குறைந்த செலவில் இந்தியா முழுக்க பயணிக்க விருப்பமா? அப்ப இந்த கட்டுரை உங்களுக்கானதுதான்

தனிப் பயணங்களை எல்லோராலும் நினைத்த நேரத்தில் மேற்கொள்ள முடியாது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்தியாவுக்குள்ளேயே தனிமனிதர்களாகப் பாதுகாப்பாக, குறைந்த செலவில் பயணிக்கக் கூடிய இடங்களை இக்கட்டுரையில் பட்டியலிட்டுள்ளோம்.
Pushkar
PushkarTwitter

பயணங்கள் மனிதனை மகிழ்விக்கும். ஆனால் தனிமனிதப் பயணங்கள் அம்மனிதனைப் பண்படுத்தும், அவருள் இருக்கும் மனிதத்தன்மையை நிலைநிறுத்தும், உலகம் குறித்த அவரின் பார்வையைச் செம்மைப்படுத்தும். மொத்தத்தில் அப்பயணங்கள் ஒரு தலைகீழ் மாற்றத்தை உண்டாக்கும்.

அப்படிப்பட்ட தனிப் பயணங்களை எல்லோராலும் நினைத்த நேரத்தில் மேற்கொள்ள முடியாது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்தியாவுக்குள்ளேயே தனிமனிதர்களாகப் பாதுகாப்பாக, குறைந்த செலவில் பயணிக்கக் கூடிய இடங்களை இக்கட்டுரையில் பட்டியலிட்டுள்ளோம்.

புஷ்கர்

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள இந்த புனித நகரத்தில் கோயில்களுக்கும், கண்களை இமைக்கவிடாமல் பார்க்கச் செய்யும் கட்டுமானங்களுக்கும், 24 மணி நேரமும் வயிற்றுக்கு வேலை கொடுக்கும் உணவுகளுக்கும் பஞ்சமில்லை. புஷ்கரில் உள்ள பிரம்ம தேவர் கோயில் உலகப் பிரசித்த பெற்ற சுற்றுலாத்தலம். இங்கு இறைவருக்குக் காட்டப்படும் தீப ஆரத்தில் உங்களை மெய்மறக்கச் செய்யும். ஆன்மிகத்தில் நாட்டமிருப்பவர்கள், மன அமைதியை விரும்புபவர்கள், புகைப்படங்கள் மீது காதல் கொண்டோர்களை அன்புடன் வரவேற்கிறது புஷ்கர்.

ஜெய்சல்மார்

திரைகளிலும், திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்த மணற் குன்றுகளை ஜெய்சல்மாரில் உங்கள் கண்களை கசக்கி கசக்கிப் பார்த்து ஆனந்தப்படலாம். அற்புத காட்சிகளைத் தாண்டி, பாலைவனத்தில் மேற்கொள்ளும் ஒட்டக ரைடுகள், ஜீப் சஃபாரி ரைடுகள் உங்களுக்கு வேறொரு அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி பல அதிரடி விளையாட்டுகளுக்கு பஞ்சமில்லாத ஊரில், ஓர் அற்புத பாலைவன சூரிய அஸ்தமனத்தையும் கண்டு களிக்கலாம். வெல்கம் டூ ஜெய்சல்மார்.

மெளலினாங் (Mawlynnong)

மெளலினாங் (Mawlynnong)
மெளலினாங் (Mawlynnong)Twitter

மேகாலயாவே பிரமிப்பூட்டும் மாநிலம் என்றால், தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் அற்புத கிராமம் மெளலினாங். எண்ணிலடங்காத இயற்கை அழகு நிறைந்த இடங்கள், நம்மைப் பார்த்து சிரித்து அரவணைப்பது போல நம்மைச் சூழ்ந்திருக்கும் இயற்கை போன்றவைகளைப் பார்க்கவும் உணரவும் காண கண் கோடி வேண்டும். லிவிங் ரூட்ஸ் பிரிட்ஜ், மெளலினாங் நீர்வீழ்ச்சி, ப்ரும் கொஞ்மென் வியூ பாயின்ட் என பார்க்கவும் ரசிக்கவும் பல இடங்கள் இருக்கின்றன. மறக்காமல் இந்தியாவின் சுத்தமான ஆறுகளில் ஒன்றான உம்காட் ஆற்றில் படகு சவாரி செல்ல மறக்காதீர்கள்.

ஆக்ரா

ஆக்ரா
ஆக்ராTwitter

காதல் சின்னமான தாஜ்மஹால் இருக்கும் நகரத்துக்கு அதிக அறிமுகம் தேவை இல்லை. ஆக்ரா ஒரு மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் தொல்லியல் துறை சார்ந்த விஷயங்களைப் பார்த்து ரசிப்பதற்கான நகரம். எனவே வரலாறு, தொல்லியல் போன்ற விஷயங்களில் அதிக நாட்டமுள்ளவர்கள் புறப்பட வேண்டிய நகரம் ஆக்ரா.

வாராணாசி

வாராணாசி
வாராணாசி Twitter

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தொகுதி, இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்று. திரும்பும் திசை எங்கும் கோயில்கள், புனிதத் தலங்கள். மாலையில் நடக்கும் கங்கை ஆரத்தி ஆத்திகர், நாத்திகர் வேறுபாடின்றி அனைவரையும் பரவசப்படுத்தும். அது போக சுவையான வட இந்திய உணவுகள் கிடைக்கும் என பலராலும் பாடல்பெற்ற பெற்ற தளமிது. ராமா, கிருஷ்ணா, சிவனே... என கோயில்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, சுவையான உணவு பக்கம் திரும்ப நினைப்போர் இப்போதே புறப்படுங்கள் வாராணாசிக்கு.

Pushkar
ஹனிமூன் போறீங்களா? இந்த ஐந்து கடற்கரையை டிரை பண்ணுங்களேன்! | Travel

அம்ரித்சர்

அம்ரித்சர்
அம்ரித்சர்Twitter

சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயில் உள்ள இடம். டர்பன் கட்டிய சீக்கிய நண்பர்கள் கூவிக் கூவி விற்கும் குல்சாக்கள், லஸ்ஸிக்களுக்கு மயங்காத மனிதர்கள் உண்டா என்ன? உணவு காதலர்கள் கட்டாயம் தரிசிக்க வேண்டிய புனித உணவுத் தலம் அம்ரித்சர். அது போக ஜாலியன் வாலா பாக், வாகா எல்லை போன்றவைகளை பார்க்க மறந்துவிடாதீர்கள்.

குறிப்பு: ஒரே டிஷ்ஷை அதிகம் சாப்பிடாதீர்கள் பிறகு மற்றவைகளுக்கு வயிற்றில் இடம் இருக்காது.

கோவா:

கோவா
கோவாTwitter

90ஸ் கிட்ச்களின் கனவு தேசம்.அழகிய கடற்கரைகள், மனிதனை வேறு ஒரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் இரவு வாழ்கை, கடல்சார் உணவு வகைகள் என கோவாவை ஒரு வரைமுறைக்குள் அடக்குவது கடினம். ஒரு முறை தனியாக பயணம் செய்து அந்த கோவாவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்களேன். அதைச் சொல்வதற்கு வார்த்தை இல்லை.

கோவா சென்று வந்தால் 9 மாதங்களுக்குள் திருமணமாகும் என ஒரு புரளி வேரு ஓட்டத்தில் இருக்கிறது. உங்களுக்கு கோவா சென்று வந்த பிறகுதான் திருமணமானது என்றால் எங்களுக்கும் கொஞ்சம் தெரியப்படுத்துங்கள். நாங்களும் ஒரு எட்டு போய் பார்த்து வருகிறோம்.

Pushkar
Travel : வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் இந்தியாவின் 7 இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்

ஹம்பி:

ஹம்பி
ஹம்பிTwitter

சோழர்களுக்கு எப்படி தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவை இன்றும் அவர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக விளங்குகிறதோ, அப்படி விஜய நகர பேரரசர்களின் கலை நயத்துக்கும், திறனுக்கும் சான்றாக இன்று வரை நிமிர்ந்து நிற்கிறது ஹம்பி நகரம். விஜய விட்டலா கோயில், வீருபக்‌ஷா கோயில்... என கோயில்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். வரலாற்றை மோகிக்கும் நண்பர்களுக்கு இது விருந்து தான்.

Pushkar
Travel : இயற்கை எழில் கொஞ்சும் தமிழகத்தின் 5 சுற்றுலா தலங்கள் - இவற்றைத் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:


Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com