இந்தியாவில் தத்கல் பாஸ்போர்ட் என்றால் என்ன? இதனை நாம் எப்படி பெறலாம்?

பொதுவாக இந்த பாஸ்போர்ட் பெற நாம் விண்ணப்பித்த பிறகு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். தற்போது அதனை எளிமையாக்கியுள்ளனர்.
இந்தியாவில் தத்கல் பாஸ்போர்ட் என்றால் என்ன? இதனை நாம் எப்படி பெறலாம்?
இந்தியாவில் தத்கல் பாஸ்போர்ட் என்றால் என்ன? இதனை நாம் எப்படி பெறலாம்?canva

ஒரு நாடு விட்டு நாடு செல்ல கடவுச்சீட்டு, அதாவது பாஸ்போர்ட் மிக அவசியம். இதனை நாம் பெற நிறைய விதிமுறைகள் உண்டு. இந்தியாவில் பாஸ்போர்ட் பெற வயது வரம்பு, சிறார்களுக்கு 15 முதல் 18. 18 வயது கடந்தவுடன் இந்தியாவில் நாம் பாஸ்போர்ட் பெறலாம்

நாம் பாஸ்போர்ட் பெற நம் மீது எந்த சட்டரீதியிலான குற்றச்சாட்டுகள் இருக்கக்கூடாது. மேலும் ஒரு அரசிதழ் அதிகாரியின் கையொப்பமும் தேவை.

பொதுவாக இந்த பாஸ்போர்ட் பெற நாம் விண்ணப்பித்த பிறகு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். தற்போது அதனை எளிமையாக்கியுள்ளனர்.

டிரெயினில் நாம் டிக்கெட் எடுப்பது போல இதிலும் தத்கல் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்

தத்கல் பாஸ்போர்ட் என்றால் என்ன?

தத்கல் பாஸ்போர்ட் என்பது, விண்ணப்பித்த சில நாட்களிலேயே கிடைக்கும் ஆவணமாகும். இதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட்டு, இதன் பிராசஸும் விரைவாக்கப்பட்டுள்ளது.

அதாவது விண்ணபித்த நாள் இல்லாமல், அதிலிருந்து மூன்றாவது அலுவல் நாளில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்கிறது பாஸ்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியா தளம். 18 வயதை கடந்தவர் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு அரசிதழ் அதிகாரியின் கையெழுத்தும் தேவை இல்லை என தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

யாரெல்லாம் விண்ணப்பிக்க இயலாது?

தத்கல் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் வழங்குவதற்கான இறுதி அதிகாரம் பாஸ்போர்ட் அலுவலகத்திடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தத்கல் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க பின்வரும் பிரிவுகள் தகுதியற்றவை:

 • பெயரில் பெரிய மாற்றம் உள்ளவர்கள்

 • RPO வின் அதிகார வரம்பிற்கு வெளியே தற்போதைய முகவரி உள்ளவர்கள்

 • அரசு உதவியுடன் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள்

 • நாடு கடத்தப்பட்டவர்கள் அல்லது அவசரகாலச் சான்றிதழில் பயணம் செய்தவர்கள்

 • நாகா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், சிறார்கள் உட்பட (18 வயதுக்குட்பட்டவர்கள்)

 • நாகாலாந்திற்கு வெளியே வசிப்பவர்கள்

 • ஜம்மு காஷ்மீர் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், சிறார்கள் உட்பட (18 வயதுக்குக் குறைவானவர்கள்)

 • குற்றவியல் நீதிமன்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்

 • போலீஸ் ரிக்கார்ட் உள்ளவர்கள், கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்பட்டவர்கள் அல்லது பாஸ்போர்ட்டினை அடிக்கடி தொலைப்பவர்கள், போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்றவர்கள்

இந்தியாவில் தத்கல் பாஸ்போர்ட் என்றால் என்ன? இதனை நாம் எப்படி பெறலாம்?
உலகம் முழுவதும் பயணிக்க இவர்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் தேவையில்லையா? யாருக்கு இந்த சலுகை?

எப்படி விண்ணப்பிக்கலாம்?

 • பாஸ்போர்ட் சேவை மைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.

 • அதன் பிறகு நமது ஐடி, கடவுச்சொல் வைத்து உள்நுழையவேண்டும்

 • புதிதாக விண்ணப்பிப்பவர்கள், ஃபிரெஷ் என்று தேர்ந்தெடுக்கவேண்டும். அல்லது மீண்டும் பெறுபவர்கள் ரீ இஷ்யு ஆப்ஷனை க்ளிக் செய்யலாம்

 • அதன் பிறகு தத்கல் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

 • திரையில் விண்ணப்பம் தோன்றும். அதில் தேவையான தரவுகளை நிரப்புங்கள்

 • விண்ணப்பத்தை சமர்பித்துவிட்டு, இதற்கான கட்டணத்தை செலுத்துங்கள்.

 • தத்கல் முறையில் 3,500 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.

 • அருகில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு சென்று உங்கள் நேர்காணல்களை முடித்துக்கொண்டு பாஸ்போர்ட்டை பெற்று விடலாம்

நமது பாஸ்போர்ட் 10 ஆண்டுகாலம் வரை செல்லுபடியாகும்

இந்தியாவில் தத்கல் பாஸ்போர்ட் என்றால் என்ன? இதனை நாம் எப்படி பெறலாம்?
ஈராக் முதல் பாகிஸ்தான் வரை: இந்த நாடுகளின் பாஸ்போர்ட் ஏன் செல்வாக்கற்றவை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com