காட்டுக்குள் தொலைந்து போன உரிமையாளர்; மீட்க உதவிய வளர்ப்பு நாய் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

வழக்கம் போல கடந்த சனிக்கிழமை அன்றும் சேகரப்பா விறகு எடுத்துவர காட்டுக்கு சென்றிருக்கிறார். காலை ஆறு மணிக்கு சென்றால், வழக்கமாக 10 மணிக்கு திரும்பி வருபவர் அன்று வராததால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
Dog
Dog Canva

தொலைந்த உரிமையாளரை கண்டுபிடிக்க அவரது வளர்ப்பு நாய் உதவியுள்ளது.

கர்நாடகாவின் ஷிமோகா என்ற இடத்தை சேர்ந்தவர் சேகரப்பா. இவர் அருகில் உள்ள அயனுயூர் என்ற இடத்தில் ஒரு தனியார் ஓட்டலில் பணியாற்றி வருகிறார். வேலைக்கு செல்லும் முன் தினமும் அருகில் உள்ள காட்டுக்கு சென்று விறகு வெட்டி எடுத்து வருவது வழக்கம். கடந்த பத்து வருடங்களாக சேகரப்பா இதை செய்து வருகிறார்.

வழக்கம் போல கடந்த சனிக்கிழமை அன்றும் சேகரப்பா விறகு எடுத்துவர காட்டுக்கு சென்றிருக்கிறார். காலை ஆறு மணிக்கு சென்றால், வழக்கமாக 10 மணிக்கு திரும்பி வருபவர் அன்று வராததால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

சேகரப்பாவின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என தனிதனி குழுக்களாக பிரிந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 50 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் சேகரப்பாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதன் பின்னர் அவரது குடும்பத்தினர் சேகரப்பா ஆசையாக வளர்த்த டாமி என்ற நாயின் உதவியை நாடினர். டாமி கடந்த 7 வருடங்களாக சேகரப்பாவுடன் காட்டுக்கு சென்று வருகிறது. இதனால் அவரை கண்டுபிடிக்க டாமி உதவும் என இவர்கள் நினைத்துள்ளனர்.

Dog
ஆயிரக்கணக்கான மனிதர்களை காத்த நாய் குட்டி - ஒரு சூப்பர் ஹீரோ கதை!

மீட்புக்குழுவினரை விட்டுவிட்டு தனியாக தனது உரிமையாளரை தேடி சென்றாள் டாமி. மற்றோரு புறம் காட்டுக்குள் மீட்புக்குழுவினரும் தேடி வந்துள்ளனர். பின்னர் ஒரு மரத்தின் அடியில் தனது உரிமையாளரை கண்டுபிடித்த டாமி, குரல் கொடுத்துள்ளது.

டாமியின் குரலை கேட்டு, சேகரப்பா இருந்த இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். அங்கு சேகரப்பா சுய நினைவை இழந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்

சேகரப்பாவை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அதிக வெப்பம் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதனால் அவர் மயக்கம் அடைத்திருக்கலாம் என தெரிவித்ததாக டைம்ஸ் நவ் தளம் தெரிவிக்கிறது.

தொலைந்த உரிமையாளரை கண்டுபிடிக்க உதவிய நாய் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Dog
குண்டடி பட்டும் நாட்டிற்காக போராடிய நாய் - பயங்கரவாதிகளை வீழ்த்தியது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com