
பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு நாய்களுக்கு கோவிலில் இறைவன் முன்னர் பெயர்சூட்டுவது சடங்குகள் நடத்தப்படுகிறது.
எங்கு நடக்கிறது இந்த வினோத சடங்குகள் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
கேரளாவின் கண்ணூர் நகரத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் வளப்பட்டணம் ஆற்றங்கரையில் உள்ள கோயில் தான் இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.
இங்குள்ள பிரதான கடவுள் முத்தப்பன் என்று அழைக்கப்படுகிறார். முத்தப்பன் என்பது மகா விஷ்ணு மற்றும் பரம சிவன் ஆகிய இரு கடவுள்களின் ஒருங்கிணைந்த வடிவம் என்றும் சொல்லப்படுகிறது.
கோயில் வளாகத்தில் நாய்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தப்படுகிறது.
இங்கு நாய்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்துவதற்கு ரசீதோ கட்டணமோ கிடையாது. யார் வேண்டுமானாலும் தங்கள் செல்லப்பிராணிகளை அழைத்து வந்து ஸ்ரீ முத்தப்பனின் ஆசிர்வாதத்தைப் பெறலாம்.
கருவறைக்கு முன்பு பக்தர்களை இரண்டு பெரிய நாய்களின் வெண்கலச் சிற்பங்கள் வரவேற்கின்றன. இது நாய்களை தெய்வங்களுக்கு சமமாக நடத்தும் புனிதமான இடம்.
பிரசாதம், பூஜைக்குப் பிறகு, அங்கு காத்திருக்கும் நாய்களுக்கு முதலில் பரிமாறப்படுகிறது, அதன் பின்னர் தான் பக்தர்களுக்கு வழங்குவர்.
இந்த கோவில் மட்டும் இல்லாது சுற்றி உள்ள இடங்களில் உள்ள நாய்களும் சிறந்த முறையில் கவனித்துக்கொள்ளப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust