
வளர்ந்து வரும் நவீன உலகில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டது. மனிதர்கள் செய்யும் வேலைகளுக்கு நிகராக அல்லது அவர்களுக்குப் பதிலாக டெக்னாலஜி வந்துவிட்டது.
டெக்னாலஜி வளர்ச்சி மூலம் வியாபாரமும் வளர்ந்து வருகிறது. தற்போது சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி பயனர்கள் இன்ஃப்ளூயன்சர்களாக மாறி வருகின்றனர்.
சோசியல் மீடியாவில் அதிக ஃபாலோவர்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமில்லாமல், மற்ற பயனர்களும் இன்ஃப்ளூயன்சராக மாறி வருகின்றனர்.
ஃபேஷன், பயணம், தொழில்நுட்பம், கலை மற்றும் இசை என எல்லாவற்றுக்குமே இன்ஃப்ளூயன்சர்கள் இருக்கின்றனர். அவர்களை எதோ ஒரு ரீல்ஸ் மூலம் ஈர்க்கபட்டு பின் தொடர்கிறோம்.
இன்ஃப்ளூயன்சர் என்பது ஒரு மிகப் பெரிய தொழிலாக மாறிவிட்டது. இது தளர்வடையை வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பிடித்திருக்கிறது இந்த இன்ஃப்ளூயன்சர் மோகம்.
ஆடைகள் மற்றும் அணிகலன்களை விளம்பரப்படுத்துவது முதல் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவது வரை, பலவகையான இன்ஃப்ளூயன்சர்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றனர். இதன் மூலம் பணமும் சம்பாதித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் சம்பாதிப்பதற்கான முதல் படியே உங்கள் பின்தொடர்பவர்களை அதிகரிப்பது தான்.
உங்களின் புரொஃபைலை சரியான விவரங்களுடன் உருவாக்கிகொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு ட்ராவலர் என்று பயோவில் குறிப்பிட்டு விட்டு சமையல் குறிப்புகள் எல்லாம் அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடக்கூடாது. Fake id போல என்று skip செய்துவிடுவார்கள்.
பாலோவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது மட்டுமே பிராண்டுகள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த உங்களை நாடும்.
இன்ஸ்டாகிராமில் விளையாட்டு, அழகு, ஃபேஷன், ஆன்மீகம் என பல கேட்டகரியில் கண்டெட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். நீங்கள் இதில் எந்த கேட்டகரியில் பதிவிட விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.
உங்கள் பக்கத்தின் உள்ளடக்கத்திற்கு ஏற்ப பிராண்டைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த பிராண்ட் உங்கள் இடுகைகளுக்கு பணம் செலுத்தும்.
நீங்கள் ஒரு கண்டெட்டை வெளியிடுகிறீர்கள் என்றால் அதன் புகைப்படம் அல்லது வீடியோ கிளாரிட்டி நன்றாக இருக்க வேண்டும், அப்போது தான் பாலோவர்கள் உங்கள் கண்டெட்டை முழுமையாக பார்ப்பார்கள், அதன் மூலம் வியூஸ் வரும், பின்னர் விளம்பரம் செய்வதற்கான ஆஃபர்ஸ் வரும்.
சரியான ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துங்கள், இதன் மூலம் அதிகமானோர் உங்கள் பதிவை பார்க்க முடியும். முக்கியமாக டிரெண்டிங்கை பாலோ செய்யுங்கள்.
பொதுவாக எந்த நேரத்தில் மக்கள் அதிகம் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவார்கள் என அனலைஸ் செய்து கண்டெட்டை பதிவிடலாம். அதிக ரீச் கிடைக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust