குஜராத்: புனரமைத்து 4 நாட்களில் தொங்கு பாலம் இடிந்து விபத்து- அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.
Gujarat bridge collapse
Gujarat bridge collapseTwitter

குஜராத் மோர்பி பகுதியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தீவிர மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காந்திநகரில் இருந்து சுமார் 240 கிமீ தொலைவில் உள்ள குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் மீது நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் நேற்று மாலை இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1879ல் திறக்கப்பட்ட இந்த பாலம் 1.25 மீட்டர் அகலமும் 233 மீட்டர் நீளமும் கொண்டது. இந்த 150 ஆண்டு பழமையான பாலம் சீரமைக்கப்படுவதற்காக கடந்த சில மாதங்களாக மக்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த 7 மாதங்களாக சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த பாலம் நான்கு நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் திறக்கப்பட்டது.

சீரமைத்து 4 நாட்களே ஆன தொங்கு பாலம் நேற்று மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

அந்த நேரத்தில் 400 பேர் கட்டிடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் அதுல் கர்வால், மூன்று குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விபத்தில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.

Gujarat bridge collapse
கிரிமியா பாலம் தாக்குதல் : ஓங்குகிறதா உக்ரைனின் கரங்கள்? விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com