இந்தியாவின் மிகப் பெரிய மாங்குரோவ் காடுகள் - சுந்தரவனம் பற்றிய சுவார்ஸ்ய தகவல்கள்!

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான சுந்தரவனக் காடுகள் புலிகள் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த சுந்தரவனக் காடுகள் பற்றிய சில சுவார்ஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்
இந்தியாவின் மிகப் பெரிய மாங்குரோவ் காடுகள் -  சுந்தரவனம் பற்றிய சுவார்ஸ்ய தகவல்கள்!
இந்தியாவின் மிகப் பெரிய மாங்குரோவ் காடுகள் - சுந்தரவனம் பற்றிய சுவார்ஸ்ய தகவல்கள்!ட்விட்டர்

மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள சதுப்பு நிலக் காடு இந்த சுந்தரவனக் காடுகள். 2,112 சதுர கிலோமீட்டர் உள்ள இந்தியாவின் மிகப் பெரிய சதுப்பிநிலக் காடாகும்.

சுந்தரவனம் என்றால் அழகிய காடு என்று பொருள்படுகிறது. இந்த சுந்தரவனக் காடுகள் வங்கதேசம் மற்றும் இந்தியாவின் இடைப்பட்ட பகுதியில், கங்கையின் அடியில் அமைந்துள்ளது.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான சுந்தரவனக் காடுகள் புலிகள் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த சுந்தரவனக் காடுகள் பற்றிய சில சுவார்ஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்

சுந்தரி

அழகிய பெரிய பெரிய சுந்தரி மரங்களின் பெயரால் சுந்தரவனக் காடுகள் என்ற பெயர் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சுந்தரி மரங்கள் கண்களுக்கு இனியக் காட்சியமைக்கிறது. சுந்தரி மரங்கள் எல்லாம் ஒரு சேர பார்க்கையில், ஒரு அழகிய காடாக தோன்றுவதால் சுந்தர வனம் என்ற பெயர் வந்துள்ளது

வெனிஸை விட 10 மடங்கு பெரியது

இந்த சுந்தரவன காடுகள் ரோமில் அமைந்துள்ள வெனிஸ் நகரத்தை விட 10 மடங்கு பெரியது. இந்தியா வங்தேகசத்துக்கு இடையில் அமைந்திருக்கும் இது, உலகின் மிகப்பெரிய கடலோர சதுப்பு நிலக் காடுகளை கொண்டுள்ளது, சுமார் 10,000 சதுர கிலோமீட்டர்

இந்தியாவின் மிகப் பெரிய மாங்குரோவ் காடுகள் -  சுந்தரவனம் பற்றிய சுவார்ஸ்ய தகவல்கள்!
தன்னந்தனியாக டிரிப் செல்ல ஆசையா? இந்தியாவின் இந்த இடங்களுக்கு செல்லலாம்!

நீர்வழித்தடங்கள்

இந்த சுந்தரவனக் காடுகளில் உள்ள நீர்வழிகள் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. காடுகளின் எந்த மூலைக்கும் படகுகள் மூலம் சென்று வரலாம்

பெரிய - சிறிய அலைகள்

சுந்தரவனக் காடுகளில் உள்ள நீரில் இரண்டு விதமான அலைகள் ஏற்படுகின்றன. பெரிய அலை ஒன்றும் சிறிய அலை ஒன்றும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த அலைகள் உருவாகின்றன.

இங்கு ஏற்படும் பெரிய அலையானது 6-10 அடிக்கு உயருகிறது. இந்த பெரிய அலைகள் ஏற்படும் சமயத்தில், காட்டையும், வன விலங்குகளையும் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.

சிறிய அலை எழும்போது பெரிய சேற்று நிலம் சமதளமாக இருப்பதை காணலாம்

இந்தியாவின் மிகப் பெரிய மாங்குரோவ் காடுகள் -  சுந்தரவனம் பற்றிய சுவார்ஸ்ய தகவல்கள்!
இந்தியாவில் அதிக காடுகள் உள்ள மாநிலங்கள் என்னென்ன?

102 தீவுகள்

சுந்தரவனக் காட்டுக்குள் மொத்தம் 102 தீவுகள் உள்ளன. இதுவே சுந்தரவனம் வெனிஸை விட 10 மடங்கு அதிக பரப்பளவில் இருக்க முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த 102 தீவுகளில் 54 தீவுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள்

சுந்தரவனக் காடுகளின் 40 சதவிகிதம் இந்தியாவிலும், மீதம் வங்கதேசத்திலும் உள்ளது

கொசாபா தீவு

சுந்தரவன தீவுகளிலேயே கொசாபா தான் மிகப் பெரிய தீவு. மனிதர்கள் வாழக்கூடிய 54 தீவுகளில் இதுவும் ஒன்று. குறிப்பாக இந்திய பகுதியில் இருக்கும் காடுகளில் கடைசி தீவு இதுவே. இங்கிருந்து தான் அடர்ந்த காட்டுப்பகுதியும் தொடங்குகிறது.

மற்ற தீவுகளிலிருந்து தனித்தே இருக்கும் இந்த தீவில், பஞ்சாயத்து அலுவலகம், பள்ளிக்கூடம் மருத்துவமனை உள்ளன

இந்தியாவின் மிகப் பெரிய மாங்குரோவ் காடுகள் -  சுந்தரவனம் பற்றிய சுவார்ஸ்ய தகவல்கள்!
இந்தியாவின் ’Scotland’ மடிக்கேரி டு ஏலகிரி: இந்த Hidden ஹில் ஸ்டேஷன்ஸ் பற்றி தெரியுமா?

ப்ராஜெக்ட் டைகர்

ப்ராஜெக்ட் டைகர் என்ற பெயரில் இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு குறைந்தது 400 ராயல் பெங்கால் புலிகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் புலிகளை அதிகம் சுந்தரவனத்தில் தான் காணமுடியும்.

ஆனால் புலிகள் சில சமயங்களில் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து தாக்குதல் நடத்துவதும் தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது

இந்தியாவின் மிகப்பெரிய மீன்வளம்

உவர் நீர் மீன் உற்பத்தி மற்றும் கடல் மீன்வளம் காரணமாக சுந்தர்பன்ஸ் பயோஸ்பியர் ரிசர்வ் இந்தியாவின் மிகப் பெரிய மீன்வளமாக கருதப்படுகிறது

இந்தியாவின் மிகப் பெரிய மாங்குரோவ் காடுகள் -  சுந்தரவனம் பற்றிய சுவார்ஸ்ய தகவல்கள்!
மாம்பழம் : அரசியல் முதல் ஆன்மிகம் வரை - 10 சுவாரஸ்ய தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com