
1983ஆம் ஆண்டு கபில் தேவ் உலகக்கோப்பையை கையில் ஏந்திய தருணத்தையும், 2011ல் தோனி சிக்சர் அடித்த தருணத்தையும், மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டால், நிம்மதியாக இறந்துவிடுவேன் எனக் கூரியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
1971 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கியவர் சுனில் கவாஸ்கர். அந்த சமயத்தில் கிரிக்கெட்டின் தலைகளாக இருந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்.
தான் அறிமுகமான தொடரிலேயே 774 ரன்கள் குவித்து, இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்தை மாற்றியவர். இந்திய அணிக்காக பல சாதனைகள் செய்தார்.
இவரை தொடர்ந்து அந்த இடத்தை நிறப்ப இன்றுமொரு ஆள் கிடைக்கவில்லை. பல சமயங்களில் இவரது தொடர்ச்சியாக சச்சின் டெண்டுல்கர் பேசப்பட்டார்.
அப்படிப்பட்ட சுனில் கவாஸ்கர் எம் எஸ் தோனியின் தீவிர ரசிகர். ஒரு முறை, பேட்டி ஒன்றில் பேசியவர், “தோனி போன்ற விளையாட்டு வீரர்கள், நூற்றாண்டுக்கு ஒரு முறை தான் தோன்றுவார்கள்” என்று கூறியிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சேப்பாக்கத்தில் சென்னை கொல்கத்தா இடையிலான போட்டி நடைப்பெற்றது.
போட்டி முடிந்து நன்றி சொல்லும் விதமாக சென்னை அணி வீரர்கள் ரசிகர்களுக்கு பரிசுகளை வழங்கினர். அப்போது, மைதானத்தில் தோனியை சந்தித்த கவாஸ்கர், அவரிடம் ஆட்டொகிராஃப் பெற்றார்.
பாமர ரசிகனை போல, தனது சட்டையில் கவாஸ்கர் ஆட்டொகிராஃப் பெற்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார் கவாஸ்கர்.
அதில், “தோனி மைதானத்தை சுற்றிவந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துவந்தார். என்னிடம் இருந்த சட்டை ஒன்றில் அவரின் ஆட்டொகிராஃப் பெற வேண்டும் என நினைத்தேன். அன்று அதே சர்ட்டை தான் அணிந்திருந்தேன். அவர் எனக்கு ஆட்டொகிரஃப் கொடுத்தார். இது என் வாழ்வின் மிகவும் நெகிழ்ச்சிகரமான தருணம்” என்று கூறினார் கவாஸ்கர்.
தொடர்ந்து பேசியவர், ”தோனி இந்திய அணிக்காக என்னென்ன செய்யவில்லை? நான் முன்பே கூறியிருப்பதுபோல என் வாழ்நாளின் கடைசி தருணங்களில் இரண்டு நிகழ்வுகளை மீண்டும் காண விரும்புகிறேன்.
ஒன்று 1983ல் கபில் தேவ் உலகக்கோப்பை வென்றபின், கோப்பையை கையில் ஏந்திய தருணம். மற்றொன்று, 2011ல் தோனி சிக்சர் அடித்த பிறகு வெற்றியை கொண்டாட தன் பேட்டை சுழற்றிய தருணம்”.
இந்த இரண்டையும் பார்த்துவிட்டால் நிம்மதியாக நான் மரணமடைவேன் என்று உனர்வுபூர்வமாக பேசியிருந்தார் சுனில் கவாஸ்கர்.
அவர் பேசிய இந்த வீடியோ க்ளிப் இணையத்தில் வைரலாகி வருகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust