்கில் பொங்கிய விஜய் ஆண்டனி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com