கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்- ஆச்சரியத்தில் மருத்துவர்கள்!

ஆரம்ப காலக்கட்டத்தில், அவரது கர்ப்பத்தை கலைத்துவிடலாமா அல்லது குழந்தை பிறப்பு வரை முயற்சித்து பார்க்கலாமா என்ற குழப்பம் இருந்தது. பரிசோதனையில், கருவில் இருந்த குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத காரணத்தால், குழந்தை பிறப்பு வரை முயற்சிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டடது.
newborn baby
newborn babyTwitter

சாலை விபத்தில் பலமுறை தலையில் அறுவை சிகிச்சை செய்து எய்ம்ஸ்-ல் 7 மாதங்களாக சுயநினைவின்றி இருந்த 23 வயது பெண், கடந்த வாரம் ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் குப்தா கூறும்போது, ​​“23 வயது இளம்பெண் ஒருவர் 2022 ஏப்ரல் 1ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார்.

விபத்தின் போது கணவன்-மனைவி இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. கணவருக்கு தலையில் காயம் ஏதும் ஏற்படவில்லை, மனைவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, அவர் ஓரமாக அமர்ந்திருந்ததால் கீழே விழுந்தார்.

அவர் முதலில் புலந்த்ஷரில் உள்ள அப்துல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

விபத்து நடந்தபோது 40 நாட்கள் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டது. அந்த பெண்ணிற்கு வென்டிலேட்டர் உதவியுடன் அவசர அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

தொடர்ந்து அவர் சுய நினைவு இழந்து கோமாவுக்கு சென்றார். அவர் கர்ப்பமுற்று 18 வாரங்கள் கழித்து, அவரிடம் நடத்தப்பட்ட அல்ட்ராசவுண்டு ஸ்கேனில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது.

newborn baby
கீரைக்கு நோ, கேரட் ஓகே: கருவில் இருக்கும் குழந்தைகள் சுவை அறியுமா? அறிவியல் சொல்வதென்ன?

இந்நிலையில், அந்த பெண் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி இயல்பான முறையில் 2.5 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவர் சுய நினைவை திரும்ப பெற 10 முதல் 15 சதவீதம்தான் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்ப காலக்கட்டத்தில், அவரது கர்ப்பத்தை கலைத்துவிடலாமா அல்லது குழந்தை பிறப்பு வரை முயற்சித்து பார்க்கலாமா என்ற குழப்பம் இருந்தது. பரிசோதனையில், கருவில் இருந்த குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத காரணத்தால், குழந்தை பிறப்பு வரை முயற்சிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டடது.

22 ஆண்டுகால பணிக்காலத்தில் இப்படி ஒரு சிகிச்சையை முதல் முறையாக செய்தேன்" என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநரான மருத்துவர் குப்தா தெரிவித்தார்.

newborn baby
கர்ப்பம் தெரிந்த 48 மணி நேரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண் : அறிகுறி இல்லாதது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com