இந்தியாவின் முதல் குடியரசு தினம் எங்கு கொண்டாடப்பட்டது? - பாரம்பரியங்கள் தோன்றியது எப்படி?

இந்தியாவின் முதல் குடியரசு தினத்தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் சுகர்னோ கலந்துகொண்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிக மக்கள் பங்கேற்பதற்காக அரங்குகள் மாற்றப்பட்டன.
இந்தியாவின் முதல் குடியரசு தினம் எங்கு கொண்டாடப்பட்டது? - பாரம்பரியங்கள் தோன்றியது எப்படி?
இந்தியாவின் முதல் குடியரசு தினம் எங்கு கொண்டாடப்பட்டது? - பாரம்பரியங்கள் தோன்றியது எப்படி?Twitter

சுதந்திர இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு 74 ஆண்டுகள் கடந்துள்ளதைத் தொடர்ந்து இன்று டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தின விழா நடைபெறுகிறது.

73 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்தியாவின் முதல் குடியரசு தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விழா எங்கே நடந்திருக்கும் எனக் கேட்டால் பலரும் ராஜ்பாத் தான் என்பார்கள்.

ஆனால் அதுதான் இல்லை. இந்தியாவின் முதல் குடியரசு தின நிகழ்ச்சி டெல்லியில் உள்ள இர்வின் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது அந்த மைதானத்தில் கோட்டை சுவர்கள் கூட கிடையாது.

1955ம் ஆண்டு தான் முதன்முதலாக ராஜ்பாத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் கிங்க்ஸ்வே கேம்ப், செங்கோட்டை மற்றும் ராம்லீலா மைதான் போன்ற இடங்களில் நடைபெற்றதாக பிபிசி தளம் குறிப்பிடுகிறது.

1955 முதல் தொன்றுதொட்டு குடியரசு தினம் நடைபெற்றுவரும் ராஜ்பாத்தில் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு விழாக்கள் நடக்கும்.

குடியரசு தலைவர் மாளிகை அமைந்திருக்கும் ரெய்ஸ்னா ஹில் பகுதியில் இருந்து இந்தியா கேட் வழியாக செங்கோட்டை வரை அணிவகுப்பு நடக்கும்.

1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரி, காலை 10:18 மணிக்கு இந்தியாவை மக்களாட்சி குடியரசு நாடாக அறிவித்தார்.

அப்போதிலிருந்து 6 நிமிடங்கள் கழித்து இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார்.

இந்தியாவின் முதல் குடியரசு தினத்தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் சுகர்னோ கலந்துகொண்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிக மக்கள் பங்கேற்பதற்காக அரங்குகள் மாற்றப்பட்டன.

1951ம் ஆண்டு குடியரசு தின விழாவில் அணிவகுப்புடன் வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்தியாவின் முதல் குடியரசு தினம் எங்கு கொண்டாடப்பட்டது? - பாரம்பரியங்கள் தோன்றியது எப்படி?
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு : நாம் அறிய வேண்டிய 10 தகவல்கள்

1952ல் இந்திய ராணுவத்தின் பீட்டிங்க் ரிட்ரீட் விழா நடைபெற்றது. அத்துடன் முதன் முதலாக ராணுவ இசைக்குழு மகாத்மா காந்தியின் விருப்பப் பாடலான 'Abide with me' மெட்டு இசைக்கப்பட்டது.

1953ம் ஆண்டு நாட்டுப்புற நடனம் மற்றும் வானவேடிக்கைகள் சேர்க்கப்பட்டது. 1955ம் ஆண்டு முஷாயிரா பாரம்பரியம் (புலவர்களால் பாடல் இசைக்கும் நிகழ்வு) தொடங்கியது.

அடுத்த ஆண்டில் 14 மொழிகளின் கவி சம்மேளனம் முதல்முறையாக வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அதே ஆண்டில் 5 அலங்கரிக்கப்பட்ட யானைகள் குடியரசு தின அணிவகுப்பில் சேர்க்கப்பட்டன.

இந்தியாவின் முதல் குடியரசு தினம் எங்கு கொண்டாடப்பட்டது? - பாரம்பரியங்கள் தோன்றியது எப்படி?
இந்திய குடியரசு தலைவர் : எவ்வளவு சம்பளம் தெரியுமா? அவருக்கான மற்ற சலுகைகள் என்ன?

1958ம் ஆண்டு தலைநகரில் உள்ள அரசுக் கட்டடங்களில் மின் விளக்குகள் ஏற்றப்பட்டன. 1956 முதல் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் பார்வையாளர்கள் மீது மலர் தூவப்பட்டது.

1962ம் ஆண்டு குடியரசு தின விழாவைக் காண டிக்கெட் விற்பனை செய்யும் வழக்கம் வந்தது.

1973ம் ஆண்டு இந்தியாகேட்டில் அமைந்துள்ள அமர் ஜாவான் ஜோதியில் இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இப்படி படிப்படியாக உருவான பாரம்பரியங்கள் இன்றுவரை பின்பற்றப்படுகின்றன.

இந்தியாவின் முதல் குடியரசு தினம் எங்கு கொண்டாடப்பட்டது? - பாரம்பரியங்கள் தோன்றியது எப்படி?
குடியரசு தினம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 15 தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com