Rahul Gandhi: எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் - ட்விட்டர் பயோவை மாற்றிய ராகுல்!

அவரது ட்விட்டர் பயோவில், “இது ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ கணக்கு. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம் பி” என்று மாற்றப்பட்டுள்ளது.
Rahul Gandhi: எம் பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் - ட்விட்டர் பயோவை மாற்றிய ராகுல்!
Rahul Gandhi: எம் பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் - ட்விட்டர் பயோவை மாற்றிய ராகுல்!ட்விட்டர்

எம் பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தனது ட்விட்டர் பயோவை மாற்றியுள்ளார் ராகுல் காந்தி.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

4 ஆண்டுகளாக நீடித்த இவ்வழக்கில், கடந்த 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. முதலில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது அவரது எம் பி பதவியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மறுநாளே ராகுல் காந்தி எம் பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக நாடாளுமன்ற அறிக்கை வெளியானது. நாடு முழுக்க சர்ச்சையை கிளப்பியது இந்த நடவடிக்கை.

இந்நிலையில், எம் பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தனது ட்விட்டர் பயோவை மாற்றியிருக்கிறார் ராகுல் காந்தி.

அவரது ட்விட்டர் பயோவில், “இது ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ கணக்கு. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம் பி” என்று மாற்றப்பட்டுள்ளது.

Rahul Gandhi: எம் பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் - ட்விட்டர் பயோவை மாற்றிய ராகுல்!
ராகுல் காந்தி பதவிநீக்கம் : "இது சர்வாதிகார நடவடிக்கை" - என்ன நடக்கிறது காங்கிரஸில்?

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் பாஜக அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம் எனவும், அதானி குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதால் பாஜக அரசு பயந்திருக்கிறது, பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது எனவும் காங்கிரஸ் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு முப்பது நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, ஜாமினும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Rahul Gandhi: எம் பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் - ட்விட்டர் பயோவை மாற்றிய ராகுல்!
ராகுல் காந்தி : "மன்னிப்பு கேட்கப்போவதில்லை, என் பெயர் சாவர்கர் அல்ல" - என்ன பேசினார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com