நிதிவன் : இரவில் இந்த கோவிலுக்கு சென்றால் கண் தெரியாமல் போகுமாம்? மர்ம பின்னணி என்ன?

பொதுவாக மரங்கள் என்பவை எப்படி இருக்கும்? கிளைகள் விரிந்து மேல்நோக்கி உயரச் செல்லும். வேர்களோ மண்ணை நோக்கி உள்ளே பாய்ந்து செல்லும். ஆனால் இந்த வனத்தில் அப்படியே நேர்மாறாக உள்ளது, மண்ணுக்குள் இருக்கும் வேர்கள் வெளியே வருகிறது. அதேபோல் கிளைகள் கீழ்நோக்கிச் செல்கின்றன.
Nidhivan and the mysteries around it
Nidhivan and the mysteries around itTwitter

உத்திரப் பிரதேச மாநிலம், மதுரா நகரில் உள்ள பிருந்தாவனத்தில் நிதிவன் கோவில் இருக்கிறது

கிருஷ்ணர் மற்றும் ராதையைப் பின்பற்றுபவர்களுக்கு, நிதிவன் புனிதமான தலமாக விளங்குகிறது.

துளசி காடு என்றும் அழைக்கப்படும் நிதிவன் புராணங்களால் சூழப்பட்ட இடம். நீங்கள் நிதிவனுக்குச் செல்லும்போது, ​​வனப்பகுதி முழுவதும், ஜோடியாக முறுக்கப்பட்ட மரங்களை காணலாம்.

வனமே வித்தியாசமானது

பொதுவாக மரங்கள் என்பவை எப்படி இருக்கும்? கிளைகள் விரிந்து மேல்நோக்கி உயரச் செல்லும். வேர்களோ மண்ணை நோக்கி உள்ளே பாய்ந்து செல்லும்.

ஆனால் இந்த வனத்தில் அப்படியே நேர்மாறாக உள்ளது, மண்ணுக்குள் இருக்கும் வேர்கள் வெளியே வருகிறது. அதேபோல் கிளைகள் கீழ்நோக்கிச் செல்கின்றன.

அங்கு ஜோடியாக இருக்கும் இந்த துளசி மரங்கள், இரவில் உயிர்பெறும் கோபியர்கள் என்று நம்பப்படுகிறது.

இது போன்று இந்த இடத்தைச் சுற்றியுள்ள சில மர்மமான விஷயங்கள் குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

Nidhivan and the mysteries around it
பத்மநாபசுவாமி கோவில் முதல் செங்கோட்டை வரை : இந்தியாவிலிருக்கும் ரகசிய சுரங்க பாதைகள்?

ஒவ்வொரு இரவும், நிதிவனத்தில், கிருஷ்ணரும் ராதையும் ராசலீலை நடத்துவதாக நம்பப்படுகிறது.

அருகிலுள்ள அனைத்து மரங்களும் கோபிகைகளாக மாறுவதாக நம்பப்படுகிறது.

ஒவ்வொரு மாலையும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, கிருஷ்ணருக்கும் ராதைக்கும் ஒரு படுக்கை போடப்படுகிறது, அதனுடன் உணவு, தண்ணீர், ஆபரணங்கள், உடைகள் மற்றும் வேப்ப மரக்கிளைகள் வைக்கப்படுகிறது.

நிதிவனுக்கு வருகை

ஒவ்வொரு காலையிலும் முன்னிரவு வைக்கப்பட்ட இந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு யாரும் வளாகத்தில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை, கிருஷ்ணர் மற்றும் ராதையின் சந்திப்பைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

ஒருவேளை மறைந்திருந்து பார்க்க நினைப்பவர்கள், இறந்துவிடுவார்கள், மனநல பாதிப்புக்கு உள்ளாவார்கள் அல்லது கண்பார்வை இழந்து விடுவதாக நம்பப்படுகிறது.

நிதிவனுக்கு வருகை தருபவர்கள், தினமும் மாலை 7 மணிக்குள், அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும்.

Nidhivan and the mysteries around it
Karni Mata Temple : எலி குடித்த பால் தான் பிரசாதமா? எலி கோவில் குறித்து தெரியுமா?

தீர்க்கப்படாத மர்மம்

நிதிவனுக்கான வாசல் எல்லா இரவு நேரங்களிலும் வெளியில் இருந்து பூட்டப்பட்டிருக்கும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வளாகத்தில் எந்த ஒரு உயிரினமும் இருக்காதாம்.

இந்த புராணக் கதை எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, என்ன தான் மக்கள் பகலில் அந்த கோவிலுக்கு சென்றாலும் அந்த வனம் குறித்த மர்மம் இன்றும் தீர்க்கப்படாமலே உள்ளது.

Nidhivan and the mysteries around it
இந்தியா : பழமையான சிவன் கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா? அதன் சிறப்பு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com