
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், அவரது தந்தையின் பிரிவை எண்ணி பல நாட்கள் தன் அறையில் தனியாக அழுததாக தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 2020 ஆம் ஆண்டு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தது. முகமது சிராஜும் இந்திய அணிக்காக விளையாட ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.
அப்போது நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தந்தை முகமது கவுஸ் உயிரிழந்தார். தந்தை மரணித்த மறுநாளே பயிற்சிக்கு வந்தார் சிராஜ்.
மேலும் அப்போது கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடும் இருந்ததால், ஒவ்வொரு வீரரும் கட்டாயம் அவர்களது பயோ பப்பிளை விட்டு வெளியேறுவதிலும் கட்டுப்பாடுகள் இருந்தன. தந்தையின் இறுதிச் சடங்கிற்கு கூட அவர் செல்லவில்லை.
”நான் இந்திய அணிக்காக விளையாடுவது என் தந்தையின் கனவு. அவர் என்னை நிச்சயம் விளையாடத்தான் சொல்லியிருப்பார் அதனால் நான் இறுதிச் சடங்கிற்கு செல்லப்போவதில்லை” என்று கூறி நாட்டிற்காக தன் கடமையாற்றினார் சிராஜ்.
எனினும் அந்த சமயத்தில் தன் தந்தையின் பிரிவு அவரை வெகுவாக பாதித்தது என்பதை நினைவுக்கூர்ந்துள்ளார் சிராஜ். இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் கோச் ஸ்ரீதர் மற்றும் சிராஜின் வருங்கால மனைவி இருவரும் தன்னுடன் தொலைப்பேசி மூலம் பேசி தனக்கு ஆறுதல் கூறியதாக சிராஜ் கூறினார்.
“நான் என்ன செய்கிறேன், சாப்பிட்டேனா என ஸ்ரீதர் அவ்வப்போது என்னிடம் பேசி உறுதிப்படுத்திக்கொண்டார். எனது வருங்கால மனைவியும் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொள்வார். தொலைப்பேசியில் அழமாட்டேன். எனினும் ஒரு சில நாட்கள் கடினமானதாக இருக்கும். பல முறை தனியே எனது அறையில் நான் அழுதிருக்கிறேன்.” என்றார்
தந்தை மரணித்த மறுநாளே அவர் பயிற்சிக்கும் சென்றார். அப்போது ஆஸ்திரேலியாவுடன் விளையாடியது தான் சிராஜின் முதல் டெஸ்ட் போட்டி. அந்த சமயத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி தன்னிடம், “உனது தந்தையின் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கும். நீ ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்துவாய்” என்று சிராஜை தேற்றினாராம்.
சொன்னது போலவே தனது பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சிராஜ் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார்.
”என் தந்தை எனது கடின உழைப்பை பார்த்து மிகவும் கர்வம் கொண்டிருந்தார். நான் விளையாடுவதை அவர் பார்க்கவேண்டும் என்பது எனது ஆசை. அது இனி நடக்காது என்பது வருத்தமாக உள்ளது. அவர் எப்போதும் எங்களை கலகலப்பாக வைத்திருந்தார்” என்றார் சிராஜ்
இந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. 32 ஆண்டுகளாக கப்பா மைதானத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாறு காணாத வெற்றிக் கண்டது இந்தியா. இந்த சீரீஸில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 13 விக்கெட்களை வீழ்த்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust