ஏலத்திற்கு வரும் இந்தியாவின் எதிரி சொத்து - இந்த Enemy Property என்பது என்ன? | Explained

இந்தியா இந்த ‘எதிரிகளின்’ அசையும் சொத்துக்களான தங்கம், பங்குகள் போன்றவற்றை விற்று ரூ.3,400 கோடி ஏற்கனவே பெற்றுவிட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அசையா சொத்துக்களை விற்கவுள்ளது அரசு.
ஏலத்திற்கு வரும் இந்தியாவின் எதிரி சொத்து - இந்த Enemy Property என்பது என்ன? | Explained
ஏலத்திற்கு வரும் இந்தியாவின் எதிரி சொத்து - இந்த Enemy Property என்பது என்ன? | ExplainedCanva (re

இந்தியாவில் உள்ள எதிரி சொத்துக்களை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது மத்திய அரசு. சுமார் 12,611 எதிரி சொத்துக்கள் (enemy property) இந்தியாவில் உள்ளன, இவற்றின் மதிப்பு ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாய்.

முன்னதாக, பங்குகள் மற்றும் தங்கம் போன்ற அசையும் எதிரி சொத்துக்களை மத்திய அரசு விற்றது, இப்போது அசையா எதிரி சொத்துக்கள் விற்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Enemy Property அல்லது எதிரி சொத்து என்றால் என்ன?

1947 பிரிவினை, 1962 இந்தியா சீனா போர் மற்றும் 1965,71ல் நடந்த இந்தியா பாகிஸ்தான் போர்களுக்கு பிறகு பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் சீனாவுக்கு இந்தியாவில் வாழ்ந்துவந்த மக்கள் சிலர் குடிபெயர்ந்தனர். அப்படி குடிபெயர்ந்தவர்கள் இந்தியாவில் விட்டுச்சென்ற சொத்துக்கள் தான் இந்த எதிரி சொத்துக்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த சொத்துக்கள் இருக்கின்றன.

சட்டத்தின் படி, எதிரி சொத்து என்பது ஒரு எதிரி, எதிரி பொருள் அல்லது எதிரி நிறுவனத்திற்கு சொந்தமான, வைத்திருக்கும் அல்லது நிர்வகிக்கப்படும் எந்தவொரு சொத்தையும் குறிக்கிறது.

எதிரி என்பது யார்?

இந்தியா போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லது இந்தியாவிற்கு எதிராக விரோத நடவடிக்கைகளை எடுத்தவர்கள் அல்லது இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் போன்ற தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை எதிரிகள் எனக் குறிப்பிடுகிறார்கள்.

பாதுகாவலர்கள்

இந்த சொத்துக்களை பாதுகாக்க The Custodian of Enemy Property for India (CEPI) என்ற அலுவலகம் 1939ஆம் ஆண்டு Defence of India Actன் கீழ் உருவாக்கப்பட்டது. இவர்களின் வாயிலாக மத்திய அரசு தான் இந்த எதிரி சொத்துக்களை கொண்டுள்ளது.

1965 போரைத் தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் 1966 இல் தாஷ்கண்ட் பிரகடனத்தில் கையெழுத்திட்டன. போருக்குப் பிறகு இரு தரப்பிலும் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை திரும்பப் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதியை மீறி பாகிஸ்தான் 1971ல் எதிரி சொத்துக்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தியது.

ஏலத்திற்கு வரும் இந்தியாவின் எதிரி சொத்து - இந்த Enemy Property என்பது என்ன? | Explained
அரிசி ஏற்றுமதியை தடை செய்த இந்தியா; ஏன்? இதனால் எந்தெந்த நாடுகளுக்கு பாதிப்பு? | Explained

சொத்து சிக்கல்

இந்தியா 1968ல் இந்த எதிரி சொத்துக்களை பாதுகாக்க எதிரி சொத்து சட்டத்தை உருவாக்கியது. இந்த சட்டத்தில் திருத்தம் மற்றும் சரிப்பார்ப்புகள் உடைய மசோதா 2017ல் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த மசோதாவில் எதிரி மற்றும் எதிரி சொத்து என்ற வார்த்தைகளின் வரையறையும் விரிவாக்கப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம், இந்த எதிரி சொத்துக்களின் சொந்தக்காரர்களின் வாரிசுகள், சொத்துக்களின் மீது உரிமைக்கோர தொடங்கியது தான்.

மஹ்முதாபாத் என்ற இடத்தின் ராஜாவாக இருந்தவர், இந்தியாவில் சீதாபூர், லக்னோ, நைனிதால் ஆகிய இடங்களில் சொத்துக்கள் வைத்திருந்தார். ஆனால் 1947ல் பிரிவினையின் போது இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார் ராஜா. 1957ல் பாகிஸ்தான் நாட்டின் குடிமகனாக உரிமைப்பெற்று, அதன் பின்னர் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். அங்கேயே இறந்தும்போனார் ராஜா. ஆனால், ராஜாவின் மனைவி மற்றும் மகன் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். ராஜா மறைந்த பிறகு அவரது மகன், வாரிசு என்ற உரிமையுடன் இந்த சொத்துக்களுக்கு உரிமைக்கோரி வழக்கு தொடர்ந்தார்.

2005ல் உச்ச நீதிமன்றம், இந்த சொத்துக்களை அவருக்கு அளித்து தீர்ப்பளித்தது. ஆனால் 2017ல் எதிரி சொத்து சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அதன்படி ஒருவர் இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னர், அவர்களது குடும்பத்தினர் இங்கு தங்கியிருந்தாலும், வாரிசுகள் சொத்தில் உரிமைக்கோர இயலாது என்று மாற்றியமைக்கப்பட்டது.

ஏலத்திற்கு வரும் இந்தியாவின் எதிரி சொத்து - இந்த Enemy Property என்பது என்ன? | Explained
இந்திய ரூபாய் நாணயங்களில் இருக்கும் குறியீடுக்கு காரணம் என்ன? | Explained

எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் எதிரி சொத்துக்கள் உள்ளன?

இந்தியாவில் மொத்தம் 12, 611 எதிரி சொத்துக்கள் உள்ளன. அதில் 12,485 பாகிஸ்தான் நாட்டவர்களுடையது. 126 சொத்துக்கள் சீன குடிமகன்கள் உடையது.

உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, கோவா, தெலங்கானா, திரிபுரா, மேகாலயா என பல்வேறு மாநிலங்களிலும் இந்த எதிரி சொத்துக்கள் இருக்கின்றன. முன்பே குறிப்பிட்டடது போல இந்தியா இந்த ‘எதிரிகளின்’ அசையும் சொத்துக்களான தங்கம், பங்குகள் போன்றவற்றை விற்று ரூ.3,400 கோடி சம்பாதித்திருக்கிறது.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அசையா சொத்துக்களை விற்கவுள்ளது அரசு.

ஏலத்திற்கு வரும் இந்தியாவின் எதிரி சொத்து - இந்த Enemy Property என்பது என்ன? | Explained
Haryana: 6 பேர் பலி, பற்றி எரியும் மாநிலம், பரவும் கலவரம் - என்ன நடக்கிறது? | Explained

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com