
குழந்தையாக இருந்த போது இவரை பிடிக்காத இந்தியர்கள் இல்லை. குறிப்பாக 90'ஸ் கிட்ஸ்களுக்கு சக்திமான் என்றாலே உற்சாகம் பிறந்துவிடும். ஆனால் இப்போது தங்களின் ஆதர்சமான சக்திமானை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.
சக்திமான் கதாப்பாத்திரத்தில் நடித்த முகேஷ் கண்ணா கூறிய கருத்தால் இணைய உலகம் கடுப்பாகியிருக்கிறது. அவரது செயல் வெட்கக்கேடானது என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
முகேஷ் கண்ணா Bheeshm International என்ற பெயரில் யூடியூப் சேனல் வைத்திருக்கிறார். இதில் அவரது கருத்துக்களை வீடியோவாக பதிவிடுவது வழக்கம். அப்படி பெண்கள் குறித்து அவர் கூறிய கருத்து தான் தற்போது நெட்டிசன்களின் கோவத்துக்கு காரணமாக உள்ளது.
``உடலுறவை விரும்பிக் ஆண்களிடம் கேட்கும் பெண்கள் பெண்களே அல்ல. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள்.
இணையத்தில் பெண்களால் ஆண்கள் கவர்ந்திழுக்கப்படுவதால் ஆண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெண்கள் மோசடிகளை நடத்த முயற்சி செய்கிறார்கள். அப்பாவி ஆண்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள். அவர்களின் நிர்வாணப் படங்களை அனுப்பி உங்களின் நிர்வாணப்படங்களை அனுப்பும்படி வற்புறுத்தி, பணத்திற்காக உங்களை மிரட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். இதனால் சமூக ஊடக தளங்களில் கவனமாக இருக்க வேண்டும்." என்று கூறினார்.
அத்துடன், "பெண்கள் வரம்புகளுக்குள் இருக்கவும், மரபுகளை மதிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்" என்று அவர் கூறியிருந்தார்.
சமுக வலைத்தளத்தை கவனமாக உபயோகிக்க வேண்டும் என்ற கருத்தை அவர் சொல்ல வந்திருந்தாலும் அதற்காக பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust