பழங்குடியினர் உருவாக்கிய வேர்ப் பாலம் : மேகாலயாவின் சுற்றுலா அடையாளமாக மாறியது எப்படி?

இந்த பாலங்களை அமைக்க 15 ஆண்டுகள் வரை ஆகியிருக்கிறது. மேகாலயா வேர்ப் பாலங்களில் சில 500 ஆண்டுகளை விட பழமையானவையாக உள்ளன.
The Living Root Bridges of Cherrapunjee, India
The Living Root Bridges of Cherrapunjee, IndiaTwitter

வளர்ந்து வரும் நவீன உலகில் பல அழகழகான கட்டுமானங்களை கண்டு ரசித்திருப்பீர்கள்! ஆனால் இயற்கையாகவே அமைந்த பல அதிசயங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் ஒன்று தான் இந்த வேர் பாலம்.

சிமெண்ட் பாலம், கம்பி பாலம் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள், அது என்ன வேர் பாலம் என்று யோசிக்கிறீர்களா? அது எங்கே இருக்கிறது எப்படி உருவானது என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவின் தென் பகுதியில் உயிருள்ள மரங்களின் வேரைக் கொண்டு இயற்கையான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலங்கள் வேர் பாலங்கள் என்று அறியப்படுகிறது.

இவ்வகை பாலங்கள் காசி மற்றும் ஜெய்ந்தியா மலைப்பகுதிக்கு இடையில் ஷில்லாங் பீடபூமி பகுதி மக்களால் அமைக்கப்படுகின்றன.

மேகாலயாவில் உள்ள பழங்குடியின மக்கள், ஓடைக்கரையோரம் ஒரு ரப்பர் மரத்தின் வேரை கொஞ்சம் கொஞ்சமாக பின்னி, ஓடையைக் கடக்கும் ஒரு பாலத்தையே உருவாக்கினர்.

காலப் போக்கில் அந்த வேர்கள் தடித்து, திரண்டு அந்தப் பாலம் ஒரு வலிமையான, மனிதர்கள் நடந்து செல்லக்கூடிய ஒரு பாலமாக உருவெடுத்துவிட்டது.

The Living Root Bridges of Cherrapunjee, India
தலைகீழ் நீர்வீழ்ச்சி முதல் தங்கப்பாறை வரை - புவியீர்ப்பு விசை இல்லாத 5 விசித்திர ஸ்பாட்ஸ்!

எப்படி உருவாக்கினார்கள்?

ஆறுகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே பாலங்கள் கட்டுவதற்கான தேவைக்கு மரங்களை பயன்படுத்தி கொண்டனர்.

பாலம் அமைக்க வேண்டிய பகுதியில் வளைந்து கொடுக்கும் மர வேர்களை முறுக்கி ஆற்றின் மறுபுறம் நோக்கி செலுத்தி, அவை மறு கரையை அடைந்தது மண்ணைத் தொட்டு அங்கும் வேர் பரவும் விதம் அமைக்கின்றனர்.

உதாரணமாக வேர்களை பாக்கு மரத்தில் வெற்றிலைக் கொடிகள் சுற்றி செல்வதுபோல அமைக்கிறார்கள். வேர்களை விரும்பிய திசையில் வளர்வதற்காக, அதனை சீர்படுத்தி, நீரோடைகளுக்கு இடையே உறுதியான, வாழும் பாலத்தை அவர்கள் உருவாக்கினர்.

இந்த பாலங்களை அமைக்க 15 ஆண்டுகள் வரை ஆகியிருக்கிறது. மேகாலயா வேர்ப் பாலங்களில் சில 500 ஆண்டுகளை விட பழமையானவையாக உள்ளன.

சிரபுஞ்சியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் வாழும் மக்களால் இந்த பாலங்கள் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் அமைந்துள்ள நோங்கிரியாட் கிராம மக்கள் இதை 'உம்ஷியாங் டபுள் டெக்கர் ரூட் பாலம்' என்று அழைக்கின்றனர்.

The Living Root Bridges of Cherrapunjee, India
பிசோனியா: பறவைகளைக் கொல்லும் அதிசய மரம் - திகிலூட்டும் காரணம் தெரியுமா?

சுற்றுலா அடையாளம்

அந்த ஊரில் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும் இத்தகைய வேர்ப்பாலங்கள் குறித்த பெருமை பரவ தொடங்கின. கொஞ்ச நாளில் இந்த வேர்ப் பாலங்கள் மேகாலயாவின் சுற்றுலா அடையாளமாகவே உருவாகிவிட்டன.

இந்த பாலத்தை உருவாக்கிய பழங்குடி முன்னோர்களின் பெயர்களை கல்வெட்டாகப் பொறித்து, தாய்லாந்து இளவரசியால் 2016ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

The Living Root Bridges of Cherrapunjee, India
வைர மழை பொழியும் இந்த இடம் குறித்து தெரியுமா? - விஞ்ஞானிகள் சொல்லும் ஆச்சர்ய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com