தோனி டு கோலி- 2011 உலகக்கோப்பை வெற்றி கூட்டணி இப்போதைய நிலை என்ன? '12YearsofIndiaWorldCup'

2011ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றிய வெற்றிக்கூட்டணி தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம்
தோனி டு கோலி- 2011 உலகக்கோப்பை வெற்றி கூட்டணி இப்போதைய நிலை என்ன? '12YearsofIndiaWorldCup'
தோனி டு கோலி- 2011 உலகக்கோப்பை வெற்றி கூட்டணி இப்போதைய நிலை என்ன? '12YearsofIndiaWorldCup'ட்விட்டர்

"Dhoni, finishes off in style" என வர்ணனனையாளர் கூறியது எல்லா இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மனதில் ஆழமாக பதிந்த வாசகம்.

இந்திய அணி, 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011ல் உலகக்கோப்பையை வென்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த உலகக்கோப்பை வெற்றிய இந்திய அணி மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு அர்ப்பணித்தது. அவரை தோள் மீது சுமந்தவாறு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஊர்வலம் வந்த காட்சிகள் பசுமரத்தாணி போல மனதில் இருக்கிறது.

அதன் பிறகு இரு உலகக்கோப்பையில் பங்கேற்ற இந்திய அணி கோப்பையை கோட்டைவிட்டது தான். எனினும், இம்முறையும் இப்படை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களுக்கு இருக்கிறது தான்.

உலக்ககோப்பையை அதிக முறை வென்ற அணியாக ஆஸ்திரேலியா இருக்கிறது. தவிர, இந்தியா, மேற்கு இந்திய தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் இதுவரை கோப்பையை வென்றிருக்கிறது. ஒரு முறைக் கூட உலகக்கோப்பை வெல்லாத அணியாக இருக்கிறது தென் ஆப்பிரிக்கா.

உலகக்கோப்பை கனவை கபில் தேவுக்கு பிறகு, இரண்டரை தசாப்தங்கள் கடந்து நனவாக்கியது எம். எஸ். தோனி தலைமையிலான இந்திய அணி. இந்த ஆண்டு இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்துகிறார்.

அதற்கான தயாரிப்புபடலமும் சரிவர நடக்கிறது என அணி நிர்வாகம் கூறியுள்ளது.

இந்நிலையில் 2011ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றிய வெற்றிக்கூட்டணி தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம்

வீரேந்திர சேவாக்

2011 உலகக்கோப்பைக்கு பிறகு 2013 வரை விளையாடிய சேவாக் 2015ல் ஓய்வை அறிவித்தார். இந்திய அணியின் நட்சத்திர அதிரடி தொடக்கவீரரான இவர், ஓய்வுக்கு பிறகு அவ்வப்போது கிரிக்கெட் அனலிஸ்டாகவும், வர்ணனையாளராகவும் இருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், மாஸ்டர் பிளாஸ்டர், God of Cricket என இவரை வர்ணிக்காத தலைப்புகள் இல்லை. 2011 உலகக்கோப்பை வெற்றியை இவருக்கு அர்ப்பணித்தது இந்திய அணி. 2012,13 வாக்கிலேயே இவர் விளையாடுவது குறைந்து 2013ல் ஓய்வை அறிவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் விளையாடினார், அதன் பிறகு தற்போது அணியின் மென்ட்டராக இருக்கிறார்

தோனி டு கோலி- 2011 உலகக்கோப்பை வெற்றி கூட்டணி இப்போதைய நிலை என்ன? '12YearsofIndiaWorldCup'
விராட் கோலி : 28வது சதத்தை நிறைவு செய்த வீரர் - 3 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவு
<div class="paragraphs"><p>Virat Kohli</p></div>

Virat Kohli

News Sense

கௌதம் கம்பீர்

இந்திய அணியின் தொடக்க வீரரான கௌதம் கம்பீர் உலகக்கோப்பை இறுதியில் நூழிலையில் சதத்தை தவறவிட்டார். இவர் 2011 உலக்கோப்பைக்கு பிறகு பல ஆண்டுகள் விளையாடி 2018ல் ஓய்வை அறிவித்தார். மார்ச் 2019ல் பாஜகவில் இணைந்த இவர், கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார் மற்றும் தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் மென்ட்டராக இருக்கிறார்.

