கர்நாடகா : மீண்டும் முதல்வராவாரா சித்தராமையா? - ஒரு பிளாஷ் பேக்!

அவரது அனுபவத்துக்கும் எம்.எல்.ஏக்களிடம் இருக்கும் செல்வாக்குக்காகவும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என ஆதரவாளர்கள் கருதுகின்றனர். அவர் கடந்து வந்த பாதை என்ன?
கர்நாடகா : மீண்டும் முதல்வராவாரா சித்தராமையா - ஒரு பிளாஷ் பேக்!
கர்நாடகா : மீண்டும் முதல்வராவாரா சித்தராமையா - ஒரு பிளாஷ் பேக்!Twitter

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.

முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா மீண்டும் தனது கொடியை பறக்கவிட்டுள்ளார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் சித்தராமையா அல்லது டி.கே.சிவக்குமார் கர்நாடகாவின் முதல்வராக அறிவிக்கப்படுவார்கள். 

இருவரில் முதல்வராகப்போவது யார் என்ற கேள்வி தான் இப்போது பரபரப்பான விஷயமாகப் பேசப்பட்டு வருகிறது. சித்தராமையாவின் மகன் “கர்நாடக நலனுக்காக எனது தந்தை தான் முதல்வராக வேண்டும்” எனப் பேசியுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாகவே புயலை கிளப்பியிருக்கிறது.

இந்த தேர்தலில் சித்தராமையாவின் பங்கு புறக்கணிக்க முடியாதது. 45 ஆண்டுகளுக்கும் மேல் அரசியல் அனுபவம் கொண்ட இவரைப் பற்றி தெரியுமா?

சித்தராம கவுடா மற்றும் போரம்மா தம்பதிக்கு மகனாக மைசூர் மாவட்டம் வருனாவில் சித்தராமனஹுண்டி என்ற இடத்தில் பிறந்தார். மைசூர் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். சட்டம் பயின்றார். 

மைசூரில் வழக்கறிஞராக இருந்த சித்தராமையா நஞ்சுண்ட சாமி என்பவரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். தொடக்கத்தில் ஜனதா பரிவாரில் இணைந்து பணியாற்றினார். 1978ல் அரசியல் பணிகளைத் தொடங்கியவர், மைசூர் தாலுகா தேர்தலை வென்றார். 

1983ம் ஆண்டு சாமுண்டேஸ்வரி தொகுதியில் நின்று 7வது கர்நாடக சட்டமன்றத்தில் உறுப்பினரானார். மைசூரு முழுவதும் நற்பெயரை சம்பாதித்தார் சித்தராமையா. 

1985ம் ஆண்டு ஆளும் கட்சியாக இருந்த ஜனதா கட்சிக்கு மாறினார். அப்போதும் தேர்தலில் வெற்றி பெற்று கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகள் அமைச்சரானார்.

அரசியலின் முதல் தசாப்தத்தை ராஜாவாக கடந்துவிட்ட சித்தராமையா 1989ம் ஆண்டு முதல் முறையாக காங்கிரஸ் தலைவர் எம்.ராஜசேகர மூர்த்தியால் தோற்கடிக்கப்பட்டார்.

தேவ கௌடா
தேவ கௌடா Twitter

1992ம் ஆண்டு ஜனதா தளத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று நிதியமைச்சரானார். தேவ கௌடா முதலமைச்சராக பதவிவகித்தார்.

ஜனதாதள அரசில் ஜே.ஹெச்.படேல் 1996ம் ஆண்டு முதல்வரானபோது சித்தராமையா துணைமுதல்வரானார். ஜனதா தளம் கட்சி பிளவுபட்டபோது தேவ கௌடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தில் இணைந்தார் சித்தராமையா.

1999 தேர்தலில் இரண்டாவது முறையாக தோல்வியடைந்தார் சித்தராமையா. 2004ம் ஆண்டு  காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் வெற்றிபெற்றதனால் தரம் சிங் அரசில் துணை முதல்வரானார்.

கர்நாடகா : மீண்டும் முதல்வராவாரா சித்தராமையா - ஒரு பிளாஷ் பேக்!
கர்நாடகா : "இது எங்க நிலம், நான் ஏன் இந்தி பேசணும்" - ஆட்டோ ஓட்டுநரின் வைரல் வீடியோ

2005ம் ஆண்டு தேவ கௌடாவுடனான உறவு மோசமடைந்தது. தேவ கௌடா அவரது மகனான குமாரசுவாமியை கட்சியில் வளர்க்க முடிவு செய்ததன் விளைவாக, சித்தராமையா மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகினார்.

பின்னர் குறிப்பிட்ட பகுதிக்கான கட்சியாக ABPJD என்ற கட்சியைத் தொடங்க திட்டமிட்டார். ஆனால் கர்நாடகாவில் எப்போதும் இதுபோன்ற சிறிய கட்சிகள் நிலைத்து இருந்ததில்லை.  

பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவு சித்தராமையாவுக்கு அதிகம். எனவே அவர் பெங்களூரில் மிகப் பெரிய கூட்டத்தைக் கூட்டி காங்கிரஸில் இணைந்தார்.

கர்நாடகா : மீண்டும் முதல்வராவாரா சித்தராமையா - ஒரு பிளாஷ் பேக்!
கர்நாடகா : முன்னாள் முதல்வர் எடியூரப்பா-வின் பேத்தி சௌந்தர்யா தூக்கிட்டு தற்கொலை

சண்டீஸ்வரி தொகுதியில் 2006ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் வெற்றிபெற்றார். 2008ம் ஆண்டு வருணா தொகுதியில் நின்று 5வது முறையாக வெற்றிபெற்றார். 

2013ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டவர், கர்நாடகாவின் 22வது முதலமைச்சரானார். அடுத்த தேர்தலில் குமராசாமி மற்றும் பாஜகவால் தோற்கடிக்கப்பட்டார்.

2023ல் மீண்டும் காங்கிரஸுடன் இணைந்து வெற்றியை உருவாக்கியுள்ளார். அவரது அனுபவத்துக்கும் செல்வாக்குக்காகவும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

கர்நாடகா : மீண்டும் முதல்வராவாரா சித்தராமையா - ஒரு பிளாஷ் பேக்!
கர்நாடகா தேர்தல் முடிவுகள் நேரலை | Karnataka Election Results Live

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com