
கேரளாவின் யூத சமுதாய மக்கள் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பாரம்பரிய திருமணத்தைக் கொண்டாடியுள்ளனர். யூத பாரம்பரிய ஆடை அணிந்து இந்த திருமணம் நடைபெற்றது.
ஒரு தனியார் ரெசார்டில் நடந்த இந்த விழாவில் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் யூத மக்கள் சிலரும் கலந்துகொண்டனர். திருமணத்தை நடத்தி வைக்க இஸ்ரேலில் இருந்து ஏரியல் டைசன் என்ற ரபி அழைத்துவரப்பட்டுள்ளார்.
ரேச்சல் மலாக்காய் அமெரிக்காவில் டேட்டா சயிண்டிஸ்டாக உள்ளார். இவருக்கு அமெரிக்க குடிமகனான ரிச்சர்ட் சாக்காரி என்ற நாசா விஞ்ஞானியுடன் திருமணம் நடைபெற்றது.
ஹுப்பா என்ற வீட்டின் கீழ் இந்த திருமணம் நடைபெற்றது. கேரளாவில் முதல் முறையாக ஜெப ஆலயத்துக்கு வெளியே நடக்கும் திருமணம் இதுதான் என்று கூறப்படுகிறது.
கேரளாவில் யூத பாரம்பரிய திருமணங்கள் நடப்பது மிகவும் அரிதான விஷயம் என்பதனால் இந்த திருமணம் கவனிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2008ம் ஆண்டு மட்டஞ்சேரியில் தெக்கும்பாகம் ஜெப ஆலயத்தில் யூத திருமணம் நடைபெற்றது.
ஜெப ஆலயத்தில் திருமணம் நடைபெற்றால் குறைவான நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்பதனால் இந்த திருமணத்தை தனியார் ரெசார்டில் நடத்தியுள்ளனர்.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் சாலமோன் மன்னர் காலத்திலேயே யூதர்கள் கேரளாவுக்கு வணிகம் செய்ய வந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இப்போது சில யூத குடும்பங்கள் மட்டுமே அங்கு வசிக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust