இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ எங்கு அறிமுகமாகிறது? என்னென்ன வசதிகள் இருக்கிறது?

உலகளவில் இந்த வாட்டர் மெட்ரோ திட்டம் முன்மாதிரியாக இருந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் கொச்சி வாட்டர் மெட்ரோ இந்தியாவின் தொழில்நுட்ப திறன்களை எடுத்துரைக்கும் ஒரு புதுமையான திட்டமாகவும் இது இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
 PM Modi to launch India's first water metro in Kochi
PM Modi to launch India's first water metro in Kochi Twitter

கேரள மாநிலம் கொச்சியில், நாட்டின் முதல், 'வாட்டர் மெட்ரோ' எனப்படும் நீர்வழித் தடத்தில் இயங்கும் மெட்ரோ சேவை துவக்கப்படவுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.

கேரளாவின் "கனவு திட்டம்" தான் இந்த கொச்சி வாட்டர் மெட்ரோ, இது கொச்சியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை விரைவுபடுத்தும் என்று கூறப்படுகிறது.

சுமார் ரூ.1,136 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது இந்த திட்டம்.

உலகளவில் இந்த வாட்டர் மெட்ரோ திட்டம் முன்மாதிரியாக இருந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் கொச்சி வாட்டர் மெட்ரோ இந்தியாவின் தொழில்நுட்ப திறன்களை எடுத்துரைக்கும் ஒரு புதுமையான திட்டமாகவும் இது இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கொச்சி வாட்டர் மெட்ரோ தான் உலகிலேயே மிகப்பெரிய மின்சார படகுகள் என்று கூறப்படுகிறது

இந்த வாட்டர் மெட்ரோ, 78 மின்சார படகுகள் மற்றும் 38 முனையங்களுடன் கொச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 PM Modi to launch India's first water metro in Kochi
இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை - எங்கு தொடங்குகிறது தெரியுமா?

கேரள அரசின் சொந்த திட்டமான இதற்கு, ஜெர்மன் நிதி நிறுவனமான KfW நிறுவனமும் நிதியளித்துள்ளன.

வாட்டர் மெட்ரோவில் குளிரூட்டப்பட்ட அறைகள், வசதியான இருக்கைகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவு அறைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான டாக்பேக் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்த வசதிகள் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

படகுகளுக்கு உதவும் கிடைக்கும் வகையில் நான்கு அவசரகால சேவைக்கு மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முதல் கட்டமாக, உயர் நீதிமன்றம் - வைபின் டெர்மினல்களில் இருந்து வைட்டிலா-கக்கநாட் டெர்மினல்களுக்கு விரைவில் சேவை தொடங்கப்படும்

குளிரூட்டப்பட்ட படகுகளில் செலவு குறைந்த மற்றும் பாதுகாப்பான பயணம், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதைத் தவிர்க்க உதவும். "கொச்சி 1" கார்டைப் பயன்படுத்தி பயணிகள் கொச்சி மெட்ரோ மற்றும் வாட்டர் மெட்ரோ இரண்டிலும் பயணிக்கலாம்.

 PM Modi to launch India's first water metro in Kochi
சென்னை : ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் அறிமுகம் - எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com