Chennai : குழந்தைகளை நிச்சயம் கூட்டிச்செல்ல வேண்டிய 5 இடங்கள்!

பக்கத்தில் இருக்கும் பார்க்கை மட்டுமே பார்த்து சலித்துவிட்ட குழந்தைகளை சென்னைக்குள்ளாகவே கூட்டிச்செல்ல பல இடங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான 5 இடங்களைப் பார்க்கலாம்.
Chennai : குழந்தைகளை நிச்சயம் கூட்டிச்செல்ல வேண்டிய 5 இடங்கள்!
Chennai : குழந்தைகளை நிச்சயம் கூட்டிச்செல்ல வேண்டிய 5 இடங்கள்!Twitter

கோடையில் பிள்ளைகளை ஆச்சி, தாத்தா வீட்டுக்கு அனுப்ப முடியாத பெற்றோர்களின் நிலை கொஞ்சம் கவலைக்கிடமானது தான். குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதைப் பார்க்க நமக்கே பாவமாக இருக்கும்.

வெளியூர்களுக்கு சென்றுவர விடுப்பு கிடைக்காது. பக்கத்தில் இருக்கும் பார்க்கை மட்டுமே பார்த்து  சலித்துவிட்ட குழந்தைகளை சென்னைக்குள்ளாகவே கூட்டிச்செல்ல பல இடங்கள் இருக்கின்றன. 

அவற்றில் முக்கியமான 5 இடங்களைப் பார்க்கலாம்.

1. ICF Rail Museum 

ஐ.சி.எஃப் ரயில் அருங்காட்சியகம் ரயில் தொழில்நுட்பம் குறித்தும் வரலாறு குறித்தும் புரிதலை ஏற்படுத்தும் இடமாக இருக்கிறது. இங்கு பலவகையான ரயில்களின் மாதிரிகளைப் பார்க்கலாம்.

இங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை கூட முன் கூட்டியே பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் சுவராஸ்யமாக இருக்கும். 

2. Egmore Children Museum 

எழும்பூர் குழந்தைகள் அருங்காட்சியகம் டைனோசர்களைப் பற்றிக் கற்றுக்கொடுக்கும். குழந்தைகளுக்கு இயல்பாகவே டைனோசர்களைப் பிடிக்கும் என்பதனால் நிச்சயமாக பிரமிப்பாக உணர்வார்கள்.

இது காலை 9:30 முதல் மாலை 5 மணி வரை இயங்கும். வரலாறு, கலாச்சாரம் குறித்தும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

3. Raj Bhavan 

என்னது ஆளுநர் மாளிகையா என வியக்க வேண்டாம். www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் ஆளுநர் மாளிகையை சுற்றிப்பார்க்க அனுமதி கிடைக்கும்.

குறிப்பிட்ட நேரத்துக்கு 30 நிமிடங்கள் முன்னதாக செல்ல வேண்டும். மாலை 4:30 முதல் 5:30 வரை மட்டுமே அனுமதி. 

இங்கு பாரம்பரிய கட்டிட வேலைபாடுகளைக் காண முடியும். சில்வர் ஜூப்லி பூங்கா, நக்‌ஷத்ரா கார்டன், சோலார் பவர் பிளாண்ட், மான் என சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் உள்ளன.

Chennai : குழந்தைகளை நிச்சயம் கூட்டிச்செல்ல வேண்டிய 5 இடங்கள்!
சென்னை: ஒரேநாளில் குழந்தைகளுடன் உற்சாகமாக சென்று வரலாம் - வீக் எண்ட் ஸ்பாட்ஸ்!

4. கிண்டி பாம்பு பண்ணை

கிண்டி தேசிய பூங்கா குழந்தைகளுக்கு ஏற்ற தளம் என்பது நமக்குத் தெரியும். இங்கு 34 வகையான பாம்புகளைக் காணலாம்.  குழந்தைகளுக்கு பாம்பு பற்றிய பயத்தை மாற்ற இது உதவும்.

காலை 9 மணி முதல் 5.30 மணி வரை பூங்கா இயங்கும். செவ்வாய் கிழமை மட்டும் விடுமுறை.

5. சென்னை மீன் பூங்கா

சில ஆண்டுகளுக்கு முன் சேத்துபட்டில் புதிதாக திறக்கப்பட்டது சென்னை மீன் பூங்கா. இங்கிருக்கும் வண்ண வண்ண மீன்கள் நிச்சயமாக குழந்தைகளை குதூகலப்படுத்தும்.

குழந்தைகளுக்கு ஒரு நினைவாகவும் இது இருக்கும். இங்கு தண்ணீர் இருக்கு நாட்களில் போட்டிங்கும் செல்லலாம். காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயங்கும். பொது விடுமுறை நாட்களிலும் விடுமுறையின்றி இயங்கும்.

Chennai : குழந்தைகளை நிச்சயம் கூட்டிச்செல்ல வேண்டிய 5 இடங்கள்!
துருக்கி - சிரியா நிலநடுக்கம்: பிறந்து 10 நாளான குழந்தை மீட்பு - நெகிழ வைக்கும் கதை

பள்ளியில் கோடை முடிந்ததும் மற்ற குழந்தைகளுடன் இணைந்து உங்கள் குழந்தையும் சில நினைவுகளை, கதைகளை பகிரவேண்டும் அல்லவா? இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களின் மனமும் இலகுவாக இருக்கும்.

Chennai : குழந்தைகளை நிச்சயம் கூட்டிச்செல்ல வேண்டிய 5 இடங்கள்!
ஜப்பான்: "நல்லா அழுங்க" - சுமோ போட்டியில் குழந்தைகளை அழ வைப்பது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com