”இனிமே இப்படி செய்யக் கூடாது “ - social media influencers-களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

குறிப்பிடப்பட்ட விளம்பரம் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள விளம்பரமா? ஸ்பான்சர் செய்யப்பட்டதா? பணம் வாங்கி அந்த பொருள் விளம்பரப்படுத்தப்படுகிறதா? என்பதை தெளிவாக எழுத்து வடிவில் குறிப்பிட வேண்டும் என்று கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.
Govt releases guidelines for celebrities, social media influencers
Govt releases guidelines for celebrities, social media influencersTwitter

எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தாமல் அது குறித்து விசாரிக்காமல் விளம்பரம் செய்யக்கூடாது என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யும் பிரபலங்களுக்கு, மத்திய நுகர்வோர் நலன் அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் பணம் வாங்கிக் கொண்டு பிரபலங்கள் பலர் பொருள்களை விளம்பரம் செய்து வருகின்றனர்.

தற்போது இது பெரிய வியாபாரமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு விளைவுகளுக்கு உள்ளாகின்றனர்.

Social Media
Social MediaTwitter

இந்த நிலையில் மத்திய நுகர்வோர் நலன் அமைச்சகம் கட்டுப்பாடு வைத்துள்ளது.

அதில், ஒரு பொருளையும் பயன்படுத்தாமல் அது குறித்து விசாரிக்காமல் விளம்பரம் செய்யக்கூடாது.

எந்த ஒரு விளம்பரமும் மக்களை தவறாக திசை திருப்பும் வகையில் இருக்கக் கூடாது என்பதை அந்த விளம்பரத்தில் நடிக்கும் பிரபலங்களும் சமூக வலைத்தள பிரபலங்களும் உறுதி செய்ய வேண்டும்

Govt releases guidelines for celebrities, social media influencers
"பைக் இன்ஸ்ட்ரக்டர் தேவை" வைரலாகும் இளைஞரின் பத்திரிகை விளம்பரம்

குறிப்பிடப்பட்ட விளம்பரம் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள விளம்பரமா? ஸ்பான்சர் செய்யப்பட்டதா? பணம் வாங்கிகொண்டு அந்த பொருள் விளம்பரப்படுத்தப்படுகிறதா? என்பதை தெளிவாக எழுத்து வடிவில் குறிப்பிட வேண்டும் என்று கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அது தொடர்பான சட்டங்களுக்கு உட்பட்டு மக்களை ஏமாற்றாத வகையில் விளம்பரங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்படுவதாக நுகர்வோர் நலன் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Govt releases guidelines for celebrities, social media influencers
லேயர் ஷாட் விவகாரம் : பாலியல் குற்றத்தை ஊக்குவித்த விளம்பரம் - மன்னிப்பு கேட்ட நிறுவனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com