தவறான மேக்-அப்பால் வீங்கிய மணப்பெண்ணின் முகம்: திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை - எங்கே?

இந்த புது மேக் அப் காரணமாக பெண்ணின் முகமே மாறிப்போனதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Karnataka woman's face disfigured during makeup, groom calls off wedding
Karnataka woman's face disfigured during makeup, groom calls off wedding Twitter

புதியவகை மேக் அப்பை செய்துகொள்ள முயன்ற மணப்பெண்ணுக்கு முகம் வீங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள அரசிகிரா என்ற பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

திருமணத்திற்கு 10 நாட்கள் இருந்த நிலையில், தன்னை அழகு படுத்திக்கொள்ள வேண்டும் என அருகில் இருந்த கங்கா ஸ்ரீ பியூட்டி பார்லர் என்ற அழகு நிலையத்திற்கு அந்த பெண் சென்றுள்ளார்.

புதுப்பெண்ணிடம் பார்லர் உரிமையாளர் கங்கா, தான் புதுவகை மேக் அப் ஒன்றை கற்று வைத்துள்ளதாகவும் அதனை போட்டுக்காட்டவா என்றும் கேட்டுள்ளார். அதற்கு மணப்பெண்ணும் சரி என்று சொன்னதாக கூறப்படுகிறது.

கங்கா மணப்பெண்ணுக்கு மேக் அப் போட தொடங்கியுள்ளார். பெண்ணின் முகத்திற்கு கிரீம் பூசி 'ஸ்டீம்' எனப்படும் நீராவியில் முகத்தை காட்டியுள்ளார்.

ஸ்டீம் எடுத்த சில நிமிடங்களில் மணப்பெண்ணின் முகம் வெந்து போய் வீங்கியுள்ளது.

Karnataka woman's face disfigured during makeup, groom calls off wedding
விலை குறைந்த Lehenga எடுத்து கொடுத்த மாப்பிள்ளை வீட்டார் - திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
Rep
Rep

இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண், உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இந்த புது மேக் அப் காரணமாக பெண்ணின் முகமே மாறிப்போனதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த எதிர்பாராத நிகழ்வு காரணமாக மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

திருமணம் நின்று போன நிலையில், ப்யூட்டிசியன் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை விசாரித்து வருகின்றனர்.

மேக் அப் காரணமாக திருமணம் நின்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Karnataka woman's face disfigured during makeup, groom calls off wedding
”மாப்பிள்ளை கருப்பாக இருக்கிறார்” - கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com