ஏக்னாத் ஷிண்டே: சரியும் வெங்காய விலை, வலுக்கும் போராட்டம் - என்ன சொல்கிறார் முதல்வர்?

நான்கு நாட்களுக்கு முன் நாசிக்கில் தொடங்கிய விவசாயிகளின் நீண்ட பேரணி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று தானேவை சென்றடைந்தது. விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்று அதற்கான தீர்வை காணவில்லை எனில், அதுவரை இப்பேரணி தொடரும் என சிபிஎம் தலைவர் ஜீவா பாண்டு கவிட் தெரிவித்திருக்கிறார்.
ஏக்னாத் ஷிண்டே: சரியும் வெங்காய விலை, வலுக்கும் போராட்டம் - என்ன சொல்கிறார் முதல்வர்?
ஏக்னாத் ஷிண்டே: சரியும் வெங்காய விலை, வலுக்கும் போராட்டம் - என்ன சொல்கிறார் முதல்வர்?ட்விட்டர்

கடந்த சில மாதங்களாகவே வெங்காய விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநில விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பேரணி நடத்தி வருகின்றனர். அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் போனால் போராட்ட குழு மும்பையை சென்றடையவுள்ளதாக தெரிவித்துள்ளது

17 புள்ளிகள் கொண்ட கோரிக்கையை அரசு நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் விவசாய பேரணி கடந்த மார்ச் 13 அன்று நாசிக்கின் தண்டோரி பகுதியிலிருந்து தொடங்கியது. மும்பை வரை செல்லவிருக்கும் விவசாயிகள் கூட்டம், தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றிவிட்டால் போராட்டத்தை கைவிட்டுவிடுவோம் என தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மிகப் பெரிய வெங்காய உற்பத்தி மையங்களில் ஒன்று நாசிக். கடந்த மாதத்திலிருந்தே வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி காணப்பட்டது. விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிர விவசாயிகள், அரசிடம் அதற்கான நடவடிக்கை எடுக்க பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர்

இதனால் விவசாய உற்பத்தி சங்கங்களில் இரண்டு முறை ஏலம் நிறுத்தப்பட்டதாகவும், செழிப்பான அறுவடை காலத்தை கொண்டாடும் ஹோலி பண்டிகையையும் விவசாயிகள் கொண்டாடவில்லை எனவும் வெங்காய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாரத் திகோலே தெரிவித்தார்.

விவசாயிகள் தங்களின் நிலையை எடுத்துரைக்க ஹோலி அன்று வெங்காயங்களை எரித்தது பரபரப்பை ஏற்படுத்தினர்.

ஏக்னாத் ஷிண்டே: சரியும் வெங்காய விலை, வலுக்கும் போராட்டம் - என்ன சொல்கிறார் முதல்வர்?
சிவசேனா ஏக்நாத் ஷிண்டே - பட்னாவிஸ்: கடந்த கால பகையும், நட்பும் - விரிவான தகவல்

இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன் நாசிக்கில் தொடங்கிய விவசாயிகளின் நீண்ட பேரணி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று தானேவை சென்றடைந்தது. விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்று அதற்கான தீர்வை காணவில்லை எனில், அதுவரை இப்பேரணி தொடரும் என சிபிஎம் தலைவர் ஜீவா பாண்டு கவிட் தெரிவித்திருக்கிறார்

ஜீவா பாண்டு மேலும், ”வரும் ஞாயிறு அல்லது திங்களன்று அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். நடவடிக்கை எடுக்கப்பட்டால் போராட்டத்தை அப்போதே முடித்துக்கொள்வோம். இல்லாத பட்சத்தில், பேரணி மும்பையை சென்றடையும். விவசாயிகளின் கூட்டம் மும்பையை அடைந்தால் நிச்சயமாக பிரச்னைகள் ஏற்படும். இது அரசுக்கும் தெரியும்.” எனக் கூறினார்.

இப்படியிருக்க பருவமற்ற மழையின் காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆராய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் பேசியபோது மகாராஷ்டிரா முதல்வர் ஏக்னாத் ஷிண்டே தெரிவித்திருந்தார்

”இது விவசாயிகளுக்கான அரசு. இதற்கு முன்னரும் விவசாயிகளின் நலன் கருதி சட்ட திட்டங்களை விடுத்து அவர்களுக்கான தேவையை இந்த அரசு நிறைவேற்றியிருக்கிறது. இப்போதும் அதை செய்து கொண்டுதான் இருக்கிறோம். மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு எப்போதும் நாங்கள் உறுதுணையாக நின்றிருக்கிறோம், நிற்போம்” என்றார் முதல்வர் ஏக்னாத் ஷிண்டே.

விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன?

  • தினமும் 12 மணி நேர தடையற்ற மின்சாரம்

  • விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களின் தள்ளுபடி

  • வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.600 உதவி வழங்கவேண்டும்

ஏக்னாத் ஷிண்டே: சரியும் வெங்காய விலை, வலுக்கும் போராட்டம் - என்ன சொல்கிறார் முதல்வர்?
உக்ரைன் போர் முதல் ஹிஜாப் போராட்டம் வரை: 2022ன் 5 முக்கிய நிகழ்வுகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com