
உலகமே உள்ளங்கையில் இண்டர்நெட் மூலம் சுழன்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பேய் இருக்கிறது, சூனியம் செய்பவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்மை மேலும் கீழும் பார்த்துவிட்டு " யாருடா இவன் பைத்தியம் போல உளறிட்டு இருக்கான்" என்று அவர்களின் மயிண்ட் வாய்ஸ் இருக்கும்.
ஆனால், இந்தியாவில் சூனியம் செய்வதற்கு தனி கிராமமே இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அசாமின் மோரிகான் மாவட்டத்தில், கவுகாத்தியிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள மாயோங் கிராமம் தான் சூனியத்திற்கு பெயர்போன கிரமமாக அறியப்படுகிறது.
மாயோங் எனும் இந்த சிறிய நகரத்திற்கு என தனிப்பான்மையான கலாச்சாரங்கள் இருக்கின்றன. இந்த நகரம் வனத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மாயோங்கில் போபிடோரா வனவிலங்கு சரணாலயம் அமைந்திருக்கிறது. மாயோங் எனும் இந்த நகரம் சூனிய செயல்களுக்கு மிகவும் பிரபலமான இந்திய நகரமாக விளங்குகிறது.
மாயோங்கிற்கு இந்தியாவின் பல இடங்களில் இருந்து மாய மந்திரம், சூனியம் போன்றவற்றை கற்றுக் கொள்ள பலர் வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்திய அரசாங்கம் கடந்த 2002-ம் ஆண்டு மாயோங்-ல் மாயோங் சென்ட்ரல் மியூசியம் ஒன்ற திறந்தது.
இங்கு பல்வேறு புத்தகங்கள், புராண இதிகாசங்கள் மற்றும் கைகளால் எழுதப்பட்ட மிகப்பழமையான ஆயுர்வேத மற்றும் சூனியம் பற்றிய புத்தகங்கள் இருக்கின்றன. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இந்த மியூசியம் சென்று பார்த்து வரலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust