
குழந்தைகள் எப்போதும் நம்மை ஆச்சரியப்படுத்த தவறியதில்லை. அவர்களின் வெகுளித்தனமான செயல்களில் தான் நிபந்தனையற்ற அன்பையும் நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. இந்த பதிவும் ஒரு குழந்தையை பற்றியதே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கும் ஃபேன் பேஸ் குறித்து நாம் அனைவரும் அறிவோம். இதற்கு முழுக் காரணம் அந்த அணியின் கேப்டன் எம் எஸ் தோனி தான். அதுவும் நடப்பு ஐபிஎல் தொடரில், சென்னை அணி எங்கு விளையாடினாலும், அந்த மைதானங்கள் எல்லாமே மஞ்சள் நிற ஜெர்சியால் நிரம்பியிருந்தது.
சமயத்தில் எதிரணியின் ரசிகர்கள் கூட சென்னை அணிக்கு சப்போர்ட் செய்தனர். ஒரு வேளை தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள் என்ற பேச்சுக்களும் இருந்தன.
ஒரு அணி, அல்லது ஒரு குறிப்பிட்ட வீரர் பிடித்திருந்தால், அந்த அணி வெற்றிபெறவேண்டும் என நாம் நினைப்போம். குழந்தைகள் ஒரு படி நம்மை அந்த விஷயத்தில் விஞ்சும்.
இங்கும் சிஎஸ்கே அணியின் ஒரு குட்டி ஃபேன், தன் அணிக்கு விடாது ஆதரவை தெரிவித்து வருகிறாள். அந்த குழந்தைக்கு சர்பிரைஸ் கொடுத்து அசத்தியுள்ளது, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்.
பாவனா என்ற பெண் தன் ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் பகிர்ந்திருந்தார். அதில், தன் சகோதரரின்/சகோதரியின் குழந்தை, எல்லா சிஎஸ்கே மேட்சுக்கு முன்னரும், வீட்டில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாம் சேகரித்து வைத்து மேட்ச் பார்ப்பதாகவும், அப்படி செய்தால் அணி வெற்றி பெரும் என நம்புவதாகவும் பதிவிட்டிருந்தார்
உடன், அந்த சிறுமி தன் மஞ்சள் நிற பொம்மைகள் எல்லாவற்றுடன், மஞ்சள் டிசர்ட் அணிந்து போட்டியை பார்க்கும் புகைப்படமும் பகிரப்பட்டிருந்தது.
இது இணையவாசிகளின் கவனத்தை பெற்றது.
பலரும் சென்னை அணியின் இந்த இளம் ரசிகையை கியூட் என்று கூறி பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்து வந்தனர். மேலும் குழந்தைகளின் சிந்தனைகள் கலங்கமற்றதாக இருப்பதையும் மெச்சினர்.
இந்த பதிவை கவனித்த ஸ்விக்கி இன்ஸ்டாமாட்டும் ஒரு சர்பிரைஸ் கொடுத்துள்ளது. அந்த குழந்தையின் நம்பிக்கையை போற்றும் விதமாக, அவர்களிடம் இருக்கும் மஞ்சள் நிறத்தில் உள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் அக்குழந்தைக்கு கிஃப்ட் ஹாம்ப்பராக கொடுத்தனர்.
ஸ்விக்கியின் இந்த செயலும், அந்த குழந்தையும் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust