லீவு நாளீல் ஆஃபிஸ்லேர்ந்து Call பண்ணினா ஒரு லட்சம் Fine - இந்தியாவில் ஓர் அடடே நிறுவனம்

அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டைக் கூட மறக்கலாம். ஆனால் வீட்டில் இருக்கும்போது, நண்பர்களுடன் சுற்றிக்கொண்டிருக்கும்போது, ஹாலிடேவில் எஞ்சாய் செய்துகொண்டிருந்தாலும், அலுவலக உலகத்திலிருந்து நம்மால் விடுபடவே முடியாது.
லீவு நாளீல் ஆஃபிஸ்லேர்ந்து Call பண்ணினா ஒரு லட்சம் Fine - இந்தியாவில் ஓர் அடடே நிறுவனம்
லீவு நாளீல் ஆஃபிஸ்லேர்ந்து Call பண்ணினா ஒரு லட்சம் Fine - இந்தியாவில் ஓர் அடடே நிறுவனம்twitter

விடுமுறை நாளின் போது அலுவலகத்திலிருந்து வேலை சம்பந்தமாக யாராவது கூப்பிட்டால், அந்த ஊழியருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது டிரீம் 11 நிறுவனம்.

வேலைக்கு என்று வந்துவிட்டாலே ஃப்ரீ டைம் என்ற ஒன்றை நம்மால் நினைத்துகூட பார்க்க முடியாது. நமக்கு விடுமுறை என்றாலும், அலுவலகத்தில் மற்றவர் பணியாற்றி கொண்டிருப்பார்கள்.

அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டைக் கூட மறக்கலாம். ஆனால் வீட்டில் இருக்கும்போது, நண்பர்களுடன் சுற்றிக்கொண்டிருக்கும்போது, ஹாலிடேவில் எஞ்சாய் செய்துகொண்டிருந்தாலும், அலுவலக உலகத்திலிருந்து நம்மால் விடுபடவே முடியாது.

இந்த இடைவெளியை சமாளிக்க புதிய அறிவிப்பு ஒன்றை கொடுத்துள்ளது டிரீம் 11 நிறுவனம். டிரீம் 11 Unplug என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுளது.

இதன் மூலம் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு வாரக் காலத்திற்கு அலுவலகம் சார்ந்த எந்த வித ஃபோன் கால்கள், மின்னஞ்சல், குறுஞ்செய்தி என எதற்கும் பதிலளிக்க தேவையில்லை.

ஒரு வேளை அலுவலகத்திலிருந்து யாரேனும் UNPLUGஇல் இருக்கும் ஊழியரை தொடர்புகொண்டால், தொடர்பு கொள்ளும் ஊழியருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று டிரீம் 11 நிறுவனர்கள் ஹர்ஷ் ஜெயின் மற்றும் பவித் சேத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

லீவு நாளீல் ஆஃபிஸ்லேர்ந்து Call பண்ணினா ஒரு லட்சம் Fine - இந்தியாவில் ஓர் அடடே நிறுவனம்
Cruise : சொகுசு கப்பலில் உள்ள ரகசிய அறைகள் - முன்னாள் ஊழியரின் அடடே தகவல்!

டிரீம் 11 தன் லின்க்ட் இன் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டிருந்தது. எந்த ஒரு ஊழியரும், அவருக்கு சொந்தமான விடுமுறை சமயத்தில் அலுவலகத்தின் மேல் கவனம் செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

”நமக்கு நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிடுவதும், விடுமுறை நாளில் ஓய்வெடுப்பதும் எல்லோருக்கும் அவசியமான ஒன்று என நாங்கள் கருதுகிறோம். இது, அவர்களது மன நிலையை அமைதியாக்கும். வேலைக்கு வரும் மற்ற நாட்களில் அவர்களின் ஈடுபாடும் அதிகமாக இருக்கும்” என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் டாப் பொசிஷனில் இருப்பவர் முதல் ஃபிரெஷர்ஸ் வரை எல்லோருமே இந்த புதிய திட்டத்திற்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்

லீவு நாளீல் ஆஃபிஸ்லேர்ந்து Call பண்ணினா ஒரு லட்சம் Fine - இந்தியாவில் ஓர் அடடே நிறுவனம்
எலியை பிடித்துக் கொடுத்தால் ரூ. 1 கோடி சம்பளம்; பலே ஜாப் ஆஃபரை அறிவித்த மேயர் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com