தமிழ்நாடு தொடங்கி லடாக் வரை - இந்தியாவும், அதன் மாறுபட்ட கலாச்சாரமும்

இந்தியாவின் பல்வகை கலாச்சரங்கள் பற்றி தெரிந்துகொள்ள இந்த இடங்களுக்கு நீங்கள் சென்று வரலாம், அதன் பட்டியல் இதோ!
தமிழ்நாடு தொடங்கி லடாக் வரை - இந்தியாவும், அதன் மாறுபட்ட கலாச்சாரமும்
தமிழ்நாடு தொடங்கி லடாக் வரை - இந்தியாவும், அதன் மாறுபட்ட கலாச்சாரமும்Twitter

பல்வேறு கலாச்சாரங்களை, வெவ்வேறு மதத்தினரை, பல பாரம்பரியங்களை கொண்டது இந்தியா. இங்குள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும், நகரத்திற்கும், அங்கு பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கும் ஒரு கதை இருக்கிறது.

தன் பன்முகத்தன்மைக்காக பெயர்பெற்றது இந்தியா, இதன் காரணமாகவே பல நாட்டு மக்களையும் தன் வசம் ஈர்த்திருக்கிறது.

இந்தியாவின் பல்வகை கலாச்சரங்கள் பற்றி தெரிந்துகொள்ள இந்த இடங்களுக்கு நீங்கள் சென்று வரலாம், அதன் பட்டியல் இதோ!

தமிழ்நாடு

உலகின் பழமையான மொழிகளில் முதன்மையானது தமிழ். பெரும்பாலும் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் கோவில்கள் அதிகம்.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப்போட்டி தமிழ்நாட்டின் அடையாளம், மற்றும் நடனக் கலையான பரதநாட்டியத்தின் பிறப்பிடம். தெரு கூத்தும் தமிழ்நாட்டின் பிரதான கலை வகைகளில் ஒன்று

அரிசி வகை உணவுகளை தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். இதுவே இந்த பகுதியின் பிரதான உணவு வகையும் ஆகும்.

தமிழ் முக்கிய மொழியாக இருக்கிறது, எனினும் மற்ற மொழி பேசுவோர்களும் இங்கு வாழ்கிறார்கள்

தமிழ்நாடு தொடங்கி லடாக் வரை - இந்தியாவும், அதன் மாறுபட்ட கலாச்சாரமும்
இந்தியாவில் மொத்தம் எத்தனை வகை ஓட்டுநர் உரிமங்கள் உள்ளன? எப்படி பெறலாம்?

கேரளா

கேரளாவில் பல்வேறு பிரபலமான சுற்றுலா தலங்கள் உள்ளன. மலையாளம் கேரளாவின் பிரதான மொழி.

இங்கு தய்யம், பூரக்காளி, கதகளி போன்ற நடன வகைகள் பிரபலம். விஷு, ஓணம் போன்ற பண்டிகைகள் கேரளாவில் முக்கியமாக கொண்டாடப்படுகிறது.

இங்கு அமைந்துள்ள பத்னாப சுவாமி திருக்கோவில், குருவாயூர் ஃபேமஸ்

சத்தீஸ்கர்

அழகிய நீரூற்றுகளும், அடர் வனங்களையும் கடந்தது சத்தீஸ்கர். இங்கு சுமார் 42 வகை பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தசரா பண்டிகை கொண்டாட்டங்கள் இங்கு பிரபலம். இந்து சமயத்தை தவிர, இங்கு இஸ்லாம் மற்றும் பௌத்தம் பின்பற்றப்படுகிறது.

இங்கு சத்தீஸ்கரி மொழி பேசப்படுகிறது, பந்த்வாணி எனும் நாடக நடனக் கலை இங்கு பிரபலம்

தமிழ்நாடு தொடங்கி லடாக் வரை - இந்தியாவும், அதன் மாறுபட்ட கலாச்சாரமும்
இந்தியா : இலங்கை, பாகிஸ்தானை விட மகிழ்ச்சியற்ற நாடு! - மகிழ்ச்சி எப்படி அளவிடப்படுகிறது?

அசாம்

இங்கு மங்கொலியா, பர்மா, ஆரிய வம்சத்தை சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். தவிர சில பழங்குடி மக்களும் இங்கு வசிப்பதால் பல்வேறு பாரம்பரியங்களை கலாச்சாரங்களை உள்ளடக்கியது அசாம்.

இங்கு அமைந்திருக்கும் கமக்கியா கோவில், மாந்திரீக பணிகளுக்கு பெயர்பெற்றது. அரிசி உணவுடன் மீன் மற்றும் குறிப்பிட்ட காய்கறிகள் இங்கு பரவலாக உண்ணப்படுகிறது, அசாமீஸ் மொழி பேசுகிறார்கள்

அருணாச்சல பிரதேசம்

இங்கு அப்தானி பழங்குடியை சேர்ந்த மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இங்கு 50க்கும் மேற்பட்ட வட்டார மொழிகள் பேசப்படுகிறது. இங்கு கைவினை பொருட்கள் செய்யும் கலைஞர்கள் அதிகம்.

இங்கு அசைவ உணவுகளும், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி உள்ளிட்டவை அதிகம் சாப்பிடும் உணவாக இருக்கிறது

பௌத்த மதத்தை சார்ந்த இரண்டு வகை மக்கள் இங்கு வாழ்கின்றனர்

தமிழ்நாடு தொடங்கி லடாக் வரை - இந்தியாவும், அதன் மாறுபட்ட கலாச்சாரமும்
அருணாச்சல பிரதேசம் இனி தெற்கு திபெத்? 11 இடங்களின் பெயரை மாற்றிய சீனா - என்ன நடக்கிறது?

லடாக்

மலைப்பிரதேசமான இங்கு பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வாழ்கின்றனர். நூற்றாண்டுகள் பழமையான பௌத்த மடாலயங்களும் இங்கு அதிகம்.

மைசூர்

கர்நாடகாவின் கல்ச்சுரல் கேபிட்டல் மைசூரு. வாடையார் வம்சத்தவரின் தலை நகராக, விஜயநகரத்தின் மத்தியப்புள்ளியாக இருந்தது இந்த இடம்.

இவர்கள் கட்டிடக்கலை, ஓவியக்கலை, கவிதைகள் உள்ளிட்டவைக்கு பிரபலம்

தமிழ்நாடு தொடங்கி லடாக் வரை - இந்தியாவும், அதன் மாறுபட்ட கலாச்சாரமும்
Travel: இந்தியாவை பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com