
சமீபத்திய ஆய்வில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை ஆகாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
ப்ராப் ஈக்விட்டி என்ற நிறுவனம் இந்தியாவின் 9 முக்கிய நகரங்களில் ஆய்வு மேற்கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த 9 நகரங்களில் மொத்தம் 5,15,169 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.
2023 மார்ச் மாத நிலவரப்படி அந்த எண்ணிக்கை 5,26,914 ஆக இருந்தது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை 2 சதவீதம் குறைந்துள்ளது.
அதிகபட்சமாக, மும்பையில் உள்ள தானே நகரில் வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.
ஏப்ரல் முதல் ஜூன் கால இடைவெளியில் தானேவில், கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் 1.07 லட்சம் வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.
ஜனவரி - மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில், சென்னையில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 18 சதவீதம் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புனேவில் விற்பனையாகாத வீடுகளின் பங்குகள் 9 சதவீதம் அதிகரித்து 69,331 இருந்து 75,905 யூனிட்டாக உயர்ந்துள்ளது.
ஹைதராபாத்தில், விற்பனையாகாத வீட்டுமனை பங்குகள் 5 சதவீதம் உயர்ந்து 95,106 இருந்து 99,989 யூனிட்டாக உள்ளது.
கொல்கத்தாவில் விற்பனையாகாத வீட்டுமனை பங்குகள் 20 சதவீதம் அதிகரித்து 18,247 இருந்து 21,947 யூனிட்டாக உள்ளது.
சென்னையில் விற்பனையாகாத வீட்டுமனை பங்குகள் 18 சதவீதம் சரிந்து 24,362 இருந்து 19,900 யூனிட்டாக உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp