Monkey: உலகின் மிகச்சிறிய குரங்கு 15 செ.மீ தானா? - குரங்குகள் பற்றிய WOW Facts!

உலகில் 300க்கும் மேற்பட்ட குரங்கு வகைகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கின்றன. சில சமயம் புதுமையாகவும், வினோதமாகவும் குரங்குகள் செயல்படும். குரங்குகள் பற்றிய விசித்திர உண்மைகளைத் தெரிந்துகொள்ளலாம்.
Monkey: உலகின் மிகச்சிறிய குரங்கு 15 செ.மீ தானா? - குரங்குகள் பற்றிய WOW Facts!
Monkey: உலகின் மிகச்சிறிய குரங்கு 15 செ.மீ தானா? - குரங்குகள் பற்றிய WOW Facts!Pygmy Marmoset / Canva

விலங்கினங்களில் குரங்குகள் தான் மனிதர்களின் நெருங்கிய சொந்தக்காரர்கள் என்பது நமக்குத் தெரியும். இதனால் குரங்குகள் என்றாலே நமக்குப் பிடித்துவிடும். 

சுற்றுலாத்தளங்களுக்கு சென்றாலும் சரி பைரட்ஸ் ஆஃப் தி கரீபிடன் முதல் ரஜினியின் அருணாச்சலம் படம் வரை திரைப்படங்களிலும் சரி குரங்குகள் செய்யும் சேட்டைகளை பார்த்து ரசிப்போம்.

எகிப்து மம்மிகளிலும் மாமல்லபுரம் கற்சிலைகளிலும் குரங்களை வடித்து அழகு பார்த்துள்ளனர் நம் முன்னோர்கள். குரங்குகள் எப்போதுமே நமக்கு பிடித்தமானதாக இருந்தாலும் அவற்றைக் குறித்து எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்? 

அறிவியல் ஆய்வுகளின் விளைவாக நாம் அறிந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.

குரங்குகளுக்கும் மனித குரங்குகளுக்கும் என்ன வித்தியாசம்?

குரங்குகள், மனித குரங்குகள், முதனிகளை நாம் குழப்பிக்கொள்வதுண்டு. முதனிகளுக்கும் மனித குரங்குகளுக்கும் வால் இருக்காது. நாம் இங்கே பார்க்கப்போவது வால் இருக்கும் குரங்குகளைப் பற்றியே!

பழைய மற்றும் புதிய உலக குரங்குகள்

குரங்குகளையும் ஐரோப்பாவை மையமாக வைத்து பழைய உலக குரங்குகள், புதிய உலக குரங்குகள் என இரண்டுவகையாக பிரித்துள்ளனர். ஆசியா, ஆப்பிரிக்காவில் இருக்கும் பழைய உலக குரங்குகளுக்கு வால் இருந்தாலும் அது கூடுதல் உறுப்பாக தான் இருக்கும். வட மற்றும் தென் அமெரிக்காவில் இருக்கும் குரங்குகள் வாலை இன்னொரு கைப்போல பயன்படுத்தும்.

புதிய உலக குரங்குகள் தட்டையான மூக்கைக் கொண்டிருக்கும். மேலும் பெரும்பாலும் மரங்களில் மட்டும் வாழ்வதனால் அவற்றுக்கு வால் மிகவும் பயனுள்ள உறுப்பாக இருக்கும். 

மறுபக்கம் மரங்களிலும் தரைகளிலும் இருக்கக் கூடிய பழைய உலக குரங்குகள் அமெரிக்காவில் வாழும் குரங்குகளை விட பெரியதாக இருக்கும். கீழே அமருவதற்கு ஏதுவாக இவற்றின் பின் பக்கம் பட்டைகள் இருக்கும்.

Monkey: உலகின் மிகச்சிறிய குரங்கு 15 செ.மீ தானா? - குரங்குகள் பற்றிய WOW Facts!
ரெட் பாண்டா முதல் ஒட்டர் வரை : உலகிலேயே Cute -ஆன 10 விலங்குகள் எவை தெரியுமா?

உலகம் முழுவதும் வசிக்கும் குரங்குகள்

உலகில் எல்லா இடங்களிலும் குரங்குகள் வாழ்கின்றன. அண்டார்டிக்காவைத் தவிர. ஆஸ்திரேலியாவில் பூர்வீக குரங்கள் எதுவும் இல்லை. சரணாலயங்களில் மட்டுமேக் காணப்படும். 

பெரும்பாலும் வெப்பமண்டல பகுதிகளில் தான் குரங்குகள் இருக்கின்றன. கடினமான சூழல்களில் வாழும் குரங்குகளும் சில இருக்கின்றன. அவற்றில் ஒன்று ஜப்பானின் பனிபிரதேசங்களில் வாழும் மக்கா குரங்குகள். 

இவை முழுவதும் பனியால் சூழப்பட்ட இடத்தில் வசிக்கின்றன. இந்த குரங்குகள் மட்டும் தான் வெந்நீரில் குளிக்கும் தன்மையைப் பெற்றுள்ளன.

குரங்கு வகைகள்

உலகில் மொத்தம் 334 குரங்கு வகைகள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இன்னும் பல வகையான குரங்குகள் உலகில் இருந்திருக்கும். பல்வேறு காரணங்களுக்காக அவை அழிந்துவிட்டன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

உலகின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய குரங்கினம்!

உலகின் மிகப் பெரிய குரங்கினம் மாண்ட்ரில். ஒரு ஆண் மாண்ட்ரில் குரங்கு 3.3 அடி நீளம் வரை வளரும். 31 கிலோ எடை வரை வளரும். உயரம் எடை மட்டுமல்ல குரங்கினத்திலேயே மிகப் பெரிய பற்களைக் கொண்டுள்ளது இந்த இனம் தான்.

உலகிலேயே மிகச் சிறிய குரங்கு இனம் பிக்மி மர்மொசெட் (Pygmy Marmoset) அல்லது குக்குரங்கு. இது 5-6 இன்ச் நீளம் தான் வளரும். அதாவது நம் உள்ளங்கைக்குள்ளேயே அடங்கிவிடும். உடலைவிட நீளமான வால் இருக்கும் இந்த குரங்கு 100 கிராம் வரை தான் எடை இருக்குமாம். இந்த சிறிய உடலை வைத்துக்கொண்டு 16 அடி வரை இதனால் தாவ முடியும் என்கின்றனர். 

சமூக கட்டுமானம்

குரங்குகள் மனிதர்களைப் போலவே சமூக உயிரிகள் என்பதை நாம் அறிவோம். அவற்றில்  குழுக்களில் வரையறுக்கப்பட்ட சமூக படிநிலைகள் இருக்கின்றன.

குரங்குகள் பேன் பார்ப்பதன் மூலமாகவும் முதுகில் உள்ள அழுக்குகளை எடுத்துவிடுவதன் மூலமாகவும் ஒன்றுக்கு ஒன்று அன்பை வெளிப்படுத்தி பிணைப்பை உருவாக்கிக்கொள்கின்றன. இதனால் அவை சமூகமாக இணைந்து இருக்கின்றன. மேலும் இப்படி ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்வதனால் அவை ரிலாக்ஸாகவும் ஆனந்தமாகவும் உணரும்.

ஒரு குரங்குக் கூட்டத்திக்கு வலிமையான ஆண் குரங்கு தான் தலைவனாக இருக்கும். ஒவ்வொரு குரங்குக்கும் அதற்குரிய அதிகார வரையறைகள் இருக்கும். 

குரங்குகள் பலதார மணம் கொண்டவையாகதான் இருக்கும். கூட்டத்தின் கிட்டத்தட்டா எல்லா பெண்குரங்குகளும் வலிமையான தலைவர் குரங்குடன் உடலுறவில் இருக்க நினைக்கும். பெண் குரங்குகள் ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு மாதிரியாக தங்கள் இணையைத் தேர்ந்தெடுக்கும்.

சில குரங்கினங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற சமூக அமைப்புடன் வாழும்.

Monkey: உலகின் மிகச்சிறிய குரங்கு 15 செ.மீ தானா? - குரங்குகள் பற்றிய WOW Facts!
குதிக்க தெரியாத விலங்கு, கெட்டுப்போகாத உணவு, நடக்க முடியாத பறவைகள் - 20 சுவாரஸ்ய தகவல்கள்!

குரங்குகளின் தகவல் தொடர்பு

குரங்குகள் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு மாதிரியான ஒலிகளை எழுப்பும். கத்துவது, அலறுவது, முணுமுணுப்பது, ஊளையிடுவது என ஒவ்வொரு சத்தமும் பிற குரங்குளுடன் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புதான். 

proboscis monkey
proboscis monkey

பபூன்கள் 20 முதல் 30 வித்தியாசமான சத்தங்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்கின்றன. ஹௌலர் மன்கி என்ற குரங்கினம் தான் சத்தமான ஒலியை எழுப்பக் கூடிய குரங்கினம். இதன் சத்தம் 3 மைல் தொலைவு வரைக் கேட்குமாம்.

சத்தம் மட்டுமல்லாமல், முக பாவனைகள், உடல் மொழி, செய்கைகள் வழியாகவும் குரங்குகள் உரையாடிக்கொள்ளும். 

Monkey: உலகின் மிகச்சிறிய குரங்கு 15 செ.மீ தானா? - குரங்குகள் பற்றிய WOW Facts!
எட்டி : இமயமலை பனி மனிதன் இருப்பது உண்மையா?

