
தற்போதைய டிஜிட்டல் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப ஆதிக்கம் என்றால் அது இணையப் பயன்பாடு தான்.
ஒவ்வொருவரும் தங்களின் ஸ்மார்ட் போனுடன் கனெக்ட்டாகி இருக்கும் இணையத்துடனும்தான் ஒவ்வொரு நிமிடத்தையும் கடத்தி வருகின்றனர்.
அதுவும் கொரோனா காலப் பொதுமுடக்கத்தின் போது மக்களை சற்று ஆசுவாசப்படுத்தியது இந்த இணையம் என்றே சொல்லலாம்.
இன்றைய தேதியில் உலகில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 450 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகில் ஒவ்வொரு நிமிடத்திலும் இணையத்தில் மக்கள் எவ்வளவு நேரம் செயல்பாட்டில் இருக்கிறார்கள் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
1. ஒவ்வொரு நிமிடமும் facebook இல் 90000 logins செய்யப்படுகிறது.
2. வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு கோடியே அறுபது லட்சம் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.
3. YouTube இல் ஒவ்வொரு நிமிடமும் 41 லட்சம் வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன.
4. கூகுள் பிளே ஸ்டோர் மூலம் ஒரு நிமிடத்தில் 3.42 லட்சம் ஆப்ஸ் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
5. ஒவ்வொரு நிமிடமும் இன்ஸ்டாகிராமில் 43000 பதிவுகள் பதிவேற்றப்படுகின்றன.
6. ட்விட்டரில் ஒவ்வொரு நிமிடமும் 4.52 லட்சம் ட்வீட்கள் அனுப்பப்படுகின்றன.
7. ஒரு நிமிடத்தில் 9.90 லட்சம் ஸ்வைப்கள் டிண்டரில் அனுப்பப்படுகின்றன.
8. ஒவ்வொரு நிமிடமும் வெவ்வேறு டொமைன்கள் மூலம் 15.6 கோடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன.
9.நெட்ஃபிளிக்ஸ்: நிமிடத்துக்கு 4,04,444 மணி நேர வீடியோக்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
10. ஒரு நிமிடத்தில் 15000 GIFகள் மெசஞ்சர் வழியாக அனுப்பப்படுகின்றன.
11. அமேசானில் நிமிடத்துக்கு 6,659 பொருள்கள் வாங்கியவர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
12. கூகுளில் ஒரு நிமிடத்தில் 35 லட்சம் வினவல்கள் தேடப்படுகின்றன.
13.LinkedIn -ல் நிமிடத்துக்கு 69,444 வேலைகளுக்கு விண்ணப்பிக்கப்படுகிறது.
14. உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் 18 லட்சம் புகைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust