
Partners
எஸ்.என்.ஜே மது உற்பத்தி நிறுவனத்துடன் உறவை தொடர்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
2022 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சி.எஸ்.கே அணியின் ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பான்சராக இருந்து வருகிறது எஸ்.என்.ஜே.
மது உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் இந்தியா முழுவதும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சென்னை அணியின் ஸ்பான்சராக 2024ம் ஆண்டு வரை தன்னை நீட்டித்துக் கொண்டுள்ளது. சிஎஸ்கே அணியின் ஜெர்சியின் இரு புறமும் எஸ்.என்.ஜே என எழுதியிருக்கும்.
ஸ்பான்சர்ஷிப் குறித்துப் பேசிய எஸ்.என்.ஜே தலைவர் ஜெய முருகன், "ஸ்பான்சர்ஷிப்பில் மீண்டும் இணைவதில் பெருமை கொள்கிறோம். இந்த கூட்டணி எங்கள் நிறுவனத்தின் ஸ்லோகனில் வருவது போலவே செம்ம ஸ்ட்ராங், செம்ம மாஸ்," என்றார்.
தொடர்ந்து பேசிய சி.எஸ்.கே தலைவர் விஸ்வநாதன் எஸ்.என்.ஜே நிறுவனம் சி.எஸ்,கேவின் ஸ்பான்சராக இணைந்ததில் தனக்கு மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
இனி வரும் ஆண்டுகள் உற்சாகமானதாக இருக்கும் என்றும், ஸ்பான்சர்ஷிப் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது அணிக்கு ஒரு படி முன்னேற்றம் என்றும் விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார்.