"சிவசக்தி" நிலவில் இந்து கடவுளின் பெயரை சூட்டியது ஏற்புடையதா? வானியல் விதிகள் சொல்வதென்ன?

மோடி தன்னிச்சையாக சூட்டிய பெயரை சர்வதேச சமூகம் ஏற்குமா? வானியல் பொருட்களுக்கு பெயர்வைக்க ஏதேனும் விதிகள் இருக்கிறதா? என்பதை விரிவாக தெரிந்துகொள்வோம்.
"சிவசக்தி" நிலவில் இந்துகடவுளின் பெயரை சூட்டியது ஏற்புடையதா? வானியல் விதிகள் சொல்வதென்ன?
"சிவசக்தி" நிலவில் இந்துகடவுளின் பெயரை சூட்டியது ஏற்புடையதா? வானியல் விதிகள் சொல்வதென்ன?Twitter

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது இந்திய விண்வெளி ஆய்வு மையம். இஸ்ரோவை பாராட்டிய பிரதமர் மோடி ஆகஸ்ட் 26ம் தேதி நிலவில் சந்திரயான் 3 இறங்கிய பகுதிக்கு சிவசக்தி என்று பெயர் சூட்டினார்.

நிலவின் ஒரு பகுதிக்கு பெயர் வைக்கும் போது உலக மக்கள் அனைவரும் ஏற்கும் படியான பெயரை வைக்க வேண்டும். ஆனால் நாட்டு மக்களே கேள்வி எழுப்பும்படியாக, ஒருசார்பாக மதக்கடவுளின் பெயரை மோடி வைத்துள்ளார் என்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன.

மோடி தன்னிச்சையாக சூட்டிய பெயரை சர்வதேச சமூகம் ஏற்குமா? வானியல் பொருட்களுக்கு பெயர்வைக்க ஏதேனும் விதிகள் இருக்கிறதா? என்பதை விரிவாக தெரிந்துகொள்வோம்.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத ஒரு விஞ்ஞானி பிபிசி தளத்துக்கு அளித்த பேட்டியில், "சந்திரயான் நிலவில் தரையிறங்கியது மனித குலத்துக்கு கிடைத்த வெற்றி. இதற்கு தன்னிச்சையாக பெயர் வைத்தது மட்டுமல்லாமல், கேள்வி கேட்கும் விஞ்ஞானிகள் இந்தியாவுக்கும் இந்து மதத்திற்கும் எதிரானவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்" எனக் கூறியுள்ளார்.

வானியல் பொருட்களுக்கு இந்து மதக் கடவுள்களின் பெயர்களை வைப்பது இதுவொன்றும் முதன்முறை அல்ல என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

Space
SpaceCanva

1951ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குறுங்கோளுக்கு 'ஹனுமன்' எனப் பெயர்வைக்கப்பட்டது.

1957ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குறுங்கோளுக்கு 'கருடா' என்றுப் பெயர் வைப்பட்டது.

1993ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குறுங்கோளுக்கு பாண்டிச்சேரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல ராமானுஜம் என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

1978ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குறுங்கோளின் பெயர் கணேசா. ஏற்கெனவே இப்படிப்பட்ட பெயர்கள் இருப்பதனால் சர்வதேச சமுகம் சிவசக்தி என்ற பெயரையும் எற்றுக்கொள்ள வேண்டும் என சொல்லிவிட முடியாது.

சந்திரயான்-1 தூக்கி வீசப்பட்டு, அது போய் விழுந்த நிலாவின் பகுதியை ஜவஹர் புள்ளி எனப் பெயரிட வேண்டும் என அப்துல்கலாம் பரிந்துரைத்தார். ஆனால் சர்வதேச வானியல் பொருட்களுக்கு பெயர் வைக்கும் விதிக்க்கு உட்பட்டு அந்த பெயர் இல்லை என்பதனால் சர்வதேச சமூகத்தால் நிராகரிக்கப்பட்டது.

வானியல் பொருட்களுக்கு முதலில் ஐரோப்பிய அறிஞர்கள் வைக்கும் பெயர் மட்டுமே ஏற்கப்பட்டு வந்தது. மார்ஸ், வீனஸ் போன்ற கிரேக்க கடவுள்களின் பெயர்களை வைத்தனர்.

1919 சர்வதேச வானியல் கழகம் உருவாக்கப்பட்ட பிறகு அனைத்து பண்பாடுகளையும் முன்னிருத்தும் வகையில் பெயர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

வியாழன் கிரகத்தில் கண்டுபிடிக்கப்படும் துணை கோள்களுக்கு பெயர் வைக்கிறோம் என்றால் புராண இதிகாசங்களில் உள்ள பெயர்களை, கண்டுபிடிப்பாளர் பெயர்களை, புகழ் பெற்ற சிந்தனையாளர்களின் பெயர்களை வைக்கலாம்.

நூறு ஆண்டுகளுக்கும் குறைவான வரலாறு கொண்ட தனிநபர்கள் அல்லது நிகழ்வுகளின் பெயர்கள், வணிகப் பெயர்கள், செல்லப் பிராணிகளின் பெயர்களை வைக்கக் கூடாது.

"சிவசக்தி" நிலவில் இந்துகடவுளின் பெயரை சூட்டியது ஏற்புடையதா? வானியல் விதிகள் சொல்வதென்ன?
சந்திரயான் 3: முட்டி மோதும் உலக நாடுகள் - நிலவின் தென் துருவத்தில் அப்படி என்ன சிறப்பு?

வெள்ளிக் கோளுக்கு பெண்களின் பெயர்களை மட்டுமே வைக்க வேண்டும். வெள்ளியில் ஒரு பகுதிக்கு லக்ஷ்மி என்ற பெண் தெய்வத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கேலக்சி பெரும்கொத்துகளுக்கு பெரும் நதிகளின் பெயர்கள் வைக்கப்படுகின்றது. அப்படியாக சரஸ்வதி என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

நிலவில் பகுதிகளுக்கு பெயர் வைக்கவும் விதிமுறைகள் உள்ளன.

மறைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலான பிரபல விஞ்ஞானிகள், வானியல், கோளியல், விண்வெளி அறிவியல் ஆகியவற்றுடன் தொடர்புடைய, அந்தத் துறையில் கணிசமான பங்களிப்பு செய்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கண்டுபிடிப்பாளர்களின் பெயர்களை வைக்கலாம். இறந்த விண்வெளி வீரர்களின் பெயர்களை வைக்கலாம். வானிலை அல்லது மனநிலை சார்ந்த பெயர்களை வைக்கலாம்.

“சிவசக்தி என்ற பெயர் நிலாவில் பெயர் வைப்பதற்கான சர்வதேச விதிகளுக்கும் வரையறைகளுக்கும் முற்றிலும் விரோதமானது,” என பிபிசியில் மற்றொரு விஞ்ஞானி கூறியுள்ளார்.

"சிவசக்தி" நிலவில் இந்துகடவுளின் பெயரை சூட்டியது ஏற்புடையதா? வானியல் விதிகள் சொல்வதென்ன?
சந்திரயான் முதல் ககன்யான் வரை: சாதனை படைக்க தயாராகும் இஸ்ரோ- என்னென்ன விண்வெளி திட்டங்கள்?

ஒரு குறுங்கோளுக்கு வைக்கப்பட்டிருந்தால் இந்த பெயர் ஏற்கப்பட்டிருக்கும் என்கின்றனர். மேலும் சந்திரயான் போன்ற ஆய்வுகளை இஸ்ரோ மேற்கொள்ளத் தூண்டுதலாக இருந்த அப்துல் கலாம் அல்லது இஸ்ரோ வளர்ச்சியடையக் காரணமான சதீஷ் தவான், யு.ஆர்.ராவ் போன்றோரின் பெயரை வைப்பதே சரியானதாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

"சிவசக்தி" நிலவில் இந்துகடவுளின் பெயரை சூட்டியது ஏற்புடையதா? வானியல் விதிகள் சொல்வதென்ன?
சந்திரயான் 3: நிலவில் சிதறி கிடக்கும் 96 மனித கழிவு பைகள் - நாசாவின் திட்டம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com