சியாச்சின் : போர், குளிர், மரணம் - எதற்கும் உதவாத பனிப்பாறைக்கு ஓயாத சண்டைகள் ஏன்?

இராணுவ சண்டைகளை விட சியாச்சினின் கடுமையான தட்பவெப்ப நிலைக் காரணமாகவும், இயற்கை இடர்கள் காரணமாகவும் பல வீரர்கள் இறந்தனர். ஆனாலும் இந்தியாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து இராணுவ வீரர்களை சியாச்சினுக்கு அனுப்பின.

சியாச்சின் : போர், குளிர், மரணம் - எதற்கும் உதவாத பனிப்பாறைக்கு ஓயாத சண்டைகள் ஏன்?
சியாச்சின் : போர், குளிர், மரணம் - எதற்கும் உதவாத பனிப்பாறைக்கு ஓயாத சண்டைகள் ஏன்? Twitter

இமையமலையில் கிழக்கு கரக்கோரம் பகுதியில் அமைந்துள்ளது சியாச்சின்.

இது கரக்கோரத்தில் உள்ள மிக உயரமான பனிப்பாறையாகும். கடல் மட்டத்தில் இருந்து 18,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

மேலும் இது 78 கிலோமீட்டர் நீளமானது. துருவ பகுதிகளில் இல்லாத மிக நீளமான பனிப்பாறையும் இதுதான்.

சியாச்சினின் பெரும்பகுதிகள் இந்தியா, பாகிஸ்தானுக்கு நடுவில் லைன் ஆஃப் கன்ட்ரோலில் உள்ளன.

இரண்டு நாடுகளும் சியாச்சினுக்கு உரிமை கோரிவருவதனால் அடிக்கடி சண்டை நடக்கும் பகுதியாகவும், பலத்த இராணுவபாதுகாப்பு இருக்கும் பகுதியாகவும் விளங்குகிறது சியாச்சின்.

இதனால் சியாச்சின் பகுதி உலகிலேயே மிக உயரமான போர்களமாக கருதப்படுகிறது.

1971 இந்தியா - பாகிஸ்தான் போருக்கு பிறகு சியாச்சின் சர்ச்சைக்குரிய பகுதியாக உருவானது.

1972ல் இரண்டு நாடுகளுக்கும் இடையில் சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அதில் சியாச்சின் பனிப்பாறையை சொந்தம் கொண்டாடப் போவது யார் என வரையறுக்கப்படவில்லை.

ஐ.நா அதிகாரிகள் இந்த குளிரான எதற்கும் தேவையில்லாத பகுதியால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் விவாதம் எழாது என கருதியிருக்கலாம். ஆனால் அது தவறானது.

1970 மற்றும் 80களின் முற்பகுதியில் பாகிஸ்தான் அரசின் அனுமதியுடன் பல மலையேற்றங்கள் சியாச்சினில் நடைபெற்றன.

இப்படி பயணங்களை அனுப்புவதன் மூலம் சியாச்சினை உரிமைகோரலாம் என பாகிஸ்தான் எண்ணியது.

ஆனால் 1984ம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவம் சியாச்சின் பகுதியில் நுழைந்தபோது இந்திய இராணுவம் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையை செயல்படுத்தியது.


சியாச்சின் : போர், குளிர், மரணம் - எதற்கும் உதவாத பனிப்பாறைக்கு ஓயாத சண்டைகள் ஏன்?
யர்சகும்பா : அழிவின் விளிம்பில் 'இமயமலை வயாக்ரா' - என்ன காரணம்? என்ன நடக்கிறது?

இதன் மூலம் சியாச்சின் மற்றும் அதன் துணை ஆறுகள் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1984 முதல் 1999 வரை பல சண்டைகள் சியாச்சினுக்காக நடைபெற்றன.

இராணுவ சண்டைகளை விட சியாச்சினின் கடுமையான தட்பவெப்ப நிலைக் காரணமாகவும், இயற்கை இடர்கள் காரணமாகவும் பல வீரர்கள் இறந்தனர்.

என்ன ஆனாலும் இந்தியாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து இராணுவ வீரர்களை சியாச்சினுக்கு அனுப்பின.


சியாச்சின் : போர், குளிர், மரணம் - எதற்கும் உதவாத பனிப்பாறைக்கு ஓயாத சண்டைகள் ஏன்?
38 ஆண்டுக்கு பிறகு மீட்கப்பட்ட இறந்த ராணுவ வீரரின் உடல் - ஒரு திக் திக் பயணம்

வருடத்தின் எல்லா காலத்திலும் 6,000 மீட்டர் உயரத்தில் கடும் குளிரில் இராணுவ வீரர்கள் தங்கிவந்தனர்.

2003ம் ஆண்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் போது இரண்டு நாடுகளிலும் 2000த்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உறைபனி மற்றும் பனிச்சறுக்கு காரணமாக உயிரிழந்தனர்.

சியாச்சினில் இரண்டு இராணுவமும் பல புறக்காவல்நிலையங்களை வைத்துப் பராமரித்து வருகின்றனர்.

இராணுவத்தை தவிர சியாச்சின் பனிப்பாறையில் யாரும் வசிக்கவில்லை.

சியாச்சினுக்கு மிக அருகாமையில் என்றால் 16 கிலோமீட்டர் தொலைவில் வார்ஷி என்ற கிராமம் அமைந்துள்ளது.

சியாச்சின், சீனா மற்றும் பாகிஸ்தானைப் பிரிப்பதனால் இராணுவ அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்குகிறது.

ஆளரவம் இல்லாமல் மிகக் குறைந்த இராணுவ சாலைகளைக் கொண்டுள்ள இந்த இடம் இன்றும் பதட்டத்துக்கு உரிய பகுதியாக விளங்குகிறது.


சியாச்சின் : போர், குளிர், மரணம் - எதற்கும் உதவாத பனிப்பாறைக்கு ஓயாத சண்டைகள் ஏன்?
420 மனிதர்கள், 24 கோயில், செருப்பு அணியாத கால்கள்: கொடைக்கானல் அருகே ஓர் ஆச்சர்ய கிராமம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com