பிரியாணி தவிர ஹைதராபாத்துல வேறு என்ன ஸ்பெஷல் இருக்கு? |Wow Facts

பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நகரம் பணக்கார நிஜாம்களின் தாயகமாக இருந்தது. ஆரம்ப காலத்தில் பல கோட்டைகள், அரண்மனைகள் அங்கு இருந்தன. இன்று, பல வரலாற்று கட்டமைப்புகள் நிறைந்த இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக ஹைதராபாத் விளங்குகிறது.
ஹைதராபாத் பிரியாணி
ஹைதராபாத் பிரியாணிTwitter

முத்து நகரம் என்று அன்புடன் அழைக்கப்படும் ஹைதராபாத் இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நகரம் பணக்கார நிஜாம்களின் தாயகமாக இருந்தது. ஆரம்ப காலத்தில் பல கோட்டைகள், அரண்மனைகள் அங்கு இருந்தன.

இன்று, பல வரலாற்று கட்டமைப்புகள் நிறைந்த இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக ஹைதராபாத் விளங்குகிறது.

ஹைதராபாத்தை இன்னும் சிறப்பான நகரமாக மாற்றும் சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோவாக அறியப்படுகிறது. 1666 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இது உலகின் மிகப்பெரிய ஸ்டுடியோ வளாகமாக கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளது.

இந்த திரைப்பட ஸ்டுடியோவை 1996 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ராமோஜி ராவ் கட்டினார்.

மிகப்பெரிய ஒற்றைக்கல் புத்தர் சிலையின் தாயகம்

ஹைதராபாத்தில் உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல் புத்தர் சிலை உள்ளது. ஹுசைன் சாகர் ஏரியின் மையப்பகுதியில் உயர்ந்து நிற்கும் இந்த சிலை ஒரே ஒரு பாறையால் ஆனது.

படகு மூலம் மட்டுமே செல்ல முடியும். பிரம்மிக்க வைக்கும் இந்த சிலை சுமார் 450 டன் எடையும் 18மீ உயரமும் கொண்டது.

வரலாற்றில் பணக்கார இந்தியரின் வீடு

ஹைதராபாத் நிஜாம் மிர் உஸ்மான் அலி கான் ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராகவும், உலகின் ஆறாவது பணக்காரராகவும் இருந்தார்.

அந்த நபரிடம் 50 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஒரு வைர paperweight இருந்ததாம்.

சார்மினார் சின்னம்

சார்மினார் உண்மையில் எந்த காரணத்திற்காக கட்டப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஹைதராபாத்தின் புகழ்பெற்ற அடையாளமான சார்மினார், வரலாற்று நினைவுச்சின்னங்களைப் போல் எந்த மன்னராலும் கட்டப்படவில்லை.

கொடிய கொள்ளை நோயிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்ததன் அடையாளமாக இது குலி குதுப் ஷாவால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹைதராபாத் பிரியாணி
பேய் நகரங்கள் முதல் லவ்வர்ஸ் Spot வரை உக்ரைனைப் பற்றி அறியாத 7 சுவாரஸ்ய தகவல்கள்

முத்துக்களின் நகரம்

ஹைதராபாத் பெரும்பாலும் முத்துக்களின் நகரம் என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் இது இந்தியாவில் இயற்கையான முத்துக்களை உற்பத்தி செய்யும் இடங்களில் ஒன்றாகும்.

பிரியாணியின் புகலிடம்

பிரியாணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஹைதராபாத்தான். பிரியாணி சொர்க்கமாக இருக்கும் ஹைதராபாத், அதன் விருந்தினர்களுக்கு பலவிதமான மணம் மிக்க பிரியாணிகளை வழங்குவதில் பெயர் பெற்றது.

இந்த நகரம் 26 க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகளை வழங்குகிறது. ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி மற்றும் ஹைதராபாத் ஜாஃப்ரானி பிரியாணி போன்றவை பிரபலமானவை

ஹைதராபாத் பிரியாணி
Biryani : 'ஈரான் டூ இந்தியா' பிரியாணி கடந்து வந்த பாதை - ஓர் ஆச்சரிய வரலாறு

உலகின் மிகப்பெரிய ஸ்நோ பார்க்

பழைய நகரம் என்றாலும் கூட உலகின் மிகப்பெரிய பனி பூங்கா இங்கு உள்ளது.

3 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து இருக்கும் இந்த பனிக்கட்டி பூங்காவை பார்க்க ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

ஹைதராபாத் பிரியாணி
பேய் இறால் முதல் கடல் தேவதை வரை : ஒளி ஊடுருவக் கூடிய 10 உயிர்கள் - ஆச்சரிய தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com