முரளி திவி : 12ம் வகுப்பில் ஃபெயிலானவர், 47 ஆயிரம் கோடிக்கு அதிபதியானது எப்படி?

படிப்பில் கெட்டிக்காரராக இல்லாவிட்டாலும் படிக்க வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது, பன்னிரண்டாம் வகுப்பில் கூட ஃபெயிலாகியுள்ளார். ஒருமுறை அல்ல இரண்டு முறை!
முரளி திவி : 12ம் வகுப்பில் ஃபெயிலானவர், 47 ஆயிரம் கோடிக்கு அதிபதியானது எப்படி?
முரளி திவி : 12ம் வகுப்பில் ஃபெயிலானவர், 47 ஆயிரம் கோடிக்கு அதிபதியானது எப்படி?Twitter

திவி லேப்ஸ் நிறுவனர் முரளி திவி உலகின் பணக்கார விஞ்ஞானிகளில் ஒருவர். 

செயல்பாட்டில் இருக்கும் மருத்துவ பொருட்கள் ( active pharmaceutical ingredients (API) ) உற்பத்தியில் இந்தியாவின் டாப் 3 நிறுவனங்களில் ஒன்று திவி லேப்ஸ்.

திவி லேப்ஸின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 1.3 லட்சம் கோடி. முரளி திவியின் சொத்துமதிப்பு கிட்டத்தட்ட 47 ஆயிரம் கோடி.

முரளி திவி ஆந்திராவில் உள்ள ஒரு  சிறிய ஊரில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு அரசு அதிகாரி. அப்பாவின் பென்ஷன் பணமான 10000த்தில் குடும்பம் ஓடும் சூழலில் தான் முரளியின் கதை தொடங்குகிறது.

படிப்பில் கெட்டிக்காரராக இல்லாவிட்டாலும் படிக்க வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது, பன்னிரண்டாம் வகுப்பில் கூட ஃபெயிலாகியுள்ளார்.  ஒருமுறை அல்ல இரண்டு முறை!

படித்து முடித்த முரளிக்கு தனது 25 வயதில் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கையில் 500 ரூபாய் மட்டுமே வைத்திருந்தவர் அங்கு மருந்தாளராக வேலைப்பார்த்தார். மாதம் 65,000 அமெரிக்க டாலர்கள் சம்பளமும் கிடைத்தது.

அமெரிக்காவில் செட்டிலான எவருக்கும் மீண்டும் இந்தியா திரும்பும் எண்ணம் வருவதில்லை. ஆனால் திவி வேறுமாதிரியாக இருந்தார்.

சில ஆண்டுகளில் சேமிப்பாக 40000 டாலர்கள் உடன் இந்தியா திரும்பினார். அப்போது அவரிடம் எந்த திட்டமும் இல்லை.

1984ம் ஆண்டு கல்லம் அஞி என்பவருடன் இணைந்து செமினர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் 2000ம் ஆண்டு டாக்டர் ரெட்டி லேபரடோரீஸ் உடன் இணைக்கப்பட்டது. 

1984முதல் 6 ஆண்டுகள் வேலை செய்தார். 1990 இல் திவி’ஸ் லேப்ஸைத் தொடங்கினார். 

முதலில் ஏபிஐகள் மற்றும் இடைநிலைகளின் உற்பத்தி பொருட்களுக்கான வணிக செயல்முறைகளை உருவாக்கத் தொடங்கினார். 

முரளி திவி : 12ம் வகுப்பில் ஃபெயிலானவர், 47 ஆயிரம் கோடிக்கு அதிபதியானது எப்படி?
"கபே காபி டே" - யார் இந்த மாளவிகா? ஒரே ஆண்டில் 4000 கோடி கடனை அடைத்து சாதித்த பெண்!

1995ம் ஆண்டு சொந்தமாக தெலுங்கானாவின் சௌதுப்பல் பகுதியில் உற்பத்தியைத் தொடங்கினார். 2002ம் ஆண்டு இரண்டாவது உற்பத்தி ஆலையை விசாகப்பட்டிணத்தில் தொடங்கினார்.

ஹைத்ராபாத்தில் இப்போது திவி லேப்ஸ் தலைமையகம் இருக்கிறது . மார்ச் 2022 கணக்குப்படி 88 பில்லியன் ரூபாய் வருமானம் வருவதாகக் கூறப்படுகிறது.

முரளி திவி : 12ம் வகுப்பில் ஃபெயிலானவர், 47 ஆயிரம் கோடிக்கு அதிபதியானது எப்படி?
18 வயதில் MBBS, 22-ல் IAS அதிகாரி, இப்போது கோடிகளில் சம்பாதிக்கும் தொழிலதிபர்- யார் இவர்?

12 ம் வகுப்பில் தோல்வியடைந்தவர் எப்படி இத்தனை பெரிய நிருவனத்தை உருவாக்க முடிந்தது என்பத ஆச்சரியம் தான். உண்மையில் அவரது ரகசிய மந்திரம் கல்வி தான்.

படிப்பில் ஆர்வம் இருந்ததால் மசிலிப்பட்டிணம் என்ற ஊரில் பியுசி படித்தார். மணிப்பால் எம்.ஐ.டியில் பட்டம் பெற்றார். பிஎஸ்சி பார்மாசூட்டிகல் சயின்ஸ் படித்திருக்கிறார். 

முரளி திவி : 12ம் வகுப்பில் ஃபெயிலானவர், 47 ஆயிரம் கோடிக்கு அதிபதியானது எப்படி?
பிரேம் குமார்: 12 வயதில் வேலைக்கு சென்ற சிறுவன் - சினிமா ஆசையால் கோடீஸ்வரரானது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com