விராட் கோலி

2011 உலகக்கோப்பைக்கு பிறகு தான் இவரது கரியரே தொடங்கியது எனலாம். இந்திய அணியின் நம்பர் 3 பேட்டரான இவர், சச்சின் டெண்டுல்கர் செய்த பல சாதனைகளை முறியடிக்கத் தொடங்கினார். தோனிக்கு பிறகு இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார் கோலி. ஐபிஎல்லில் ஆர்சிபி அணியை வழிநடத்திய இவர், தற்போதும் இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்கிறார்

எம் எஸ் தோனி

2011 உலககோப்பைக்கு பிறகு, 2020 வரை இந்திய அணியில் விளையாடினார் தோனி. இவருக்கு பிறகு தலைமை பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்தார். இந்திய அணிக்கு அனைத்துவித சர்வதேச கோப்பைகளையும் வென்று தந்த கேப்டன் கூல், தற்போது ஐபிஎல்லில் மட்டும் விளையாடி வருகிறார்

யுவராஜ் சிங்

2011 உலகக்கோப்பையின்போது கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நோயோடு போராடியவாறே அணியை வெற்றிப்பாதையிலும் இட்டுச்சென்றார். புற்றுநோய் தாக்கத்திலிருந்து சரியாகி வெளிவந்த சில ஆண்டுகள் விளையாடி இவர் 2019ல் ஓய்வு பெற்றார். தற்போது அவ்வப்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மென்ட்டராக இருந்து வருகிறார்

தோனி டு கோலி- 2011 உலகக்கோப்பை வெற்றி கூட்டணி இப்போதைய நிலை என்ன? '12YearsofIndiaWorldCup'
CSK vs GT: "ருதுராஜ்ஜை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது" - தோல்வி பற்றி தோனி பேசியது என்ன?

சுரேஷ் ரெய்னா

தோனியின் நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில் ஜாம்பவான். இவரை Mr.IPL என்றழைக்கிறது கிரிக்கெட் சமூகம். 2011 உலகக்கோப்பைக்கு பிறகு கணிசமான போட்டிகளில் இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடிய இவர், 2020ல் தோனி ஓய்வை அறிவித்த சில நிமிடங்களிலேயே ஓய்வை அறிவித்தார். ஓய்வுக்கு பிறகு ஒரு சீசன் சிஎஸ்கேவுக்கு விளையாடிய இவர், தற்போது வர்ணனையாளாராக இருந்து வருகிறார்.

ஹர்பஜன் சிங்

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் 2021ஆம் ஆண்டுக்கு பிறகு, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்

ஜாகீர் கான்

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான், 2011 உலகக்கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டவர். 2015ல் ஓய்வு பெற்ற இவர், மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் கோச்சாக இருந்து வருகிறார்

முனாஃப் படேல்

இவர் ஓய்வுக்குப் பிறகு, பல உலகளாவிய டி 20 போட்டிகளில் பங்கேற்றார்.

ஸ்ரீசாந்த்

கேரள வேகப்பந்து வீச்சாளரான இவர் 2022 ஆம் ஆண்டில் அனைத்து வகையான உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். ஸ்ரீசாந்த் பிக்பாஸ் போன்ற சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்தார்.

தோனி டு கோலி- 2011 உலகக்கோப்பை வெற்றி கூட்டணி இப்போதைய நிலை என்ன? '12YearsofIndiaWorldCup'
”தோனி உலகக்கோப்பை வென்றுவிட்டால்?” ரசிகர்களின் வாயை அடைத்த அஷ்வின் - என்ன பேசினார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com