விஜய் மல்லையாவுக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் - நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்

விஜய் மல்லையா போன்ற கோடீஸ்வரருக்கு வெறும் 2000 ரூபாய் தான் அபராதமா என கொதித்த நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுத் தாக்கியுள்ளனர்.
Vijay Mallaya
Vijay MallayaTwitter

கடந்த 2016ம் ஆண்டு கிங் ஃபிஷர் நிறுவனத்துக்காக 9 ஆயிரம் கோடி வரை வங்கிகளிடம் கடன் வாங்கி அதனைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார் பிஸினஸ் மேன் விஜய் மல்லையா

இதற்காக கடந்த 2019ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். எனினும் அவர் இங்கிலாந்து குடியுரிமை வைத்திருப்பதனால் சட்டரீதியான சாதகங்களைப் பயன்படுத்தி தப்பி வருகிறார்.

இவரை இந்தியா அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அவர் நீதிமன்ற உத்தரவை மீறி தனது பிள்ளைகள் நால்வருக்கு 40 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.317 கோடி) பணம் பரிவர்த்தனை செய்ததாக பாரத ஸ்டேட் வங்கி அவர் மீது குற்றம் சுமத்தியது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு நெட்டிசன்கள் கொடுக்கும் ரியாக்‌ஷன்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

"விஜய் மல்லையா தனது வாரிசுகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான பரிவர்த்தனையை மேற்கொண்டார். நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்து நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்கான குற்றத்திற்காக விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனையும் மற்றும் ரூ.2 ஆயிரம் அபராத தொகை செலுத்த வேண்டும்" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அத்துடன் 40 மில்லியன் டாலைரை வட்டியுடன் 4 வாரத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Vijay Mallaya
Doge Meme : இணையத்தைக் கலக்கும் இந்த Cheems யார் தெரியுமா?

9000 கோடி கடன் வாங்கியவருக்கு வெறும் 2000 அபராதமா என நெட்டிசன்கள் பொங்கியுள்ளனர்.

Vijay Mallaya
EPS vs OPS : இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com