வினோதமான குரங்குகள்

குரங்குகள் ஒவ்வொன்றும் தனித்துவமான இயல்புகளைக் கொண்டுள்ளன, இது சில சமயம் வினோதமாகவும் புதியதாகவும் இருக்கும். முன்னரேப் பார்த்த மக்கா குரங்குகளுக்கு முதன் முறையாக ஆய்வாளர்கள் ஸ்வீட் உருளைக் கிழங்குகளைக் கொடுத்திருக்கின்றனர். 

அதில் ஒரு பெண் குரங்கு உருளைக் கிழங்கு அழுக்காக இருப்பதனால் கழுவி சாப்பிடத் தொடங்கியிருக்கிறது.

மக்கா குரங்கு
மக்கா குரங்கு

இப்போது மொத்த குரங்குகளுமே உருளைக்கிழங்குகளைக் கழுவி சாப்பிடத் தொடங்கிவிட்டன.

இந்த குரங்குகளின் மற்றொரு கூட்டம் சில்கா மான்களின் முதுகில் சவாரி செய்து வருகின்றன. வேறொரு விலங்கினத்துடனும் நெருக்கம் காட்டும் பழக்கத்தை இந்த குரங்குகளில் மட்டுமே பார்க்க முடியும். இந்த குரங்குகள் மான்கள் முதுகிலும் அழுக்குகள் மற்றும் பூச்சிகளை எடுத்துவிடுவதனால் மான்களும் அவற்றுக்கு இலவசமாக சவாரிகளை வழங்குகின்றன.

Monkey: உலகின் மிகச்சிறிய குரங்கு 15 செ.மீ தானா? - குரங்குகள் பற்றிய WOW Facts!
ஜப்பான் : ஆண் துணை இல்லாமல் குட்டி போட்ட குரங்கு - மர்மத்தை விலக்கிய பூங்கா ஊழியர்கள்!

குரங்குகளுக்கும் மனிதர்களுக்குமான நெருக்கம்

பல மனித கலாச்சாரங்களில் குரங்குகள் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கின்றன. பண்டைய எகிப்தில் மம்மிகளாக குரங்குகள் இருப்பதும், அவற்றின் ஆசீர்வாதம் வேண்டும் என்பதற்காக பிரமிடுகளில் குரங்குகளின் சிலை வடிக்கப்படுவதும் நடந்திருக்கிறது

ராஜஸ்தானிலும் இன்னும் சில வடைந்திய பகுதிகளிலும் குரங்கு கோவில்கள் இருக்கின்றன.

நேபாளத்திலும் இந்துக்களும் புத்தமதத்தினரும் வழிபடும் கோவில் இருக்கிறது. இங்குள்ள குரங்குகளை புனிதமானவையாக வணங்குகின்றனர். இவற்றைப் பற்றி புராணங்களும் இருக்கின்றனர்.

இந்தியாவிலும் இராமாயணத்தில் குரங்குகள் கதாப்பாத்திரமாக இருந்துள்ளன.

Monkey: உலகின் மிகச்சிறிய குரங்கு 15 செ.மீ தானா? - குரங்குகள் பற்றிய WOW Facts!
தெர்மல் கேமராவில் பிடிப்பட்ட பிரமாண்டமான 'மனித குரங்கு' - வெளிச்சத்துக்கு வரும் மர்மம்

புத்திசாலி குரங்குகள்

குரங்குகள் தங்களுக்கு தேவையானவற்றை அடைய தங்கள் கை, கால்களைத் தவிர மூளையையும் பயன்படுத்தும். இதனால் கருவிகளைக் கையாண்டு உணவை அடையும் ஒரே விலங்கினமாக இருக்கின்றன.

பைரேட் ஆஃப் தி கரேபியன், நைட் அட் தி மியூசியம் போன்ற படங்களில் வரும் கேபுசின் குரங்குகள் தான் குரங்கினத்திலேயே மிகவும் அறிவார்ந்தவையாக கருதப்படுகின்றன.

கேபுசின் குரங்குகள்
கேபுசின் குரங்குகள்

இவற்றிடம் கிடைக்கும் விதைகளை திறக்க கற்களை எடுத்து அவற்றை உடைக்கும் பழக்கம் இருக்கின்றது. மேலும் இவை சில செடிகள் மற்றும் பூச்சிகாளை மருந்தாகவும் பயன்படுத்தும்.

கொசுக்கள் மற்றும் பூச்சிகள் தங்கள் அருகில் வராமல் இருக்க மரவட்டைகளை கசக்கி உடலில் தேய்த்துக்கொள்ளும். குரங்குகளுக்கு பயிற்சி அளித்தால் அவற்றால் நம்முடன் சைகையில் பேச முடியும்.

எண்களை இவற்றால் புரிந்துகொள்ள முடியும். கூட்டல், கழித்தல் கூட கற்றுக்கொள்ளுமாம்!

Monkey: உலகின் மிகச்சிறிய குரங்கு 15 செ.மீ தானா? - குரங்குகள் பற்றிய WOW Facts!
ஓநாய், குரங்கு, கோழியால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்: மிருகங்களாகவே மாறிய மனிதர்களின் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com