மும்பை : லோக்கல் ட்ரெயினில் பயணம் செய்யும் தெரு நாய் - நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோ

தரையில் உட்கார்ந்துக்கொண்ட நாய், நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வெளியில் வேடிக்கைப்பார்த்தபடி வந்துகொண்டிருகிறது. வீடியோவின் இந்த பகுதி பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது.
மும்பை : லோக்கல் ட்ரெயினில் பயணம் செய்யும் தெரு நாய் - நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோ
மும்பை : லோக்கல் ட்ரெயினில் பயணம் செய்யும் தெரு நாய் - நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோTwitter

மும்பை இந்தியாவின் பரபரப்பான நகரங்களில் ஒன்று.  நெருக்கடி நிறைந்ததும் கூட. மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர பல வகை போக்குவரத்துகளைப் பயன்படுத்துகின்றனர். 

அதில் முக்கியமானது லோக்கல் ட்ரெயின்கள். நகரில் அனைத்து தொழில்களும் சரியாக இயங்க லோக்கல் ட்ரெயின்கள் மிக மிக அவசியம். ஒரு நாள் ரயில்கள் இல்லை என்றால் மொத்த நகரமும் முடங்கிவிடக் கூடும். 

இந்த முக்கியமான, பிரபலமான ரயிலை ஆயிரக்கணக்கான மக்களுடன் ஒரு நாயும் பயன்படுத்தி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? இணையத்தில் வைரலாகி வரும் அந்த நெகிழ்ச்சிகரமான வீடியோ குறித்துப் பார்க்கலாம்.

India Cultural Hub என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதில் ஒரு தெரு நாய் தானாக வந்து ரயிலில் ஏறிக்கொள்கிறது. 

போரிவாலியிலிருந்து அந்தேரி செல்லும் ரயிலின் தரையில் அமைதியாக அந்த நாய் உட்கார்ந்துக்கொள்கிறது. அதனால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை.

தரையில் உட்கார்ந்துக்கொண்ட நாய், நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வெளியில் வேடிக்கைப்பார்த்தபடி வந்துகொண்டிருகிறது. வீடியோவின் இந்த பகுதி பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது. சுற்றியிருக்கும் சிலர் அந்த நாயைப் பார்த்து சிரிக்கின்றனர். 

“மும்பை லோக்கல் ட்ரெயினின் ரெகுலர் பயணியைப் பாருங்கள்” என அந்த வீடியோவில் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் வந்திருக்கின்றன.

மும்பை : லோக்கல் ட்ரெயினில் பயணம் செய்யும் தெரு நாய் - நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோ
பழைய உரிமையாளரை தேடி 64 கிலோ மீட்டர் நடந்தே சென்ற நாய் - எங்கே?

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் வழங்கிய நெகிழ்ச்சிகரமான கமண்ட்கள் இதோ, 

“இந்த உலகில் நாம் ஒரு பகுதி மட்டும் தான்!”

“நான் இந்த போரிவாலி ட்ரெயினின் நேரத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த சின்ன சந்தோஷத்தை சந்திப்பதற்காக” 

“அவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவதையும், இலவச ரயிலில் பயணம் செய்வதையும், நிம்மதியாக இணைந்து வாழ்வதையும் பார்ப்பது பிடித்திருக்கிறது”

“நான் இவரைப் பார்த்திருக்கிறேன். இரவில் மீண்டும் அந்தேரி திரும்பும். ஒரு புத்திசாலி குழந்தை”

மும்பை : லோக்கல் ட்ரெயினில் பயணம் செய்யும் தெரு நாய் - நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோ
இங்கிலாந்தில் ஒரு 'அரசியல் பூனை' - Larry The Cat பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com