LSG vs RCB: கோலி - கம்பீர் களத்தில் மோதல்; மீண்டும் புகைந்த 10 ஆண்டு பகை - ஏன்?

2013ல் பெங்களூரு கொல்கத்தா அணிகள் மோதின. அப்போது இரு அணிகளில் கேப்டன்களாக இருந்த கோலி மற்றும் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
LSG vs RCB: கோலி - கம்பீர் களத்தில் மோதல்; மீண்டும் புகைந்த 10 ஆண்டு பகை  - ஏன்?
LSG vs RCB: கோலி - கம்பீர் களத்தில் மோதல்; மீண்டும் புகைந்த 10 ஆண்டு பகை - ஏன்?Twitter

நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடனான வெற்றிக்கு பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது.

இதனால் அவர்கள் இருவருக்கும் 100 சதவிகித அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, பத்து ஆண்டுகளுக்கு முன் இதே போல ஒரு போட்டியில் இவர்கள் மோதிக்கொண்டது பேசு பொருளாகியுள்ளது.

LSG vs RCB: கோலி - கம்பீர் களத்தில் மோதல்; மீண்டும் புகைந்த 10 ஆண்டு பகை  - ஏன்?
RCB vs LSG : பூரன், பதோனி அதிரடி; கடைசி பந்து வரை இழுத்த போட்டி - லக்னோ திக் திக் வெற்றி!

ஐபிஎல் 2023ன் நேற்றைய போட்டியில் லக்னோ அணியை எதிர்கொண்டது பெங்களூரு அணி. முதலில் விளையாடிய ஆர் சி பி அணி, மிகக் குறைவான இலக்கையே நிர்ணையித்தது. எடுத்திருந்த 126 ரன்களில் அதிகபட்சமாக டுப்ளெசி 44 ரன்களும், கோலி 31 ரன்களும் எடுத்தனர்.

127 என்ற மிக எளிதான இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு காயம் காரணமாக ராகுல் பேட்டிங் ஆட களமிறங்கவில்லை. இதனால் பேட்டிங் ஆர்டரில் குழப்பம் இருந்தது. களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது எல் எஸ் ஜி. இதன் மூலம் 10 புள்ளிகள் பெற்று 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது ஆர் சி பி

இதற்கு முன் இந்த பருவத்தில் பெங்களூரு லக்னோ அணிகள் மோதிய போட்டியில், லக்னோ அணி த்ரில் வெற்றிப் பெற்றது.

அப்போது மைதானத்தில் ரசிகர்களை பார்த்து, அமைதியாக இருக்கும் படி சைகை காண்பித்திருந்தார் லக்னோ அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர். சாதாரணமாக தன்னை சீண்டும் எந்த ஒரு வீரரையும் கோலி விட்டு வைத்தது கிடையாது, அவரது அக்ரெஸிவ் ஆன ஆட்டிட்யூடு நமக்கு தெரிந்ததே.

நேற்று லக்னோ அணி இழந்த ஒவ்வொரு விக்கெட்க்கும் ஆர்ப்பரித்தார் கோலி, குறிப்பாக குருனால் பாண்டியா அவுட் ஆன பிறகு ரசிகர்களை பார்த்து கம்பீர் செய்தது போல சைகை செய்தார்.

தவிர லக்னோ அணியின் வீரர் நவீன் உல் ஹக் பேட்டிங் ஆட வந்தபோதே கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

போட்டி முடிந்து இரு அணிகளும் கைக் குலுக்கியபோது மீண்டும் நவீன் உல் ஹக் கோலியின் கையை தட்டிவிட்டு ஏதோ பேச, இது வெடித்தது. கோலி பேசவந்தபோது கே எல் ராகுல் மற்றும் கம்பீர் உள்ளே நுழைந்தனர்.

LSG vs RCB: கோலி - கம்பீர் களத்தில் மோதல்; மீண்டும் புகைந்த 10 ஆண்டு பகை  - ஏன்?
IPL 2023: விராட் கோலி டூ சஞ்சு சாம்சன் - ஐபிஎல்லில் இந்தியர்களின் அதிகபட்ச தனிபட்ட ஸ்கோர்!

அப்போது நடந்ததை விளக்க முயற்சித்த கோலி கம்பீரின் தோள் மேல் கைவைத்தார், எனினும் வாக்குவாதம் முற்றியது. இருவரும் ஒருவரை ஒருவர் சாடிக்கொள்ள இரு அணி வீரர்களும், நடுவர்களும் தடுத்து நிறுத்தினர்.

மைதானத்தில் அவமரியாதையாக நடந்துகொண்டதால், ஐபிஎல் நடத்தை நெறிமுறைகளின் அடிப்படையில் (IPL Code of Conduct) விராட் கோலி, கவுதம் கம்பீர் இருவருக்குமே 100 சதவிகித அபராதம் விதிக்கப்பட்டது. தவிர நவீன் உல் ஹக்கிற்கு 50 சதவிகித அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

2013ல் பெங்களூரு கொல்கத்தா அணிகள் மோதின. அப்போது இரு அணிகளில் கேப்டன்களாக இருந்த கோலி மற்றும் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LSG vs RCB: கோலி - கம்பீர் களத்தில் மோதல்; மீண்டும் புகைந்த 10 ஆண்டு பகை  - ஏன்?
LSG vs GT: "எப்படி நடந்ததுனு தெரியல" தோல்வியை ஏற்க மறுத்த LSG கேப்டன் கே எல் ராகுல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com