வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தொல்பொருட்கள் எப்படி மீட்கப்படுகின்றன? - Explained

ஐ.நாவின் யுனெஸ்கோ 1989 முதல் இந்தியாவிலிருந்து 50,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கடத்தப்பட்டதாக கூறியிருக்கிறது. இந்த பொருட்கள் சர்வதேச சந்தைகளிலும் வேறு நாட்டு அருங்காட்சியகங்களிலும் இருந்து மீட்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் இருக்கும் தொல்பொருட்கள் எப்படி மீட்கப்படுகின்றன? - Explained
வெளிநாடுகளில் இருக்கும் தொல்பொருட்கள் எப்படி மீட்கப்படுகின்றன? - Explained Twitter

இந்தியாவிலிருந்து காணாமல் போன பழங்கால கலைப்பொருட்களை இந்திய தொல்லியல் துறையினர் மீட்டு வரும் செய்திகளைப் பார்க்கிறோம்.

நம் நாட்டின் விடுதலை முதல் தொல்லியல் துறை சார்பாக பாதுகாக்கப்படும் 3696 நினைவுச் சின்னங்களில் 486 காணாமல் போயிருக்கின்றன. மலைப்பாக இருக்கிறதல்லவா?

தொல்லியல் துறையினர் 2014ம் ஆண்டு முதல் இன்று வரை 292 தொல் பொருட்களை மீட்டு இந்தியாவுக்கு எடுத்துவந்துள்ளனர்.

இந்த பொருட்கள் சர்வதேச சந்தைகளிலும் வேறு நாட்டு அருங்காட்சியகங்களிலும் கிடைக்கின்றன. இன்னும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான தொல் பொருட்கள் தொல்லியல் துறையின் தொலைந்த பொருட்கள் பட்டியலில் உள்ளன.

மொத்தமாக காணாமல் போன பொருட்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் மிகக் குறைந்த அளவே என கூறியிருக்கிறது நாடாளுமன்ற குழு.

மேலும் ஐ.நாவின் யுனெஸ்கோ 1989 முதல் இந்தியாவிலிருந்து 50,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கடத்தப்பட்டதாக கூறியிருக்கிறது.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இல்லாதப் பல தொல்பொருட்களும், நினைவுச் சின்னங்களும் காணாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொல்லியல் பொருட்கள் என்பது என்ன?

குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் பழமையான பொருட்களை தொல்லியல் பொருட்கள் என்கின்றனர். 1972 இந்திய கலைப் பொக்கிஷங்கள் சட்டப்படி குறைந்தபட்சம் 72 ஆண்டுகள் பழமையான பொருட்கள் இந்த பட்டியலில் வைக்கப்படுகின்றன.

இவை அந்த காலக்கட்டத்தின் அறிவியல், கலை, இலக்கியம், பழக்கவழக்கங்கள், ஒழுக்கங்கள் மற்றும் அரசியலை பிரதிபலிப்பவையாக இருக்க வேண்டும்.

தொல்பொருட்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள்

நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பொருட்களையும் நினைவுச் சின்னங்களையும் பாதுகாக்க இந்திய அரசியலமைப்பில் சட்டங்கள் உள்ளன.

1947ம் ஆண்டு உரிய அனுமதி இல்லாமல் இந்தியாவிலிருந்து பழங்கால பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என சட்டம் இயற்றப்பட்டது.

1958ம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியில் ஆய்வில் கிடைத்த பொருட்களைப் அழிவில் இருந்து பாதுகாக்க சட்டம் இயற்றப்பட்டது.

1970ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு தொல்பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பரிமாற்றம் நடைபெறுவதை தடுக்க உறுதியளித்தது.

வெளிநாடுகளில் இருக்கும் தொல்பொருட்கள் எப்படி மீட்கப்படுகின்றன? - Explained
Mir Jafar: ஆங்கிலேயர்களிடம் இந்தியாவை விற்ற நபர் - துரோகத்தின் வரலாறு

எப்படி மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றன?

இந்தியாவுக்கு தொல்பொருட்களை மீண்டும் எடுத்துவருவது மிகவும் சிக்கலான காரியமாகும்.

எந்த காலத்தில் இந்தியாவிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டது என்பதைப் பொருத்து எடுத்துவரும் வழிகளும் மாறுபடுகின்றன.

வெளிநாடுகளில் இருக்கும் தொல்பொருட்கள் எப்படி மீட்கப்படுகின்றன? - Explained
கீழடி அவிழும் மர்மம்: குதிரை எலும்புகள் ஏன் கவனிக்க வேண்டியவை? - சவால்விடும் மதுரை

இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, இந்தியாவின் சுதந்திரத்துக்கு முன்னரே கடத்தப்பட்ட பொருட்கள் சர்வதேச அரங்கில் கோரிக்கை வைக்கப்பட்டு எடுத்துவரப்படும்.

சுதந்திரத்துக்கு பின்னர் கடத்தப்பட்ட பொருட்கள் என்றால் உரிமைச் சான்று மற்றும் யுனெஸ்கோவின் உதவியுடன் இருநாட்டுத் தரப்பில் பிரச்னைகளை எழுப்பி மீட்கலாம்.

திரும்பப் பெறுதலில் 3 நடவடிக்கைகள் அடங்கும்,

உரிமையை வெளிப்படுத்துதல் establishing ownership

உரிமைக்கான சான்றுகளை சமர்பித்தல்

சர்வதேச அமைப்புகளுடன் செயல்படுதல்

இவற்றின் மூலம் நம் நாட்டுக்கு சொந்தமான கலைப்பொருட்களையும் பாரம்பரிய அடையாளங்களையும் மற்ற நாடுகளில் இருந்து மீட்கலாம்.

வெளிநாடுகளில் இருக்கும் தொல்பொருட்கள் எப்படி மீட்கப்படுகின்றன? - Explained
வளைகுடா நாடுகள் : நடத்தப்பட்ட அகழாய்வு, அவிழ்ந்த முடிச்சுகள் - சுவாரஸ்ய பயணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com