சந்திரயான் 3: இதுவரை கண்டுபிடித்தது என்ன? - மனித குலத்துக்கு எப்படி உதவப்போகிறது?

விக்ரம் லேண்டர் நிலவின் வெப்பநிலையை கண்டறிந்துள்ளது. நிலவில் இருக்கும் பல்வேறு பொருட்கள் குறித்து ரோவர் அறிந்துள்ளது. இந்த தகவல்கள் நிலவில் குடியேறும் அல்லது விண்வெளி நிலையம் அமைக்கும் கனவுக்கு உதவுமா எனக் காணலாம்.
சந்திரயான் 3: இதுவரை கண்டுபிடித்தது என்ன? - மனித குலத்துக்கு எப்படி உதவப்போகிறது?
சந்திரயான் 3: இதுவரை கண்டுபிடித்தது என்ன? - மனித குலத்துக்கு எப்படி உதவப்போகிறது?Twitter

சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி உலகை திரும்பிப்பார்க்க வைத்தது இஸ்ரோ. பிரக்யான் ரோவரும் எதிர்பார்த்தபடி சரியாக வெளியே வந்து தனது வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டது.

நிலவில் பயணிப்பது பெரும் சவாலாக இருந்தாலும் தனக்கு முன்னால் 4 மீட்டர் விட்டமுள்ள பள்ளத்தை சரியாக சுற்றி கடந்தது ரோவர். நிலவின் தென் துருவம் முழுவதும் இப்படிப்பட்ட பள்ளங்கள் நிறைந்திருக்கின்றன.

பிரக்யான் ரோவர் இன்று விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக படமெடுத்து அனுப்பியிருக்கிறது.

விக்ரம் லேண்டர் நிலவின் வெப்பநிலையை கண்டறிந்துள்ளது. நிலவில் இருக்கும் பல்வேறு பொருட்கள் குறித்து ரோவர் அறிந்துள்ளது. இந்த தகவல்கள் நிலவில் குடியேறும் அல்லது விண்வெளி நிலையம் அமைக்கும் கனவுக்கு உதவுமா எனக் காணலாம்.

பிரக்யான் ரோவரில் இருக்கும் எல்.ஐ.பி.எஸ் - LASER Induced Breakdown Spectroscope என்ற கருவி நிலவின் மேற்பரப்பில் இருக்கும் தனிமங்களை கண்டறிந்துள்ளது.

கந்தகம்,  அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனிசு, சிலிகான், ஆக்சிஜன் போன்ற தனிமங்களின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதை அறியும் ஆய்வுகள் நடைபெற்றுவருவதாக கூறப்பட்டுள்ளது.

நிலவில் இப்போது கண்டறியப்பட்டுள்ள தனிமங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியவில்லை. ஆக்ஸிஜன் ஆக்சைடு வடிவத்திலும் ஹைட்ரஜன் ஹைட்ராக்சைடு வடிவிலும் இருக்கலாம்.

மற்ற தனிமங்களும் இதேப்போல வெவ்வேறு நிலையில் இருக்கலாம். இது குறித்து இஸ்ரோ ஆய்வு செய்து முடிவுகளை வெளிவிடும்.

சந்திரயான் 3: இதுவரை கண்டுபிடித்தது என்ன? - மனித குலத்துக்கு எப்படி உதவப்போகிறது?
"சிவசக்தி" நிலவில் இந்து கடவுளின் பெயரை சூட்டியது ஏற்புடையதா? வானியல் விதிகள் சொல்வதென்ன?

நிலவில் ஏற்கெனவே தண்ணீர் இருப்பதாக சந்திரயான் 1 கூறியிருந்தது. அதனை மேலும் உறுதி செய்ய முடிந்தால் மனிதர்கள் சுவாசிக்கவும், எரிபொருளாக பயன்படுத்த ஹைட்ரஜனும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கும்.

இதன் மூலம் விண்வெளி தளம் அமைக்க சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆய்வின் முடிவில் இஸ்ரோ கொடுக்கும் தகவல்கள் அடிப்படையில் தான் எதையும் கூறமுடியும் என அறிவியளாலர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்திரயான் 3: இதுவரை கண்டுபிடித்தது என்ன? - மனித குலத்துக்கு எப்படி உதவப்போகிறது?
சந்திரயான் 3: நிலவில் செய்யப்போகும் ஆய்வுகள் என்னென்ன? 14 நாட்களுக்கு பிறகு என்ன நடக்கும்?

விக்ரம் லேண்டரில் இருக்கும் சேஸ்ட் (ChaSTE) - Chandra’s Surface Thermo physical Experiment என்ற கருவி நிலவின் வெப்பநிலையைக் கண்டறிந்துள்ளது.

நிலவில் -10 டிகிரி முதல் 70 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மண்ணுக்கு கீழே 80மி.மீ ஆழத்தில் -10 டிகிரியும் தரைக்கு மேலே 20 மி.மீ-ல் 60 டிகிரியும் பதிவு செய்துள்ளனர்.

சந்திரயான் 3: இதுவரை கண்டுபிடித்தது என்ன? - மனித குலத்துக்கு எப்படி உதவப்போகிறது?
சந்திரயான் 3: நிலவில் சிதறி கிடக்கும் 96 மனித கழிவு பைகள் - நாசாவின் திட்டம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com