IPL : RCB தோற்றதால் பிளே ஆஃபுக்கு முன்னேறிய MI - ஈ சாலாவும் கப் நஹி; கண்கலங்கிய விராட்🥲

சுப்மன் கில் தன் பங்கிற்கு அவரும் சதமடிக்க, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.பெங்களூரு அணி தோல்விக்காக காத்திருந்த மும்பை அணி, 16 புள்ளிகளுடன் பிளே ஆஃபுக்கு முன்னேறியுள்ளது.
IPL 2023: RCB தோற்றதால் பிளே ஆஃபுக்கு முன்னேறிய MI - ஈ சாலாவும் கப் நஹி; கண்கலங்கிய விராட்
IPL 2023: RCB தோற்றதால் பிளே ஆஃபுக்கு முன்னேறிய MI - ஈ சாலாவும் கப் நஹி; கண்கலங்கிய விராட்Twitter

நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்றதால், மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தோல்வியுற்ற பிறகு கண்கலங்கிய விராட் கோலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது முதல் நான்கு இடங்களில் முறையே குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023ஆம் சீசன் ஐபிஎல் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை கடைசி இரண்டு லீக் போட்டிகள் நடந்தன. எப்போதும் இல்லாமல், இம்முறை, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் என்னென்ன என்பது லீக் போட்டிகள் முடிவடையும் வரை யாராலும் கணிக்கமுடியவில்லை.

ஆரம்பத்தில் தோல்வியை தழுவிய அணிகள் எல்லாம் வெறித்தனமாக கம் பேக் கொடுத்தன. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி. தவிர, வெளியேறியுள்ள அணிகளும் நல்ல புள்ளிகளுடனே வெளியேறியுள்ளன.

இதனால், இனி நடக்கவிருக்கும் தகுதிச் சுற்றுகளும் இதே போல த்ரில்லிங்காக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

IPL 2023: RCB தோற்றதால் பிளே ஆஃபுக்கு முன்னேறிய MI - ஈ சாலாவும் கப் நஹி; கண்கலங்கிய விராட்
IPL 2023: முதல் சதம் அடித்த SKY; சளைக்காத ராஷீத் - Play Off வாய்ப்பை தக்கவைத்ததா MI?

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் போட்டியில் 200 ரன் இலக்கை எட்டி வெற்றி பெற்று, ஆர் சி பி அணியின் போட்டிக்காக காத்திருந்தது.

பெங்களூருவில் காலை முதலே மழை இருந்ததால், போட்டி நடைபெறும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. எனினும் தாமதமாக தொடங்கிய போட்டியில், முதலில் ஆடிய ஆர் சி பி, 197 ரன்கள் எடுத்தது.

விராட் கோலி 101 ரன்கள் அடித்திருந்தார். தொடர்ந்து இரண்டாவது சதத்தை அடித்துள்ள கோலி, தற்போது ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இரண்டாவதாக களமிறங்கிய குஜராத் அணிக்கு, வலுவான தொடக்கத்தை கொடுத்தார் சுப்மன் கில். அவரது பங்கிற்கு அவரும் சதமடிக்க, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.

பெங்களூரு அணி தோல்விக்காக காத்திருந்த மும்பை அணி, 16 புள்ளிகளுடன் பிளே ஆஃபுக்கு முன்னேறியுள்ளது.

IPL 2023: RCB தோற்றதால் பிளே ஆஃபுக்கு முன்னேறிய MI - ஈ சாலாவும் கப் நஹி; கண்கலங்கிய விராட்
"நாங்கள் Playoffsக்கு செல்ல தகுதியானவர்களே” - குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பேசியது என்ன?

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இரண்டாவது தகுதிச் சுற்றில் லக்னோ மும்பை அணிகள் மோதும். முதல் குவாலிஃபையரில் தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், மும்பை அணி விளையாடவுள்ளது எலிமினேட்டர் என்பதால், ஒரு வாய்ப்பு தான்.

இதுவரை குஜராத் அணிக்கு எதிராக சென்னை அணியும், லக்னோ அணிக்கு எதிராக மும்பை அணியும் வென்றதே இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வரலாறு மாற்றி எழுதப்படுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

IPL 2023: RCB தோற்றதால் பிளே ஆஃபுக்கு முன்னேறிய MI - ஈ சாலாவும் கப் நஹி; கண்கலங்கிய விராட்
IPL: 14 சீசன்களில் 12 முறை பிளே ஆஃப் சென்ற CSK; 5வது கோப்பையை கைப்பற்றுமா தோனி படை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com