
நம் ஊரில் ஐபிஎல் போட்டிகளைச் சுற்றி நடக்கும் வியாபாரம் பெரியது. ஆன்லைன் செயலிகளில் வீரர்கள் மீது பந்தையம் கட்டி பலர் பணத்தை இழப்பர். இதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைத்த குஜராத் கும்பல் ஒன்று ரஷ்யாவிலிருந்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை குறிவைத்தது.
அவர்களிடம் இருந்து 3 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்து பணம் சம்பாதித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதற்காக ஐபிஎல் போட்டிகள் நடப்பது போல காட்சிகளை உருவாக்கி ரஷ்ய சூதாட்டக்காரர்களை பணம் கட்ட வைத்துள்ளனர்.
இந்த ஐபிஎல் போட்டிகள் பார்ப்பதற்கு உண்மையில் நடப்பதுப் போல தெரியவேண்டும் என்பதற்காக பல வேலைப்பாடுகளை செய்துள்ளது மோசடி கும்பல்.
ஒரு குக்கிராமத்தில் ஆலசன்(Halogen) லைட்டுகள் அமைத்து ஸ்டேடியத்தை உருவக்கியுள்ளனர்.
இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் விளையாடிவரும் அதே வேலையில், ஜெர்சியை மட்டும் தயாரித்து அந்த கிராமத்தில் உள்ள விவசாய தொழிலாளர்களை 400 ரூபாய் தருவதாக விலைப் பேசி கிரிக்கெட் விளையாட வைத்துள்ளனர்.
பொதுவாக ஐபிஎல் ஹாட்ஸ்டார் அல்லது சோனி போன்ற தளங்களில் ஒளிபரப்பாகும். ஆனால் இந்த போலி ஐபிஎல் உண்மையாக நடப்பது போல தெரிய யூடியூபில் ஸ்ட்ரீம் செய்துள்ளனர்.
ரஷ்ய சூதாட்டக் காரர்கள் டெலிகிராம் மூலம் பந்தையம் கட்டியுள்ளனர். அவர்களுக்கு எதிராக இந்தியர்களும் பந்தையம் கட்ட இந்தியர்களுக்குத் தேவையான ரன்கள் வருமாறு விளையாட்டை அமைத்துள்ளனர். இதற்காக வாக்கிடாக்கிகளை பயன்படுத்தியுள்ளனர்.
வாக்கிடாக்கி மூலம் களத்தில் இருப்பவர்களுக்கு சிக்னல் கொடுத்து பந்து வீச்சாளரிடம் மெதுவாக அல்லது வேகமாக பந்து வீசச் சொல்லி தேவையன ரன்கள் அல்லது விக்கெட் கிடைக்கும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
Indian Premier Cricket League என்று கூறப்பட்ட இந்த போட்டிகளை யூடியூபில் ஒளிபரப்ப 5 ஹெச்டி கேமிராக்களை பயன்படுத்தியுள்ளனர். இணையத்தில் கூட்டம் கைத்தட்டும், ஆர்பரிக்கும் சத்தங்களைத் தரவிறக்கி பயன்படுத்தியுள்ளனர்.
உண்மையான ஐபிஎல் போல இருக்க ஹர்ஷா போக்லே குரலில் கமன்டரி கொடுக்க ஒருவரைத் தயார் செய்துள்ளனர்.
இந்த மோசடித் தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஷோயிப் தாவ்தா என்பவர் தான் இதன் மூளையாக செயல்பட்டது என்றும் குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து அறிந்த ஹர்ஷா போக்லே தன்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றுக் கூறியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust