காய்கறி வியாபரியின் அக்கவுண்ட்டுக்கு கிரெடிட் ஆன 172 கோடி : தலை சுற்றி போன நபர் - எங்கே?

விஜய்யிடம் விசாரித்தபோது, முதலில் தனது வங்கி கணக்கில் இவ்வளவு பணம் வர வாய்ப்பே இல்லை என தெரிவித்தவர், தன்னுடைய ஆவணங்களை பயன்படுத்தி வேறு யாராவது இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
Over Rs 172 crore transferred to vendor's account, investigation on in uttar pradesh
Over Rs 172 crore transferred to vendor's account, investigation on in uttar pradesh Twitter

தள்ளுவண்டியில் காய்கறி விற்பவரின் அக்கவுண்ட்டுக்கு 172 கோடி ரூபாய் கிரெடிட் ஆனதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பெரும் தொகை ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது.

ஆயிரம், லட்சம் இல்லை, 172 கோடி ரூபாய் ஒரு வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை ஆகியிருக்கிறது.

இதனையடுத்து, விசாரணையில் இறங்கிய வருமான வரித்துறையினர் ஆன்லைன் மூலம் 172.8 கோடி ரூபாய் பணம் டிரான்ஸாக்ஷன் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.

Indian rupees
Indian rupeesTwitter

இதனை தொடர்ந்து யாருடைய வங்கி கணக்கிற்கு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை விசாரித்தபோது அது

விஜய் ரஸ்தோகி என்பவருடையது என்று தெரிந்துகொண்டனர்.

உத்தர பிரதேச மாநிலத்தின் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள மைகர் ராய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜய் ரஸ்தோகி.

இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபரம் செய்து வருகிறார்.

விஜய் ரஸ்தோகியிடம் விசாரித்தபோது, முதலில் தனது வங்கி கணக்கில் இவ்வளவு பணம் வர வாய்ப்பே இல்லை என தெரிவித்தவர், தன்னுடைய ஆவணங்களை பயன்படுத்தி வேறு யாராவது இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

Over Rs 172 crore transferred to vendor's account, investigation on in uttar pradesh
"வங்கி வேலையை விட்டுட்டு யூடியூப் ஆரம்பிச்சோம்" - யூடியூபர்கள் நிறைந்த ஒரு கிராமம்
income tax
income taxtwitter

இதுகுறித்து பேசியுள்ள விஜய் ரஸ்தோகி,

"என்னுடைய வங்கி கணக்கில் இவ்வளவு தொகை இருப்பதை அறிந்து நானும் எனது குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சி அடைந்தோம். என்னுடைய பான் கார்டு மற்றும் பிற ஆவணங்களை தவறுதலாக பயன்படுத்தி யாரோ எனது பெயரில் வங்கியில் கணக்கை துவங்கியுள்ளனர்.

நான் இந்த கணக்கை வைத்திருக்கவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் அவரிடத்தில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Over Rs 172 crore transferred to vendor's account, investigation on in uttar pradesh
வங்கி கணக்கிற்கு தவறுதலாக வந்த பணம் : தர மறுக்கும் நபர் - இத்தனை லட்சமா? | அடடா நிகழ்வு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com