மாங்குரோவ் முருகேசன்: ”நான் எங்கும் போகமாட்டேன்” தீவை காப்பாற்ற போராடும் தனி ஒருவனின் கதை!

நாங்கள் கடலுக்கும், உப்பங்கழிக்கும் இடையில் சிக்கிக் கொண்டோம். அவை இரண்டும் எங்கள் தீவை சில ஆண்டுகளில் விழுங்கவிருக்கிறது. நான் எங்கும் போகவில்லை. நான் இங்கு தான் பிறந்தேன், இங்கு தான் இறப்பேன் என்கிறார் முருகேசன்.
மாங்குரோவ் முருகேசன்: ”நான் எங்கும் போகமாட்டேன்” தீவை காப்பாற்ற போராடும் தனி ஒருவனின் கதை!
மாங்குரோவ் முருகேசன்: ”நான் எங்கும் போகமாட்டேன்” தீவை காப்பாற்ற போராடும் தனி ஒருவனின் கதை!twitter

நாம் வாழும் வீட்டை விட பாதுகாப்பான ஓரிடத்தை நம்மால் சொல்லிவிட முடியுமா? அப்பேற்பட்ட வீடே அடிக்கடி ஆழிப் பேரலையால் சூழும் என்றால் எத்தனை அபாயகரமானதாக இருக்கும். அதுதான் கேரள மாநிலத்தில் வைபின் தீவில் வாழும் மக்களின் நிலை.

கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கொச்சி நகரத்தில் இருக்கிறது வைபின் தீவு. இந்தத் தீவில் கடல் அலைகளால் ஏற்படும் வெள்ளம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது. அப்படி கடல் அலை வெள்ளத்தால் சுவரில் ஈரம் சேர்ந்து உரிந்துக் கிடந்த சருகு போன்ற பெயிண்ட் இதழ்களை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் டி பி முருகேசன்.

கடைசியாக வந்த கடல் அலை வெள்ளம், தன் இளைய பேரனின் நெஞ்சளவு வரை வந்ததாம். இப்படி ஒவ்வொரு முறை வரும் வெள்ளமும், இந்த அளவுக்கு நீர் வருவதாகவும், அதைத் தாங்கள் எதிர்கொள்வதாகவும் கூறுகிறார்

கடந்த பல ஆண்டுகளில் கடல் மட்ட உயர்வு & கடுமையான கடல் அலை வெள்ளம் காரணமாக முருகேசனைச் சுற்றி இருந்த பலரும் வேறு இடங்களுக்கு மாறிவிட்டனர். ஆனால், மீன்பிடித் தொழிலில் இருந்து வெளியேறிய பிறகும், முருகேசன் அந்த இடத்தை விட்டுச் செல்வதாக இல்லை. தனியொருவனாக, தன் வீடு மற்றும் சமூகத்தில் ஏற்படும் நீர் மட்ட உயர்வு பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்.

கடல் நீர் மட்ட உயர்வு மற்றும் கடல் அலை மூலம் ஏற்படும் வெள்ளம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க மாங்குரோவ் மரங்களை நட்டு வளர்த்து வருகிறார். இந்த ஒரு காரணத்தாலேயே இவரை “மாங்குரோவ் மேன்" என்று அழைக்கிறார்கள். வைபின் தீவையொட்டி இப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கடல் பகுதிகளில் மாங்ரோவ் காடுகள் இருப்பது, கடல் சீற்றத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை பெரிய அளவில் கட்டுப்படுத்த உதவும்.

தன்னுடைய இளம் வயதில் கேரளாவில் நிறைய மாங்ரோவ் காடுகள் இருந்ததாகவும், அக்காடுகள், தீவுகளை கடலில் இருந்து பிரித்து வைத்திருந்ததாகவும் கூறுகிறார் முருகேசன். ஆனால் இப்போது கொச்சி நகரத்தில் ஆங்காங்கே சில மாங்ரோவ் திட்டுகள் மட்டுமே தென்படுவதாக வருத்தப்படுகிறார்.

அந்த மாங்குரோவ் காடுகள் தான் நம் வீடுகளை வெள்ளத்தில் இருந்தும், கடல் அரிப்புகளிலிருந்து, புயல்களிலிருந்து பாதுகாத்தன. அக்காடுகள் நம் வாழ்கையில், வாழ்கை சூழலில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக இருந்தது. அது மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும் என்கிறார்.

இதுவரை முருகேசன் சுமார் ஒரு லட்சம் மாங்குரோவ் மரங்களை நட்டிருக்கிறார். ஒருநாள் விட்டு ஒரு நாள் மாங்குரோவ் மரங்களை நடுகிறார். அதற்கான எல்லா பணிகளையும் அவரே செய்கிறார். மாங்குரோவ் மரங்களுக்கான விதைகள் எம் எஸ் சுவாமிநாதன் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமைப்பிலிருந்து கிடைக்கின்றன.

மாங்குரோவ் முருகேசன்: ”நான் எங்கும் போகமாட்டேன்” தீவை காப்பாற்ற போராடும் தனி ஒருவனின் கதை!
தமிழ்நாட்டில் புதிய காட்டை உருவாக்கிய இஸ்ரேல் தம்பதி - ஓர் சுவாரஸ்ய கதை!

எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்த மாங்ரோவ் காடுகளில் 42 சதவீத காடுகளைக் காணவில்லை. இதில் வைபின் தீவுகளில் உள்ள தெற்கு வைப்பின் பகுதியில் மிகப்பெரிய அளவில் மாங்குரோவ் காடுகள் காணாமல் போனதும் அடக்கம் என சமீபத்தில் இஸ்ரோ மற்றும் கேரள மீன்வள பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

1975ஆம் ஆண்டு முதல் கேரளாவில் உள்ள மாங்குரோவ் காடுகளின் பரப்பளவு 700 சதுர கிலோமீட்டரில் இருந்து வெறும் 24 சதுர கிலோமீட்டராக குறைந்திருப்பதாக கேரள வனத்துறை கூறியுள்ளது.

கடலோர சாலைகள், நெடுஞ்சாலைகள் மாங்குரோவ் சூழலியலை பெரிய அளவில் சேதப்படுத்தி இருப்பதாக முன்னாள் கேரள கோஸ்டல் சோன் மேனேஜ்மெண்ட் அத்தாரிட்டி அமைப்பின் உறுப்பினர் செயலர் கே கே ராமச்சந்திரன் கூறியுள்ளார். மேலும், மாங்குரோவ் சூழலியலை பாதுகாக்க முயற்சி செய்பவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இங்கு மாங்குரோவ் மரங்களை நடும் முருகேசனுக்கு பாராட்டுகள், விருதுகள், கௌரவங்கள், பெரிய அரசியல் தலைவர்களின் அறிமுகங்கள் எல்லாம் கிடைக்கின்றன, ஆனால் அவரது வீட்டைத் தாண்டி ஊக்குவிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு முருகேசன் அவர்கள் நட்ட மாங்குரோவ் மரங்கள் எல்லாம் வளர்ந்து இன்று அடர்த்தியான காடுகளைப் போல் காட்சியளிக்கின்றன. அது கடல் சீற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

”மாங்குரோவ் விதைகளைப் பெற நான் அதிகம் பயணிக்க வேண்டி இருக்கிறது. என் மனைவி தன்னால் இயன்ற வரை உதவுகிறார். எனக்கு சோர்வாக இருக்கிறது ஆனால் என்னால் இந்தப் பணிகளை நிறுத்த முடியவில்லை” என்கிறார் முருகேசன்.

முருகேசனின் மனைவி கீதா அவர்களோ இப்பணிகளை நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்காகச் செய்கிறோம் என்கிறார். அது தான் எங்களை தொடர்ந்து இயங்கச் செய்கிறது என்கிறார்.

மாங்குரோவ் முருகேசன்: ”நான் எங்கும் போகமாட்டேன்” தீவை காப்பாற்ற போராடும் தனி ஒருவனின் கதை!
பழங்குடியினர் உருவாக்கிய வேர்ப் பாலம் : மேகாலயாவின் சுற்றுலா அடையாளமாக மாறியது எப்படி?

வைபின் பகுதி கடல் அலை மூலம் ஏற்படும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியில் இருக்கிறது என்கிறார் அட்வான்ஸ்ட் சென்டர் ஃபார் அட்மாஸ்ஃபெரிக் ரேடார் ரிசர்ச் அமைப்பின் இயக்குநர் அபிலாஷ்.

கடல் மட்டம் உயர்வு, நன்னீரை பாதித்துள்ளது. கடல் அறிப்பு, அலைகளினால் ஏற்படும் பாதிப்பு அதிகரித்துவிட்டன. கடற்கரை ஓரத்தில் ஏற்படும் வெள்ளம் மிகவும் சாதாரண நிகழ்வாகிவிட்டன. நீரோடைகளை சரியாக தூர்வாராதது, ஆக்கிரமிப்புகள் காரணமாக, நீரோடைகள் நீரை உட்கொள்ளும் அளவு குறைந்துவிட்டது. எனவே மழை காலத்தில் வெள்ள நீர் மனித குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விடுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடல் மட்டம் சுமார் 4.5 மில்லி மீட்டர் அதிகரித்திருப்பதாக வேர்ல்ட் மெட்ரலாஜிக்கல் ஆர்கனைசேஷன் கூறியுள்ளது. இது இந்தியா, சீனா, நெதர்லாந்து, வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு மிகப் பெரிய அபாயம் என்றும் கூறப்படுகிறது.

2050ஆம் ஆண்டுக்குள் கொச்சி நகரத்தில் கடல் மட்ட உயர்வு 0.22 மீட்டராக இருக்கலாமென நாசா கணித்துள்ளது. 2,100ஆம் ஆண்டுக்குள் அரை மீட்டருக்கும் அதிகமாக கடல் மட்டம் உயரலாம் என்று நாசா கணித்துள்ளது.

சில மீனவ குடும்பங்கள் மழை காலத்தில் அரசின் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்கிவிடுகிறார்கள். சிலரோ, தங்கள் வீட்டை ஸ்டில்ட் வைத்து கடல் அலை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் உயரமாக கட்டிக் கொள்கிறார்கள்.

நாங்கள் கடலுக்கும், உப்பங்கழிக்கும் இடையில் சிக்கிக் கொண்டோம். அவை இரண்டும் எங்கள் தீவை சில ஆண்டுகளில் விழுங்கவிருக்கிறது. நான் எங்கும் போகவில்லை. நான் இங்கு தான் பிறந்தேன், இங்கு தான் இறப்பேன் என்கிறார் முருகேசன்.

மாங்குரோவ் முருகேசன்: ”நான் எங்கும் போகமாட்டேன்” தீவை காப்பாற்ற போராடும் தனி ஒருவனின் கதை!
பூமிக்கு 1000 அடி ஆழத்தில் ஒரு புதிய காடு கண்டுபிடிப்பு - பிரபஞ்ச ரகசியத்தின் திறவுகோலா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com